வலை எழுத்து

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 10)

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண இருபக்க வாதங்களையும் நியாயங்களையும் கேட்பது தானே சரியாக இருக்கும். அதனால், நம் சூனியன் சாகரிகாவின் மூளைக்குள்ளும் சென்று பார்ப்பதென முடிவு செய்கிறான். எனக்கும் சாகரிகாவின் மூளைக்குள் என்ன தான் இருக்கிறது என்பதை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. சூனியனின் தண்டனைக்கான காரணத்தை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறோம். 20 இலட்சம் மக்களைக் கொல்ல வேண்டுமென்ற தனது டாஸ்க்கை முடித்தானா...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 15)

ஆக சூனியன் என்கின்ற உருவகம் மனித மூளையின் சிந்தனைப் பகுதியுடன் தொடர்புடையது. அப்படி அந்த சிந்தனையை தன் கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வந்து விடக் கூடிய திறமை படைத்த சூனியன் ஏன் மனிதர்களின் மூளையில் இருக்கின்ற கடவுள் என்கின்ற பகுதியை மட்டும் ஒரேயடியாக அழித்து விடக்கூடாது? அதை செய்யாமல் இது என்ன தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை? ஆனால் ஒட்டு மொத்த நீல நகரத்தையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவர அவன்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 16)

சிந்திக்கத் தெரிந்த நிழல், தனித்தியங்கும் நிழல் என்ற கருத்தாக்கம் சிறப்பாக உள்ளது. இனி, கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் தனித்தனியாக இயங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. நிஜத்திலிருந்து நிழல் பெற்ற சுதந்திரத்தை நிழல் ஒருபோதும் தவறவிடாது. இது நிழலின் சுதந்திரம். கோவிந்தசாமி தன்னுடைய நிழலிலிருந்தும் தனித்துவிடப்பட்டான். இனி அவனுக்கு அவன் நிழலும் சொந்தமில்லை. நிழல் இல்லாதவன் கோவிந்தசாமி...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 16)

கோவிந்தசாமி சாகரிகாவின் மீதுகொண்ட காதலால், இறைவனை வணங்கச் சென்றதன் நோக்கத்தை மறந்து சாகரிகாவைத் தன் கண்ணில் காட்டி விடுமாறு வேண்டுகிறான். சாகரிகாவின் மீது கொண்ட பற்றினால் இறைவனுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கிறான். சாகரிகாவைக் காண தன்னிலை மறந்து அவளைக் காண ஓடுகிறான். அந்தக் காட்சியை நிழலின் வழியே மிக அழகாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். அதன்பின் அவள் தன்னை அலங்கோலமாக இருக்கக் கூடிய காட்சியை அவள்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 16)

சூனியன் தன்னுடன் இல்லை என்றதுமே கோவிந்தசாமியின் நிழல் தன்னை சுதந்திரனாக எண்ணி வெளியே சுற்ற ஆரம்பத்துவிட்டது. சூனியன் சொல்லிக் கொண்டிருந்த கதையை இப்போது யார் சொல்வது? பா.ரா.வாக இருக்கலாம். இல்லையென்றால் வேறு யாராவதுகூட இருக்கலாம். இந்தக் கதையில் வரும் திருப்பங்கள் அப்படி. ஏற்கனவே இடையிடையே வந்து பா.ரா. சொல்லும் கதையால் கடுப்பாகி இருக்கும் சூனியனுக்கு இந்த நிழல் வேறு சுதந்திரமாய் சுற்றுவது இன்னும்...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 16)

நாம் பிறந்து தவழத் தொடங்கியது முதல் வெயிலிலும், விளக்கொளியிலும் கூட நம்மைப் பிரியாது உடனிருக்கும் நம் நிழலுக்கு நமக்கு இருப்பதைப் போன்றே ஏதேனும் ஆசைகள் இருக்குமாவென இதுவரை தோன்றியதே இல்லை. இன்று இந்த அத்தியாயம் வாசித்ததும் தான் நம் நிழல் நம்மை எப்போதெல்லாம் திட்டியிருக்கும் என எண்ணினேன். கரசேவை முடித்தவுடன் வெற்றிக் களிப்புடன் திரும்பிய கோவிந்தசாமிக்கு மறுநாள் தன் முகத்தைக் கண்டவுடன் அது...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 15)

சூனியனே சாகரிகாவை அடைய எண்ணுகிறானோ என கடந்த அத்தியாயங்களில் கோவிந்தசாமிக்கு ஏற்பட்ட அதே சந்தேகமே தற்போது நமக்கும் ஏற்படுகிறது. மனிதர்கள் சறுக்கும் இடங்களாக மூன்றினை இங்கே சூனியன் குறிப்பிடுகிறான். தாய்ப்பாசம், உடலுறவு, மரணம். ஏறத்தாழ இதே காரணங்களை தான் யதியில் வரும் விமல் முதலான மற்றவர்களும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்கள். பா.ரா. இதனாலெல்லாம் ரொம்பவே வலிகளை அனுபவித்து இருப்பாராவென தெரியவில்லை...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 14)

கதையில் யார் சொல்வதைக் கேட்பது அல்லது நம்புவது அல்லது பின்பற்றிச் செல்வது? சூனியனையா அல்லது எழுத்தாளர் பா.ரா.வையா? கோவிந்தசாமியின் நிழலைப் போல் இன்னும் 120 பேரின் நிழல்களை உருவாக்கி விட்டான் சூனியன். அதாவது Fake id’s. கோவிந்தசாமி வெண்பலகையில் எழுதியுள்ள கவிதை. கவிதையா அது? உவ்வே…. இதில் இறுதியில் ஜெய் ஸ்ரீராம் வேறு இரங்கல் செய்திக்குக் கூட படித்துப் பார்க்காமல் ஹார்டின் விடும் நம்மூர்...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 13)

மழை வந்ததும் நீல நகர பிரஜைகளின் தலை முடிகள் நெட்டுக் குத்தாக நிற்க தொடங்குகின்றன. நம் நகரில் மழை வந்ததும் மண்டை சில்லிட்டு கவி எழுதத் தொடங்கிவிடும் கவிஞர்களைக் கலாய்க்கிறாரோ… ஒருவேளை நீல நகரத்தில் இருப்பதைப் போல நமக்கும் தேவைக்கேற்றாற்போல் முகத்தை கழட்டி வைத்து மாற்றிக் கொள்ளும் வசதியிருந்தால் எப்படி இருக்கும்!! ஆனாலும் உள்ளாடை மாற்றுவதைப் போல அடிக்கடி நாமும் நம் கொள்கைகளை மாற்றிக் கொண்டு...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 9)

சூனியன் , கதை சொல்லியான பாராவைப் பற்றி சொல்லும் அனைத்தும் உதட்டில் அகலாத புன்னகையோடு வாசிக்க வைக்கிறது. சில இடங்களில் என்னை மறந்து சிரித்து விட்டேன்! முழு அத்தியாயமும் இயல்பான பாணியில் நகர்கிறது! கோவிந்த் மற்றும் சாகரிகாவின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைப் பார்க்கிறோம் , கோவிந்த் மீது கோபம் கொள்வதா, பரிதாபம் கொள்வதா எனத் தெரியவில்லை. கிரைப் வாட்டருக்கு நான் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருதேன்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!