‘ஜிங்கோ பிலோபா’ ‘விஷம் முறிக்கும் விஷமரம்’, ‘செம்மொழிப் பிரியா’, ‘திராவிடத் தாரகை’, ‘கலாச்சார செயலர்’ என்று இந்த அத்தியாயத்தில் புனைவில் புகுந்து விளையாடியிருக்கிறார் நம் எழுத்தாளர். கதையின் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் இருக்கிறது. “கோவிந்தசாமிக்கு அந்த மரத்தின் மகிமை தெரிந்து இலைகளைச் சாப்பிட்டாலும் மரம் தான் மொட்டையாகுமே தவிர அவன் மாற மாட்டான்.” – இவ்வளவு...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 18)
நம் சூனியன் தான் கபடவேடதாரி என்று இது வரையில் நினைத்திருந்தேன். அனால் இந்த அத்தியாயத்தில் தான் பாரா தான் நம் கபடவேடதாரி என்று தெரிகிறது. பாரா தான் சாகரிகாவின் மூளைக்குள் சென்று அவளை ஆக்ரமித்து, நினைவுகளை அழித்து, இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக இருக்கிறார்.ஆனால் எதற்கு இதையெல்லாம் செய்தார் என்று தான் தெரியவில்லை. இந்த அத்தியாயத்தில் எழுத்தாளரின் இந்த இரண்டு வரிகள் என்னை வெகுவாய் ஈர்த்தது, “எனக்கு...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 17)
கோவிந்தசாமி அவனது கவிதைக்கு நிழலிடமிருந்து கிடைத்த மதிப்புரையை (?!) கேட்டதில் இருந்து சற்று கோபமாக இருக்கிறான். என்னதான் இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே. அனால், கோவிந்தசாமி ‘பேரிகை’ இதழில் காதலர் தினத்துக்காக எழுதிய கவிதை கொஞ்சம் பரவாயில்லை போல தான் இருந்தது. அப்போது அவனுக்கு தெரிந்த அறிஞர் ஒருவர் மூலம், கிருஷ்ணரால் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறான். அப்போதும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 16)
கோவிந்தசாமி காதலின் ஆழத்தை நிழலின் மூலமாக தெரிந்துக் கொள்கிறோம், வேண்டுதலைக் கூட தன்னை மறந்து, சாகரிகாவை கண்ணில் காட்டி விடுமாறு வேண்டும் கோவிந்தசாமியின் காதல் ஆழமாக தெரிகிறது. எதற்காக இவ்வளவு தூரம் அவனை வெறுத்து ஒதுக்கியும், அவளை சேர பாடுபடுகிறான் என இப்போது புரிகிறது. காதல் தன் வேலையைக் காட்டுகிறது. ரொம்ப இயல்பான காதலின் பதற்றம், தன்னுடைய தோற்றத்தின் மீதான கவனம் என நம்மை நெகிழ வைக்கிறது...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 20)
சூனியனுக்கு சாகரிகாவின் மீது நேரடியாக எந்த வன்மமும் இல்லைதான். உண்மையில் அவள்மீது அவனுக்கு கொஞ்சம் காமமும் இருந்தது. அவனது எண்ணமெல்லாம் அவளை எப்படியாவது அந்த முட்டாள் கோவிந்தனுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவனது இலக்கிய எதிரி்க்கு அவள் துணைபோய் விட்டாள் என்பதை அறிந்தவுடன்தான் அந்த வன்மம் தொடங்கியது. அந்த நகரத்தின் கலாசார செயலாளர் ஆவது பெருமைக்குறிய விஷயம்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 19)
பூங்காவில் உறங்கிக் கிடக்கும் கோவிந்தசாமியை சூனியன் சந்திப்பது, அவன் படுத்திருக்கும் ஜிங்கோ பிலோபா மரம் பற்றிய தகவல், அதன் மருத்துவ குணம், அதுகுறித்து போகருக்கும், அவர் சீடர் புலிப்பாணிக்கும் நிகழ்ந்த விவாதம், ஜிங்கோ பிலோபா வளர்வதற்கான சூழல் என அத்தியாயம் நீண்டு திறக்கிறது. தன் வீட்டு முற்றத்தில் புதைந்து கிடக்கும் புதையலை அறியாமல் அதை தேடித் திரிந்தவன் கதையாய் தான் படுத்திருந்த மரத்தின்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 18)
சாகரிகா சங்கப்பலகையில் எழுதுவது உள்ளிட்ட அனைத்தும் பா.ரா.வின் சூது என அறிந்து கொள்ளும் சூனியன் தன் எதிரியான பா.ரா வின் யோக்யதை குறித்து கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ”பூரண அயோக்கியன்” என்ற ஒற்றை வார்த்தையில் அவரின் குணாதிசதியத்தைச் சொல்லி விடுகிறான். கோவிந்தசாமியின் நினைவுகளை முழுமையாக அழித்தொழிக்க சாகரிகா பா.ரா.வின் உதவியை நாடுகிறாள். அவரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவளை...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 19)
கோவிந்தசாமியின் தலைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது வருத்தத்திற்கு உரியதே. ஆனால், இது சூனியனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே. ‘அரிய இலையைத் தின்று விட்டால், அறிவார்ந்த கோவிந்தசாமியாக மாறி விட்டால்’ என்று சூனியன் எண்ணுகிறான். ஆனால், மாற வாய்ப்பு இல்லை என்று முடிவுக்கும் வருகிறான். கோவிந்தசாமியைத் தூண்டிலாகப் பயன்படுத்திப் பாராவை வீழ்த்தி விடத் துடிக்கிறான் சூனியன். அதனால்தான் கோவிந்தசாமி வெறுத்த...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 18)
பாரா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாகக் ‘கபடவேடதாரி’ என்று பெயர் வைத்திருக்கலாம். மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். தன்னை நிலை நிறுத்தச் சூனியனுக்குச் சூனியனாக இந்தப் பாரா உள்ளார். நீல நகரத்திற்குப் பாராவை அழைத்து வந்தது சாகரிகா என்பதை உறுதிபட அறிந்து கொள்கிறான் சூனியன். அவளது நேர்த்தியாகச் சொல்லிற்குக் காரணமான பாராவையும் அறிந்து கொள்கிறான். சூனியன் சாகரிகா, பாராவின் மீதுள்ள கோபத்தை, “அவளுக்கு...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 17)
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆஸ்திகம், நாஸ்திகம் ஆகிய இரண்டுமே கலந்திருக்கின்றன என்பதை அறிஞர் கோவிந்தசாமி உரையாடல் வழியே உணரமுடிகிறது. இது மறுக்க முடியாத உண்மையும்கூட. இருவருக்கும் நடைபெறும் உரையாடலை வாசிக்கும் பொழுது எனக்குச் சிரிப்புத் தோன்றியது. மனித மூளையில் தூசிப் படிந்த சில பகுதிகள் இருக்கும். அதைத் தன் எழுத்து என்னும் துடைப்பான் கொண்டு துடைக்கிறார் பா. ராகவன் அவர்கள். அவனுக்கு இறுதி வரை அவன்...