ஆடுகளமும் ஆய்வுக்களமும்
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று...
மீட்டருக்கு மேலே.
கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’ என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து...
ஒரு ஞாநியும் மூன்று பானைகளும்
எதிர்பாராத சில காரணங்களால் இன்றைக்குக் கண்காட்சிக்கு மிகவும் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எல்லோரும் கூட்டம் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் என் கண்ணுக்கு நியாயமான கூட்டம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு வேலை நாளில் இதைவிட அதிகக் கூட்டம் இருப்பது சாத்தியமில்லை. வருகிற கூட்டத்தில் பாதியை வாசலிலேயே ஈட்டிக்காரர்கள் மாதிரி மடக்கி உட்கார வைக்கிற அராஜகத்தைப் பற்றி மட்டும் ஏன் யாரும் ஒன்றும்...
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
நான் வசனம் எழுதியிருக்கும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் படம் பார்க்க வரலாம்’ என்று சற்றுமுன் இயக்குநர் வடிவுடையான் போனில் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. கீழே சில புகைப்படங்கள். விரைவில் ஒரு கட்டுரை.
கவிதைக்கு வந்த கஷ்டகாலம்
ஒரு வழியாக பபாசி ஏற்பாடு செய்திருக்கும் ஜனதா க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று இயங்க ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிந்தது. ஆனால் துரதிருஷ்டம், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்பவில்லை. க்ரெடிட் கார்டு என்ற போர்டும் கீழே ஒரு மிஷினும் இரண்டு பெண்களும் தனியாக அம்போவென்று உட்கார்ந்திருந்தார்கள். பல இடங்களில் கடைக்காரர்கள் இதைப் பொருட்படுத்த மறுக்கிறார்கள். காசு கொடு, புத்தகம் எடு. தீர்ந்தது விஷயம்...
ஒரு சாகசம்
ஒன்று. நேற்றே வெளியாகிவிட்டதாக நண்பர்கள் சொன்ன ரைட்டர்பேயோனின் திசை காட்டிப் பறவையை இன்று வாங்கினேன். ஆழியில் அதை வாங்கும்போது நண்பர் செந்தில், பேயோனின் இலக்கிய பார்ட்னரான லபக்குதாஸை அறிமுகப்படுத்தினார். பேயோனைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் லபக்குதாஸிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். என்னைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பற்றிய காட்டமான விமரிசனத்தை ஆங்கிலத்தில் எழுதி...
புரட்சி படுத்தும் பாடு
நல்ல கூட்டம் நன்றி பத்ரி என்பது தவிர, ஒரு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தைப் பற்றி வேறுவிதமாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. காலை கண்காட்சி தொடங்கிய முக்கால் மணி நேரத்தில் நான் திட்டமிட்டபடி சிறு பதிப்பாளர்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லத் தொடங்கினேன். சிங்கிள், டபிள், ஃபோர் ஸ்டால்களால் நிறைந்த கண்காட்சியில் சிங்கிளாக நின்று ஆடுகிறவர்கள் இவர்கள். நேற்றுப் பிறந்தவர்களில் தொடங்கி பல...
இன்று சுஜாதா தினம்
பதிப்பாளர்களைப் பொறுத்தவரை இன்றுதான் நிஜமான புத்தகக் கண்காட்சித் தொடக்கம். நேற்றுவரை வராத மக்கள் அத்தனை பேரும் சேர்ந்து படையெடுத்துவிட்டார்கள். காலை முதலே நல்ல ஆள் நடமாட்டம் இருந்தது. மதியத்துக்குப் பிறகு கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து, மாலை நடக்கவும் முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். வெளியே வண்டி பார்க்கிங் பகுதியில் தகராறெல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். கிழக்கு உள்பட இன்று எந்த அரங்கினுள்ளும்...
பால்கோவா தினம்
திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய் வரிசையில் என் நெஞ்சையள்ளும் இனிப்புப் பண்டங்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. மற்றவற்றையெல்லாம் எம்பெருமான் எப்படியாவது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது யாரிடமேனும் எனக்காகக் கொடுத்து அனுப்பிவிடுவான். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும்...