உண்மைக்குப் புறம்பான செய்திகளை வலம் வரச் செய்வதும் விஷமிகளின் வேலையாகும். சமூக ஊடகங்களில் தற்பொழுதெல்லாம் இதுதான் நடக்கிறது. அதனால்தான் உண்மைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவைபோன்ற அவதூறுகளை வாசிக்கும் பலர் என்ன, எதுவென்று ஆராயாமல் இவற்றை உண்மை என எண்ணி அவற்றின் பின் செல்கின்றனர். அதுபோல் அவனது உறுப்பைப் பற்றி வெண்பலகையில் வெளியிடுவது பழிவாங்குதலின் உச்சம். அதன் பின் வெண்பலகையில் சூனியனும் நிழலும்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 15)
சூனியனின் விரிவான திட்டம் பற்றி இந்தப் பகுதி விளக்குகிறது. நீலநகரத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர நினைக்கிறான் சூனியன். அதற்கு முன்பாகக் கோவிந்தசாமியின் மனைவியைப் பற்றியும் அவனுக்கும் கோவிந்தசாமிக்குமான உறவுநிலை பற்றியும் உய்த்தறிய முயற்சி செய்கிறான். அதற்கும் கோவிந்தசாமியின் நிழல் தன்னிடம் கூறியதற்கும் எந்த விதமான ஒற்றுமையும் இல்லாமையைக் கண்டு, சினம் கொள்கிறான் சூனியன். சூனியன் தன்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 14)
நாவலின் இடைவெட்டாகப் பாரா என்ற கதைசொல்லி உள்ளே நுழைந்து வாசகரைக் குழப்பியதைக் குறித்துச் சூனியன் கவலைகொள்கிறான். படைத்தல், அழித்தல் குறித்த தன்னுடைய கருத்தாக்கங்களை வாசகரோடு பகிர்ந்துகொள்கிறான் சூனியன். அவன் கோவிந்தசாமியின் நிழலிடம் பலவாறாகப் பேசி, அவனைச் சமாதானம் செய்து, அவனைத் தன்வசப்படுத்திக் கொள்கிறான் சூனியன். கோவிந்தசாமியின் பதிவுகளைப் படித்து இருவரும் திகைக்கிறார்கள். கோவிந்தசாமியின் நிழல்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 13)
இயற்கை மனிதருக்கு ஒரு முகத்தைத்தான் வழங்கியுள்ளது. ஆனால், மனிதர்கள் சூழலுக்கு ஏற்ப தம் மனத்தளவில் பல்வேறு முகங்களை உருவாக்கிக்கொள்கின்றனர். இந்த நாவலில் மனிதர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடலளவிலும் பல்வேறு முகங்களை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். விழாக்காலங்களில் பலூன் வியாபாரிகள் சிறார்களுக்கான பல்வேறு விதமான முகமூடிகளை விற்பார்கள். அவற்றை அணிந்துகொண்ட சிறார்கள் அந்த...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 12)
வழக்குரைஞர் ‘ஷில்பா’ என்ற புதிய கதைமாந்தர் வெளிப்பட்டுள்ளார். இவர் கோவிந்தசாமிக்குப் பலவகையில் உதவுவார் என்ற நம்பிக்கையை வாசகர்கள் அடைந்துள்ளனர். ஆனால், இவர் கோவிந்தசாமியின் மனைவியின் தோழி என்பதுதான் வருத்தமான செய்தி. கோவிந்தசாமிக்கும் அவரின் மனைவிக்கு விவாகரத்து என்ற தகவலையும் சூனியனைக் கைதுசெய்ய மற்றொரு சூனியன் வந்திருக்கும் தகவலும் ஷில்பாவின் வழியாகவே தெரியவருகிறது. அதுமட்டுமல்ல கோவிந்தசாமியை...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 11)
சூனியனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணியையும் அவன் அதைச் சரிவர நிறைவேற்றாமைக்கான காரணத்தையும் அதனால் அவன் பெற்ற தண்டனையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் சூனியன் அடைந்த தோல்வியே அவனைத் தலைமறைவாக்கியுள்ளது. அரசியின் வருகையும் அதற்காக நகரமாந்தர்களைக் கட்டுப்படுத்த காவலர்கள் மேற்கொள்ளும் முயற்சியும் சூனியன் அரசியைக் கொலைசெய்ய முயற்சிசெய்யும் விதமும் நன்றாகக்...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 12)
சாகரிகாவின் தோழியான ஷில்பாவை சந்தித்த கோவிந்தசாமி சாகரிகா தன்னுடன் திரும்பி வந்து வாழவோ அல்லது குறைந்தபட்சம் அவன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவாவது ஷில்பாவின் உதவியைக் கோருவதே இந்த அத்தியாயம். “உனக்கு சாவே கிடையாது என்று இறுதி வரை நம்பிக்கை அளிப்பார்கள். பிறகு RIP சொல்லி விடுவார்கள்” – இக்கொடூர சூழலில் இவ்வரிகளை வாசிக்கையில் ஏனோ ஒரு வருத்தம் உள்ளுக்குள் சூழ்ந்தது. கதை இப்போது...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 11)
நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. முகநூலில் ஒரு பெண் பெயர் கொண்ட ஐடி ஒரு நிலைத் தகவலைப் பதிவிட்டால் எவ்வளவு விருப்பக்குறிகள் (likes), கருத்துகள் (comments) வரும். இன்னும் ஒரு படி மேலாய், அதனோடு தன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டால்? இதே, ஓர் ஆண் ஒரு தகவலைப் பதிவிட்டால்??? அதே கதை தான் நீல நகரத்தில் மக்கள் தங்கள் தகவல்களைப் பகிரும் வெண்பலகைக்கும். போன அத்தியாயத்தில் விட்ட குறையை சொல்ல மறந்தோமே...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 1)
சாய் வைஷ்ணவியின் முதல் அத்தியாயத்துக்கான மதிப்புரை இங்கே உள்ளது.
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 10)
உண்மை. உண்மை. இந்த உண்மைக்குப் பல நேரங்களில் மதிப்பு இருப்பதில்லை. அதனால்தான் காரியவாதிகள் உண்மை மீது வர்ணத்தைப் பூசிப் பொய்யாக்குகின்றனர். அந்த வர்ணம் ஈர்க்கிறது. வர்ணத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அதனைத் தன் மனத்திற்குள் செலுத்திக் கொள்கின்றனர். ஆனால், நம் சூனியனோ உண்மையையும் பொய்யையும் ஆராயத் தெரிந்தவன். அறிந்து கொள்ளக்கூடியவன். முதலில் அவன் கோவிந்தசாமியின் தலைக்குள்ளேதான் இறங்கினான். ஆகவே, அவன்...