ArchiveJanuary 2015

மின் நூலாக ரெண்டு

குங்குமம் வார இதழில் தொடராக வெளி வந்த இக்கதையை இப்போது FreeTamileBooks.com மூலம் இலவச மின் நூலாக வெளியிடுகிறேன். கதை படிக்க நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த மின் நூலை நானே என் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கிறேன் என்பதுதான் இப்போதைக்கு என்னைக் கிறுகிறுக்க வைக்கும் சங்கதி. ஐபுக் எடிட்டர், கேலிபர், ப்ரெஸ்புக் என்று தொடங்கி சமூகத்தில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான மின் நூல்...

ஜானகிராமன் மறுபிறப்பு

இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி ரொம்பத் திருப்தி. நாலைந்து நாள் போய்வர முடிந்தது என்பதைத் தாண்டி, என் நீண்ட நாள் ஆதங்கம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த ஜானகிராமன் புஸ்தகங்களுக்கு ஏன் ஒரு விமோசனமே கிடைக்கமாட்டேனென்கிறது என்று ரொம்ப காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். பெரிய சௌந்தரிய உபாசகர். அவரது கதையெல்லாம் கண்கூசச் செய்யும் பேரெழில் கொண்டவை. யார் என்ன சொன்னால் எனக்கென்ன? எழுத்தின் பிரம்மாண்டப் பேரழகு...

பேய் விடு தூது

குச்சிப் பாட்டிக்கு ஏன் அந்தப் பேர் வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பாட்டி செத்துப் போனதை சாக்காக வைத்து துக்கம் கேட்கப் போகிற பாவனையில் மீனாட்சியைக் கிட்டத்தில் பார்த்துவிட்டேன். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட அழகி! இழுத்து எதிரே நிறுத்தி அதைச் சொல்லிவிட வேணும்போல ஒரு தவிப்பு. எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள். ஆனால் யார் நேரடியாகச் சொல்லியிருப்பார்கள்? ஆண் பிள்ளைகள் எல்லோரும்...

ஒரு முத்தம் – ஒரு கடிதம்

அன்புள்ள பாரா, காலையில் கண் விழித்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தேன். பல் விளக்கியிருக்கவில்லை. அப்படியே மொபைலை ஒரு புரட்டு புரட்டலாம் என்று எடுத்தபோதுதான் உங்கள் சிறுகதையின் லிங்க் கண்ணில் பட்டது. அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது பின் வருமாறு இருந்தது என் மனநிலை: ஒரு இரண்டு பத்திகள் படிப்போம். சுவாரஸ்யமாக போகிறதா என்று பார்ப்போம். இல்லையெனில் ஃபேஸ்புக்கில் அடுத்த மொக்கை நிலைத்தகவலுக்குத்...

ஒரு முத்தம்

இது அவனுடைய கதை. அவன் பேரைச் சொல்லி எழுதத்தான் திட்டம் போட்டேன். இரண்டாவது பத்தியை எட்டும்போதே வேண்டாமென்று தோன்றிவிட்டது. காலம் எழுத்தாளனுக்குச் சாதகமாக இல்லை. என்றைக்கும் போலத்தான். குறைந்தபட்சம் பெண்டாட்டி பிள்ளை குட்டியுடன் அவன் சௌக்கியமாக இருக்கவேணுமென்று நினைப்பதில் என்ன தவறு? அவன் என் நண்பன். பார்த்து இருபது வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டதென்ற போதிலும். தொடர்பே இல்லை என்ற போதிலும். நான்...

காம்யுவின் வாசனை

என் வீட்டிலிருந்து சுமார் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரம் என்பதே முதலில் பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய தூரத்துக்கு அதற்குமுன் நான் தனியாகப் போனதே இல்லை. கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே எனக்குப் பதற்றம் பிடித்துக்கொண்டது. வழியில் படிப்பதற்கென்று தேடித்தேடிப் புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஆ, இந்தப் புஸ்தகம் எடுத்து வைப்பது எப்போதுமே சிக்கல் பிடித்த காரியம். சில புத்தகங்களை...

சேகரைச் சாகடிக்கும் கலை

நெடுந்தொடருலகில் கதாசிரியன் பாடு சற்று பேஜாரானது. சும்மா ஒரு ஜாலிக்கு அவனைப் போட்டு வாங்க நினைப்பவர்கள் மாதாந்திரக் கதோற்சவத்தில் சில மந்திரப் பிரயோகங்கள் செய்வர். அவையாவன:- 1. செகண்டாஃப் கொஞ்சம் lag சார். 2. சீன் ரிப்பீட் ஆகுது சார். 3. ஸ்கிரீன் ப்ளே ஓகே, ஆனா சீன் ப்ளே சரியில்ல. 4. இதே சீன் பன்னெண்டர சீரியல்ல நேத்துதான் டெலிகாஸ்ட் ஆச்சு. 5. எமோஷன் கம்மியா இருக்கு சார் 6. பேசிட்டே இருக்காங்க...

பொம்மை கண்காட்சி

மதி நிலையம் இதுவரை புதுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகவும் வெளியிட்டுள்ள என்னுடைய நூல்கள் இவை. இன்னும் ஒரு சில புத்தகங்கள் எதிர்வரும் மாதங்களில் வெளியாகும். நிலமெல்லாம் ரத்தம் மறுபதிப்பு அவற்றில் ஒன்று. வேலை மெனக்கெட்டு என் அனைத்துப் புத்தகங்களையும் தொகுத்து இப்படி ஒரு டிசைன் செய்துகொடுத்த மதி நிலையத்தின் வடிவமைப்பாளர் பிரேமுக்கு என் அன்பு.

 

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி