வலை எழுத்து

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 18)

சூனியனுக்கு சமமான ஒரு எதிரி கதையில் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அதுபற்றி ஆசிரியர் கடந்தசில அத்தியாயங்களாக சொல்லி வந்தது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. சூனியன் ஒரு அசுர சக்தி. அவனுக்கு இணையான ஒரு சக்தி மறுபுறம் இருக்கவேண்டுமென்றால் அது கடவுளின் அருளையோ அல்லது கடவுளுக்கு இணையாக இருக்கும் ஒருவரின் அருளையோ ஆசியையோ பெற்றவராக இருக்கவேண்டும் என்பது இயற்கைதானே. தன்னை கோரக்கரின்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 18)

பாரா பராக்! பராக்! பழைய திரைப்படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படகோட்டிக்கொண்டே ‘வசந்தகால நதிகளிலே’ என்ற பாடலைப் பாடுவார். அதுபோலத்தான் இந்த நாவலில் பாரா. சூனியருக்கே சூனியம் வைக்கிறார் இந்தப் பாரா. அடுத்தவர் மனைவியை அபகரிக்கிறார் பாரா. மூளைச்சலவை செய்கிறார், நினைவுகளை அழிக்கிறார் கதைக்குத் திருப்புமுனையாக இருக்கிறார். இவர் செய்வன பின்னாளில் யாருக்காவது நன்மையைத் தருமா? ‘நாரதர் கலகம்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 15)

சூனியன், நீல நகரத்தை முழுவதுமாய் தன் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிகிறது. சூனியனின் திட்டம் கொஞ்சம் அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில் கோவிந்தசாமிக்கும், அவனுடைய மனைவிக்குமான கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முயல்கிறான்.கூடவே மனிதர்களுக்கும் சூனியர்களுக்குமான வித்தியாசங்களை முன் வைத்து,மனிதனின் பலவீனங்களாக சூனியன் நினைப்பவற்றை நம்மை உணர செய்கிறான் சூனியன். அடுத்த கட்ட...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 17)

தன் கவிதையின் மீது கொடுக்கப்பட்ட தீர்ப்புக்காக கோவிந்தசாமி கலங்கிப் போகிறான். கவிஞனல்லாவா? மனம் அத்தனை இலகுவாக இருக்காதா என்ன? அதன் தொடர்ச்சியாக அவனுள் மலரும் பழைய நினைவுகள் நம்மையும் மலர்த்திப் போடுகிறது. காதலர் தினத்துக்கு எதிராய் ஒரு தலைவர் விட்ட அறிக்கைக்கு ஆதரவாய் புரட்சிக்கவிதை(!) எழுத நினைத்த கோவிந்தசாமிக்கு தன் காதல் நிலைப்பாட்டோடு, கடவுள் கிருஷ்ணனும் தேக்கமாய் வந்து நிற்கிறார். ஒரு...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 16)

சூனியன் கோவிந்தசாமியின் நிழலை தூங்கப் போட்டு விட்டு சென்று விட நிழல் தனியே செயல்படத் துவங்குகிறது. கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியாக நாமம் சூட்டிக் கொள்ள நினைக்கும் நேரத்தில் ஒரு திருப்பமாய் கோவிந்தசாமியை சந்திக்கிறது. அப்போதும் கூட சாப்பாடு பற்றி தான் கோவிந்தசாமி பேசுகிறான்! சூனியனை மோசக்காரன் எனக் கூறி எகிறும் கோவிந்தசாமியிடம் நிகழ்ந்தவைகளையும், செய்தவைகளையும் கூறி சூனியனுக்காக நிழல்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 15)

கோவிந்தசாமிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்து விட்டு தன் இகட்சியம் நோக்கி நகர சூனியன் நினைக்கிறான். அதற்கு சாகரிகாவின் தலைக்குள் இறங்கி கோவிந்தசாமி பற்றி பதிவாகி இருக்கும் முழு தகவல்களையும் சேகரிக்க முடிவு செய்கிறான். சாகரிகாவை நெருங்க சூனியன் நம்பும் மூன்று பலவீனங்களும், அது பற்றிய விளக்கங்களும் அற்புதம். நீலநகரத்தை தன் சமஸ்தானமாக்கிக் கொள்ள தனக்கு இருக்கும் சாதகமான அம்சங்களைப் பற்றி...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 14)

பா.ரா.வோடு மீண்டும் சூனியனுக்கு பிணக்கு. ஆவேசத்தைக் கொட்டிவிட்டு அமைதிப்படும் சூனியன் போகிற போக்கில் ”எனது ஆனந்த தாண்டவத்தில் தரிசிப்பீர்கள்” என் சொல்லிச் செல்வதில் பின்னொரு விறுவிறுப்பு காத்திருப்பது தெரிகிறது. கோவிந்தசாமி சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டதை அவனுடைய நிழலுக்குச் சொல்லும் சூனியன் அவன் பதிந்திருந்த மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி கவிதையை வாசித்துக் காட்டுகிறான். வாசிப்பவர்கள் எளிதில்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 13)

சாகரிகா பரப்பும் அவதூறுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற கோவிந்தசாமியின் உளத் தூண்டலுக்கு உதவ ஒரு கரமும் நீளவில்லை. ஷில்பாவை நம்பியும் பயனில்லை என்ற நிலையில் கோவிந்தசாமியே நேரடியாகக் களமிறங்கி விடுகிறான். அவன் பிரச்சனைக்கு நீலநகரவாசி ஒருவன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கிறது. முகக்கொட்டகைக்குச் சென்று சிறு பிள்ளைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதைப் போல ஒன்றுக்கு நான்கு முகத்தையும், அதைப்...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 4)

நீல நகரத்தின் வாயிலில் சிலுவையில் தொங்கியிருக்கும் சூனியனுக்கு ஏற்றாற்போல் அந்த இடத்திற்கு புதிதாக வரும் ஒரு எளிய மனிதனின் தலைக்குள் நுழைந்துக்கொள்ள நினைக்கிறான். அவன் பல நூற்றாண்டுக் காலத்தை கடந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் வந்திருப்பது இப்போது நாம் வசிக்கும் இந்த பூமிக்கு தான். (அதுவும் டோல்கேட் வாசலில் நின்றிருப்பான் போல) அந்த எளிய மனிதனின் பெயர் கோவிந்தசாமி மற்றும் அவனது இதுவரையிலான...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 3)

இரண்டு அத்தியாயங்களை விட மூன்றாம் அத்தியாயம் விறுவிறுப்பாக இருந்தது. சூனியர்களின் கப்பலை நோக்கி வரும் நீல நகரத்தினை தாக்கி அழிக்கவும் அதே நேரம் தான் விடுபட்டு கொள்ளவும் சூனியனுக்கு கணநேரத்தில் யோசனை வருகிறது. இங்கு யோசனை என்பது சிந்தனையை தான் குறிக்கும். ஆனால் பண்டைய கால அளவீடுகளின் படி யோசனை என்பது தூரத்தினை அளவிடும் ஒரு சொல் என்பதை கூகிளிடம் கேட்டுத்தான் தெரிந்துக்கொண்டேன். ஆசிரியர் ஒவ்வொரு...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓