அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல.
ரொம்ப முக்கியம்.
[tabs slidertype=”left tabs”] [tabcontainer] [tabtext]அறிமுகம்[/tabtext] [tabtext]அதிகாரம் 1[/tabtext] [tabtext]அதிகாரம் 2[/tabtext] [tabtext]அதிகாரம் 3[/tabtext] [tabtext]அதிகாரம் 4[/tabtext] [/tabcontainer] [tabcontent] [tab]நேற்று ராத்திரி மெக்சிகன் பிஸ்ஸா சாப்பிட்டேன். ரொம்ப ருசியாக இருந்தது. இன்னும் இதற்கு சரியான சைட் டிஷ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே என் கருத்து. மிளகுத் தூள்...
விழா மாலைப் போதில்…
ஆல்பர்ட் தியேட்டரின் கொள்ளளவு 1300 பேர் என்று சொன்னார்கள். அரங்கு நிறைந்து பலபேர் நின்றுகொண்டும் இருந்தார்கள். சரியாக ஏழு மணி என்று அறிவித்திருந்தும் நிகழ்ச்சி தொடங்கக் கிட்டத்தட்ட எட்டு மணியானதற்கும் யாரும் முகம் சுளிக்கவில்லை. மேடையில் இரண்டு முழுநீள வரிசைகளை ஆக்கிரமித்துப் பிரபலங்கள் உட்கார்ந்திருந்ததும், ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னதும்கூட யாருக்கும்...
இம்சைகள் இலவசம்
மாதம் சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவாகிக்கொண்டிருந்த இடத்தில் வெறும் இரண்டாயிரம் செலவுடன் வேலையை முடிக்கிற வழியொன்றைக் கண்டுபிடித்தால் அதன்பெயர் பைத்தியக்காரத்தனமா? ஆமாம். அப்படித்தான் என்று சொன்னார்கள், சான்றோர்களும்1 வல்லுநர்களும்2 விமரிசகர்களும்3. (இந்த சான்றோர், விமரிசகர், அறிஞர் போன்ற குறிச்சொற்கள் யாவும் வீட்டாரைக் குறிப்பவை.) நான் செய்தது, ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்றை விற்றுவிட்டு...
மாமனாரின் துன்ப வெறி
இந்தக் கதை என்னுடையதல்ல. பீதாம்பர நாதனுடையது. யார் இந்தப் பீதாம்பர நாதன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அவர் என் கெழுதகை நண்பர்களுள் ஒருவர் என்பதில் ஆரம்பித்து, இந்திய திருமணச் சட்டத்தின் பிரகாரம் மாமனாரை மட்டும் டைவர்ஸ் பண்ண வழியிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பவர் என்பது ஈறாகச் சுமார் தொள்ளாயிரம் பக்கத்துக்கு இந்த வியாசம் நீளக்கூடிய அபாயம் உண்டாகிவிடும். என் நோக்கம், இங்கே ஒரே ஒரு குறிப்பை...
பாட்டு புஸ்தகம்
அடுத்த சனிக்கிழமை மாலை நிகழவிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையோடு சேர்த்து பாட்டு புஸ்தகம் கிடைக்கும் என்று இன்று தெரியவந்தது. இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. முன்னொரு காலத்தில் என்னிடமே ஏராளமான பாட்டு புஸ்தகங்கள் இருந்தன. அட்டை என்று தனியாக இருக்காது. மட்டரக க்ரீமோ பேப்பரில் நடுவில் பின் அடித்து பிளாட்பாரத்தில்...
நெய்வேலி பாராட்டு விழா
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவின் சில காட்சிகளை ஹரன் பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு கேமரா அல்லது வீடியோ ரெக்கார்டர் மட்டும் கிடைத்துவிட்டால் மனிதர்களுக்குத்தான் எப்படி கலையுணர்வு பொங்கிப் பீறிட்டுவிடுகிறது! இருப்பினும் இச்சரித்திரப் பதிவைச் சாத்தியமாக்கியதன்மூலம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட பிரசன்னாவுக்கு வேறு வழியில்லாமல் நன்றி சொல்லிக் கீழே ப்டம்...
சுந்தரம் அழைக்கிறான்
நான் வசனம் எழுதியிருக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, எதிர்வரும் ஜூலை 16ம் தேதி [சனிக்கிழமை] மாலை 7 மணிக்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. நண்பர்களை இவ்விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.
எல்.பி.ரோடில் அரிக்காமேடு
அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது...
பாரா-ட்டு
ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]...