விளையாட்டாக ஆரம்பித்ததுதான். இத்தனை தீவிரமாக வலையுலகம் இதனைப் பரப்பும் என்று நினைக்கவில்லை. விபரீதம் ஏதும் விளையாதிருப்பதற்காக இந்தக் குறிப்பை இங்கே எழுதிவைக்கிறேன். சில காலம் முன்னர் பத்ரி தன் வலைப்பதிவில் மிகவும் உக்கிரமாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நீள நீளமான கட்டுரைகளை எதற்கோ நேர்ந்துகொண்டாற்போல தினமொன்றாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். சற்றும் தொடர்பில்லாமல் இடையிடையே உலக அரசியல்...
F5 உங்கள் சாய்ஸ்
பன்னெடுங்காலமாக சுப்புடுவின் தலைப்புப்பட்டை என்னை வசீகரித்து வந்தது. இந்த மனிதர் என்ன செய்திருக்கிறார் என்று மிகவும் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பக்கத்தைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்போதும் ஒவ்வொரு தலைப்புப்படம் வரும். புதிதாகக் கிறுக்கும். அழகு. ஆனால் எப்போதும்போல் எனது அரிச்சுவடித் தொழில்நுட்ப அறிவு எதையும் உணரவிடாமல் அடித்து வந்தது. கணேஷிடம் சொல்லலாம்தான். எழுதுவதைத் தவிர மற்ற...
குளத்துக்குள் குரங்கு பெடல்
கிபி இரண்டாயிரமாவது ஆண்டு நான் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கிய நாளாக, திரைக்கதை எழுத ஒரு நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினேன். யாராவது சினிமாவும் கம்ப்யூட்டரும் தெரிந்த நண்பர்கள் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவருக்கு அந்த வினாடியே சிக்ஸ் ப்ளஸ் ஒன் பாயிண்ட் ஃபைவ் பிடித்துவிடும் அபாயம் அவசியம் இருந்தது. கமலஹாசன் மூவி மேஜிக் உபயோகிக்கிறாராமே, மணி ரத்னம் வேறு ஏதோ ஒன்று அதே மாதிரி...
மொட்டைமாடியில் விக்கிபீடியா
இன்று [சனிக்கிழமை 13.6.2009] மாலை 6 மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். சாத்தியமுள்ள அனைத்து சென்னைவாழ் நண்பர்களையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். உபயோகமான விஷயம். இது பற்றி ரவிசங்கர் அனுப்பியிருந்த குறிப்பு: இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன...
முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்
* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும். * சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும். * இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற...
ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்
ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன். பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன். பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை...
Technically Yours
சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன். பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே...
எனக்கு இங்கே வயது எட்டு
சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...