The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது. தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி...
உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக
வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான். இப்படம் வெளியானபோது...
ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்
சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம்...
மீள்வணக்கம்
நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட சிரமமென்பது மறந்துவிடுகிறது.
குற்றியலுலகத்தின் முகம்
அன்புள்ள பாரா, நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு...
எனக்காக மட்டும்
அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன். ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக...
அதிமுக்கிய அறிவிப்பு
என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச்...
சயந்தனின் ஆறா வடு வெளியீட்டு விழா
தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.
ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.
புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.
இந்த வருடம் என்ன செய்தேன்?
ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில திட்டங்கள் வகுப்பேன். கூடியவரை அதன்படியே நடக்க முயற்சி செய்வேன். பெரும்பாலும் சொதப்பியதில்லை. ஏனெனில் சாய்ஸில் விடுவதற்கென்றே எப்போதும் சிலவற்றைச் சேர்த்து திட்டமிடுவது என் வழக்கம். ஆனால் இந்த 2011 மட்டும் எனக்கு வேறு மாதிரி அமைந்தது. திட்டமிட்ட எதையும் செய்யாமல், திட்டமிடாத எத்தனையோ காரியங்களை இந்த ஆண்டு செய்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், முற்றிலும்...
குற்றியலுலகம்
ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.