சூனியன் யோகநித்திரையில் தனக்கான உலகை தானே நிர்மானிக்கிறான். அந்த உலகில் அனைத்துவித துறையினரும் இருக்கிறார்கள் தன் புத்தகத்துக்கு தானே விமர்சனம் எழுதும் இலக்கியவாதி உட்பட. தர்மேந்திர மகாப்ரபுவைப் பற்றி அவன் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது அவனது ரசிகர்கள் ஒருவேளை அவனுடன் சண்டைக்கு சென்றால் என்ன செய்வது என. ஆனால் அவனுடன் எப்படி அவர்கள் சண்டைக்கு போக முடியும்? அவன்தான் சூனியனாயிற்றே. அவன்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 42)
நீல வனத்தில் சமஸ்தானம் அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சாகரிகா செய்துகொண்டிருந்தாள். அந்த சமஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவள் பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டிருந்தாள். அதற்கென பிரத்யேகமான ஆட்களை நியமித்து அவர்களை முடுக்கிவிட்டு கொண்டிருந்தாள். சமஸ்தானம் அவள் ரசிகர்களுக்காக ரசிகர்களே சேர்ந்து உருவாக்கியது போலவும் அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லாதவாறு காட்டிக் கொள்வதாக ஏற்பாடு...
என் அன்பே, இலவசமே.
பொதுவாக எனக்கு இலவசங்கள் பிடிக்காது. ஒவ்வோர் இலவசத்தின் பின்னாலும் ஒரு சூது உள்ளதாகத் தோன்றும். நான் இலவசமாக எதையும் பெறுவதில்லை. தருவதும் இல்லை. ஆனால் கிண்டில் இங்கே அறிமுகமான புதிதில் வாசகர்களை அந்தப் பக்கம் ஈர்ப்பதற்கு இலவசம் கணிசமாக உதவியதை மறுக்க முடியாது. அது ஒரு சந்தைப்படுத்தும் தந்திரம். எனக்குப் பிடிக்காத காரியம் என்ற போதிலும் முழு மனத்துடன் அதனைச் செய்தேன். ஏனெனில், எழுத்தாளனுக்கு இங்கே...
படைப்பாளி எனும் பேசுபொருள் – கோபி சரபோஜி
வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார். கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 42)
புவியில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக் கொண்டு நீலவனத்தில் குடியுரிமை பெற்றிருக்கும் தன் இரசிகர்கள் மூலம் வெண்பலகை வழியே அங்கும் தன் புகழை பரப்பச் செய்து வரும் எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாட்டையும், மாடலையும் தனக்கான முன் மாதிரியாக சாகரிகா எடுத்துக் கொள்கிறாள். நிழலை நம்பி ”சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் தனக்கான சமஸ்தானத்தை முறைப்படி அமைக்கிறாள். கோவிந்தசாமியின் நிழலுக்கு இருக்கும் தன்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 41)
தன்னைக் காதல் வலை(சூழ்ச்சி)யில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் தூக்கியடிச்சிட்டு போனவளை பரிகாசிக்கவும் முடியாமல், காதலைத் துறக்கவும் முடியாமல் கலங்கிப் போன நிழல் காதலில் காயப்படுபவனின் கடைசிப் புகலிடமாய் இருக்கும் சாரயக்கடைக்கு வந்து சேர்கிறது. அங்கு கோவிந்தசாமியும் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான். பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்கிறார்க்ள். சோகத்தின் வீரியம் குறைய இடைஇடையே பெக்கோடு ஏமாற்றங்களுக்கும்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 40)
கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவை தனதாக்கிக் கொள்ள கொண்டிருந்த விரதத்தைக் கைவிடுகிறது. தன் சிந்தனைக் கதவைத் திறந்து விட்ட ”காதலி”யைத் (செம்மொழிப்ரியா) தவிர தன் மனதில் எவருக்கும் இடமில்லை என சத்தியம் கொள்கிறது. உனக்காக நான் என் சாம்ராஜ்யத்தையே துறப்பேன் என்ற காதல் மொழியை தன் காதலியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்துகிரது. இதெல்லாம் கலியுகக் காதலில் சகஜம் தான்! தன் சொல்லுக்கு இயங்கும் சாட்டையாய் நிழலை...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 39)
நீலநகர நுழைவாயிலில் கழற்றி விட்ட கோவிந்தசாமியை நீலநகரவனத்தில் சூனியன் சந்திக்கிறான். அவரவர் பக்க நியாயங்களை சொல்லிக் கொள்கிறார்கள். வழக்கம் போல் சூனியனே தன் தரப்பை நிலை நிறுத்துகிறான். பா.ரா., கடவுள் என இருவரையும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் வறுத்தெடுக்கும் சூனியன் இப்போதும் விட்டு வைக்கவில்லை. சாகரிகாவுடன் நிழல் நட்பானது, நிழலுக்காக அவள் சமஸ்தானம் அமைத்துத் தர இருப்பது ஆகிய தகவல்களை சூனியன்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 38)
நூலகத்திற்குள் நுழைந்த கோவிந்தசாமியின் கண்களில் பட்டுவிடக்கூடாது என சாகரிகா பதறுகிறாள். அதற்கு வழி சொல்லும் ஷில்பா நூலக அடுக்கில் புத்தகம் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடி ஒன்றின் முகத்தை திருகி சாகரிகாவுக்கு பொருத்தி விட்டு அவளின் முகத்தை தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள். கோவிந்தசாமியை அடையாளம் கண்டு கொண்ட நூலகர் மூலம் வெண்பலகையில் தன் சல்லாப வீடியோ வெளியானதையும், நூலகத்திற்கு சாகரிகா...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 37)
நூலக சமஸ்தான வாசலை சாகரிகாவும், ஷில்பாவும் வந்தடைகிறார்கள். வாசலில் முதிர்ந்த யாளி ஒன்று மயங்கிக் கிடக்கிறது. யாளிகள் பற்றிய சுவராசியத் தகவல்களோடு அத்தியாயம் விரிகிறது. நூலகர் மூலம் சாகரிகாவை அடையாளும் கண்டு கொள்ளும் வனவாசிகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அழகுக் குறிப்பெல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள். வாசிக்கும் நமக்கும் அழகுக்குறிப்புகள் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் செயல்படுத்திப்...