ArchiveDecember 2009

இன்று வாங்கிய புத்தகங்கள்

இன்றைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியின் நியாயமான முதல் நாள். மழை, டிராஃபிக் ஜாம், பேரணி, அரசியல்வாதிகள் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாத வேலைநாள். மதியம் இரண்டு மணிக்குக் கண்காட்சி தொடங்கியது. பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் முதல் நாளுக்கே உரிய நியாயமான நல்ல கூட்டம். நெரிசலற்ற தினம் என்பதால் இன்றைக்குப் பணி ரீதியில் அல்லாமல் என் சொந்த விருப்பத்துக்காகச் சுற்றுவது என்று முடிவு...

கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!

'நீங்கள் New Horizon Media Private Limited' என்ற பெயரில்தான் பபாசியில் உறுப்பினராகியிருக்கிறீர்கள். எனவே உங்கள் அரங்க முகப்பில் அந்தப் பெயரைத்தான் பலகையில் வைக்க முடியும். கிழக்கு பதிப்பகம் என்று திருத்த முடியாது.’ முந்தைய வருடங்களில் எல்லாம் அப்படித்தானே இருந்தது என்று பிரசன்னா குழுவினர் வாதாடிப் பார்த்து வெறுத்துப் போய்த் திரும்பியிருக்க, [‘முன்ன இருந்திருக்கலாம் சார். இப்ப...

மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்

இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே...

சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன. * ஆஸ்டின் இல்லம் * தீண்டும் இன்பம் * நில்லுங்கள் ராஜாவே * மீண்டும் ஜீனோ * நிறமற்ற வானவில் தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும்  சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம். அவ்வண்ணமே...

ஒரு முக்கிய அறிவிப்பு

//அன்புள்ள பாரா! உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று...

ஒரு தீவிரவாத செயல்திட்டம்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது. அப்பாவுக்கு...

இந்த வருடம் என்ன செய்தேன்?

அளவுக்கதிகமான வேலைகளால் படிப்பு குறைந்துபோன வருடம் இது. ஒவ்வொரு வருடமும் தொழில் தாண்டி, சொந்த விருப்பத்தில் குறைந்தது நூறு புத்தகங்களாவது படித்துவிடுவேன். இந்த வருடம் முடியாமல் போய்விட்டது. எண்ணிப் பார்த்தால் முப்பதுகூடத் தேறவில்லை. அதில் மறக்கமுடியாதவை இரண்டு. ராமச்சந்திர குஹாவின் India after Gandhi மற்றும் பல்லவி ஐயரின் சீனா: விலகும் திரை. [சீனா, ஒரிஜினல் படிக்கவில்லை. மொழிபெயர்ப்புதான்.]...

சிரித்துத் தொலைக்காதே!

இன்றைய தினத்தை இரண்டு விருது அறிவிப்புகள் அலங்கரிக்கின்றன. சாகித்ய அகடமி விருது கவிஞர் புவியரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதுகள் ச.வே. சுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்ப பாரதி, ஆறு. அழகப்பன் ஆகியோருக்கு. எந்த விருது அறிவிப்பும் எல்லோருக்கும் திருப்தியளிக்காதுதான். ஆனால் சமீப காலத்தில் இது விருது பெறுவோரைத் தவிர வேறு யாருக்கும் திருப்தியளிக்காத நிலையை...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me