Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 5 of 14 | Pa Raghavan
Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2009

குளத்துக்குள் குரங்கு பெடல்

கிபி இரண்டாயிரமாவது ஆண்டு நான் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கிய நாளாக, திரைக்கதை எழுத ஒரு நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினேன். யாராவது சினிமாவும் கம்ப்யூட்டரும் தெரிந்த நண்பர்கள் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவருக்கு அந்த வினாடியே சிக்ஸ் ப்ளஸ் ஒன் பாயிண்ட் ஃபைவ் பிடித்துவிடும் அபாயம் அவசியம் இருந்தது. கமலஹாசன் மூவி மேஜிக் உபயோகிக்கிறாராமே, மணி ரத்னம் வேறு ஏதோ ஒன்று அதே மாதிரி...

கனகவேல் காக்க

கனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன்...

‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’

சகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது. இந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி...

ஆஹா என்று சொல்லுங்கள்!

நாளை மறுநாள் 26.7.2009 தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை 91.9 ஆஹா பண்பலை ரேடியோவில் [Aahaa FM-91.9] கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இது சினிமா நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு வாரமும் உருப்படியான ஒரு விஷயம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இதில் இடம்பெறும். கிழக்கு எழுத்தாளர்கள் பலர் பங்குபெறவிருக்கிறார்கள். முதல்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

‘என் ரூமுக்குப் போயி வெயிட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்று ஹெட் மாஸ்டர் சொன்னார். இதென்னடா ரோதனை என்று பத்மநாபனுக்கு அடிவயிற்றில் ஒரு பூச்சி பறந்தது. இன்றைக்கு ரிசல்ட். நாளைக்குப் பள்ளி திறக்கிறது. ரிசல்ட் பார்த்தாகிவிட்டது. அது ஒரு சம்பிரதாயம். கும்பலில் முட்டிமோதி போர்டில் ஒட்டியிருக்கும் பேப்பரில் தன் நம்பரைத் தேடிப் பிடிக்கிற சடங்கு. பிரச்னை ஒன்றுமில்லை. பாஸாகிவிட்டிருந்தான்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 14

நாளையோடு விடுமுறை முடிகிறது. ஓடியது தெரியாமல் ஓடி முடிந்துவிட்ட ஒரு மாதம். முப்பது நாள்களில் தூங்கிய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் மனத்துக்குள் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தது தவிர வேறென்ன செய்தோம் என்று பத்மநாபன் யோசித்துப் பார்த்தான். குறிப்பாக ஏதும் நினைவுக்கு வரவில்லை. இடையில் ராஜலட்சுமி திரையரங்கில் ஒன்றிரண்டு படங்கள் பார்த்தது ஒரு முக்கிய சம்பவமாக அவனுக்கே தோன்றவில்லை. நண்பர்கள்...

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 13

விடுமுறை அறிவித்துவிட்டார்கள். சரியாக ஒரு மாதம். பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற மாணவ மாணவிகளுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, அக்கறை குறித்தெல்லாம் ஹெட் மாஸ்டர் சாங்கோபாங்கமாக விவரித்துவிட்டு, லீவு நாள்களை வீணாக்காமல் படிக்கும்படி கெட்ட அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார். பத்மநாபனுக்குக் கடந்த ஒருமாத கால படிப்பு அனுபவமே அறுபது வயது வரை தாங்கும்போலிருந்தது. என்ன ஆகிவிட்டது தனக்கு? பைத்தியம் பிடித்த...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter