கண்ணெதிரே தெரிகின்ற அனைத்து அசாத்தியங்களையும் மீறி அதீத தன்னம்பிக்கையுடன் தன் மனைவியை சமாதானப்படுத்த கோவிந்தசாமி எடுக்கின்ற பிரயத்தனங்களை வாசித்தால் எரிச்சல் தான் வருகிறது. எதற்கு இத்தனை பரிதவிப்பு? சில மனிதர்களின் அசட்டுப் பிடிவாதங்களை நீல நகரத்தின் சுதந்திரம் கூட மாற்ற முடியாது போலும். ( சரி, இருக்கட்டும். கதை நகர வேண்டுமே?). ஆனால் அவனுக்கு முகக்கொட்டகையில் கிடைக்கின்ற தெரிவுகள் பூமியில்...
கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 12)
சூனியன் கோவிந்தசாமியின் நிழலை கொண்டே இயங்குகிறான். நிழலுக்கு குடியுரிமையும் பெற்று விட்டான். கோவிந்தசாமியோ தன் நிழலிழந்து ஷில்பா எனும் சாகரிகாவின் வழக்குறைஞரிடம் தன் தரப்பை கூறுகிறான். இதனிடையே நீண்ட நேரமாகியும் சூனியன் திரும்பாதது அவனது ஐயத்துக்கு இடமளிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் சூனியன் கோவிந்தசாமியின் நிழலோடு சென்று சாகரிகாவை சந்தித்து திரும்புவேனென்றவன் அவனது அனுமதியில்லாமல்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 12)
ஒரு பக்கம் கோவிந்தசாமியின் நிழல் அந்த நகரத்தின் குடியுரிமையை சூனியனின் மூலமாக பெற்று சாகரிகாவின் பொய்களுக்கு பதிலளிக்க தயாராகிறது. இன்னொரு பக்கம் கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி மூலமாக நகரத்தின் குடியுரிமையை பெற்று அவன் பக்கத்து நியாயங்களைச் சொல்ல விழைகிறான். சாகரிகாவின் பக்கத்தில் அவளது பதிவுகள் மூலமாக ஒரு ஃப்ளாஷ்பேக்கை நமக்கு சொல்லிக் கொண்டிருந்த சூனியன் அதைத் தொடரப்போகிறான். கதை சொல்லிக்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 12)
நீல நகரத்தில் எல்லாவிதமான அபத்தங்களும் உண்டு. அவை வெறும் அபத்தங்கள் அல்ல. பகுத்து அறியும் தகுதி கொண்ட மூளையும் தர்க்கபூர்வமாக சிந்திக்கத் தெரிந்த மனமும் வாய்த்த போதிலும் கூட அவை இரண்டையும் சோம்பேறித்தனத்தாலும் அல்லது அலட்சியத்தாலும் மழுங்கடித்து விட்டு மேலெழுந்தவாரியாக கும்பலோடு கோவிந்தா என்று உளறிக் கொட்டும் நீல நகரவாசிகளை இதை விடச் சிறப்பாக விவரித்து விட முடியாது. பெண்கள் சார்ந்த நையாண்டிகள்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 11)
அரசியாரைக் காணத் திரளும் கூட்டத்தினால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத்துறையினர் எடுக்கும் நடவடிக்கையின் வழி தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சூனியன் தயாராகிறான். அரசியார் வருகை குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவலை கசிய விடுகிறான். ஆனால், விதியோ சூனியன் விசயத்தில் சதிராட்டத்தை ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தரப்பட்ட வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போவதால்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 10)
கோவிந்தசாமி ஒரு அப்பாவி. சாகரிகா அவனைப் பற்றி தவறாகவும், கற்பனையாகவும் எழுதி வருகிறாள். அவன் பெயருக்கு நீலநகரவாசிகளிடம் கலங்கம் வந்துவிடாமலிருக்க வேண்டும். அவளால் அவனுக்கு மரணம் நிகழ்ந்து விடக்கூடாது. அவனின் வழக்குரைஞராக நீ இருக்க முடியுமா? என அவனின் நிழல் சூனியனிடம் கேட்கிறது. நீங்கள் எல்லாம் நினைப்பது போல கோவிந்தசாமி சங்கியே அல்ல. அதற்கு முன் சாகரிகாவை கட்டிய விரக்தியில் பகுதியளவு சைக்கோவானவன்...
யதி – அபிலாஷின் விமரிசனத்தை முன்வைத்து (Jinovy)
யதிக்கு இன்று அபிலாஷ் எழுதிய விமரிசனத்தில் Jinovy ஒரு கமெண்ட் போட்டிருந்தார். அது கூட்டத்தில் காணாமல் போய்விடாமல் தனியே வாசிக்க வேண்டிய குறிப்பு என்று தோன்றியதால் இங்கே பிரசுரிக்கிறேன். — மரியாதைக்குரிய பாரா சார் அவர்களுக்கு, எவ்வகையிலும் இது ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் விளைவாக என்னால் காண இயலவில்லை. அதற்கான காரணங்கள்: 1. இந்த கதை விமலின் ஊடாக வெளிப்படுவது. மற்ற மூவரின் உள்ளுணர்வுகளின்...
யதி – ஒரு மதிப்புரை (அபிலாஷ் சந்திரன்)
பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் – அதற்கு காரணம் பா.ரா கதையை...
கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 11)
சூனியன் தண்டனை பெற்றதற்கான காரணம் ஓட்டமும் நடையுமாக கடந்து ஒரே அத்தியாயத்தில் முடிந்து விடுகிறது. அரசியின் வருகையால் காரியம் துரிதமாக நடக்குமென எதிர்பார்த்தால் குறைந்த சேதாரத்துடன் சம்பவம் முடிந்து விட்டது. சற்றே இப்பொழுது சிலவிஷயங்கள் புலப்படுகிறது.. தொடர்புப்பலகை என்பது கைபேசி அல்லது கணிணித்திரை என உருவகப்படுத்தத்தோன்றுகிறது. நீலநகரம் என்பது இணைய உலகம். முக்கியமாக நீல நிற எழுத்தை அடையாளமாக...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 11)
ஆக இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாள் ஊகித்தது தவறு என்று புரிந்து விட்டது. இன்னும் எனக்கு கதை சரிவர பிடிபடவில்லை போலும். ஆனால் சுவாரசியம் மட்டும் குன்றவில்லை. சூனியனுடைய 20 லட்சம் பேரை அழிப்பது என்கின்ற இலக்கு மக்களைக் கொல்வது அல்ல. அவர்களுக்கு இருக்கும் கடவுள் பக்தியை கொள்வது தான். அப்படி இருக்கையில் பிரபல்யமான அரசியை பார்த்து மக்கள் அதிக கிளர்ச்சியும் பதற்றமும் அடைவார்கள் என்கின்ற சூரியனுடைய...