வலை எழுத்து

பொன்னான வாக்கு – 27

இந்த மது விலக்கு மாதிரி ஒரு பேஜார் பிடித்த சமாசாரம் வேறு கிடையாது. விலக்கினால் வருமானம் படுக்கும். இருப்பது ஓட்டு அரசியலை பாதிக்கும்.
போன பொதுத்தேர்தல் வரையிலுமேகூட இந்த விவகாரம் இத்தனை பிரமாதமாகப் பேசப்பட்டதில்லை. என்றைக்கோ ராஜாஜி கொண்டுவந்தார்; கருணாநிதி மங்களம் பாடினார் என்று ஒரு கதை சொல்லுவார்களே தவிர, சமகாலத் தலைமுறைக்கு மதுவிலக்கு என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை.

பொன்னான வாக்கு – 26

குப்புசாமி குப்புசாமி என்று ஒரு பிரகஸ்பதி இருந்தார். அவருக்கு செஞ்சுலச்சுமி என்றொரு புத்திரி. இந்த செஞ்சுலச்சுமி ஒரு அதிரூப அழகு சுந்தரி. பிராந்தியத்தில் அவளைப் பார்த்து வழியாத வயசுப் பையன்களே கிடையாது. ஆனால் செஞ்சுலச்சுமி யாருக்காவது மசிவாளா என்றால் மாட்டாள்! நூற்றுக் கணக்கான காதல் கடுதாசிகள், ஆயிரக்கணக்கான குறுந்தகவல் கும்மியடிப்புகள், கணக்கு வழக்கே இல்லாத நேரடி அப்ளிகேஷன்கள். ம்ஹும்...

பொன்னான வாக்கு – 25

பேச்சு ஒரு பேஜார் பிடித்த கலை. எப்போது மாலை சூடும், எப்போது காலை வாரும் என்று சொல்லவே முடியாது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஓராயிரம் பக்கங்கள் வரைகூடத் தங்கு தடையில்லாமல் எழுதிவிட முடியும். ஆனால் ஒரு சொற்பொழிவின் முதல் வரி சொதப்பினால் முழுப் பேச்சும் நாராசம். பள்ளி நாள்களில் சுந்தரமூர்த்தி என்று எனக்கு நண்பனொருவன் இருந்தான். இன்றைய கழகப் பேச்சாளர்களெல்லாம் அவன் தரத்துக்குக் கிட்டேகூட வரமுடியாது...

பொன்னான வாக்கு – 24

கீர்த்தனாரம்பத்திலே விஜயகாந்த் கேப்டனானபோது, அவர் சட்டைப் பையில் சொருகிய கர்ச்சிப் மாதிரி வெளியே தெரிந்த இன்னொரு பெயர் ராமு வசந்தன் என்பது. இந்த ராமு வசந்தன் ஒரு விஜயகாந்த் ரசிகர். ரசிகர் மன்றத் தலைவர். விஜயகாந்துக்கு பிஆர்ஓ மாதிரி வேலை பார்த்தவர். எப்போதும் உடன் இருப்பவர். விஜயகாந்துக்காக வெளியான சினிமா பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தகவல் உதவி அல்லது நன்றி...

பொன்னான வாக்கு – 23

கிருஷ்ண பட்சத்துக்கு ஒன்று, சுக்ல பட்சத்துக்கு ஒன்று என்று இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில்கூட முற்றிலும் புது முகங்களைப் போட்டுப் படமெடுக்க ஆள் வந்துவிட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள புது முகங்களின் எண்ணிக்கை எனக்குப் பெரிய அதிர்ச்சியளிக்கவில்லை. ஐந்து முழு வருஷங்கள் அமைச்சராக இருந்தவர்களிலேயே முக்கால்வாசிப் பேர் இன்னும் புது முகங்களாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கே, தில்...

பொன்னான வாக்கு – 22

நான் குடியிருக்கும் வீதியில் மொத்தம் 23 நாய்கள் வசிக்கின்றன. ராத்திரி ஒரு ஏழு மணிக்குப் பிறகு வெளியே கால் அல்லது வீல் எடுத்து வைக்க முடியாது. இருட்டில் மூலைக்கு மூலை ஒன்று உறும ஆரம்பிக்கும். ரொம்ப பயங்கரமாக, ரொம்ப நாராசமாக இருக்கும். இருட்டிய பிறகு வீடு திரும்புவதென்றால் பெரும்பாலும் நான் பக்கத்து வீதி வழியாகத்தான் வருவேன். அங்குதான் நாய்கள் எண்ணிக்கை குறைவு. அந்த வீதியின் வழியே வண்டியை...

கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)

ரசிகர்கள் புத்திசாலிகள், வாசகர்கள் விவரமானவர்கள், நாம் எழுதுவதைப் பற்றிக்கொண்டு மேலேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றெல்லாம் என் சக எழுத்தாளர்கள் அவ்வப்போது தமது ரசிகக் கண்மணிகளைச் சிலாகிக்கும்போது எனக்குச் சற்றுப் பொறாமையாக இருக்கும். ஜெயமோகன் தினமும் வெளியிடும் வாசகர் கடிதங்களைப் பாருங்கள். அவர் சொல்வதில் பிழையே இல்லை. பலபேர் ஜெயமோகனையே விஞ்சுமளவுக்கு ஞானமரபு எக்ஸ்பர்ட்டுகளாக இருக்கிறார்கள்...

பொன்னான வாக்கு – 21

இது அதிமுக தொகுதி; இது திமுக தொகுதி; இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி, இங்கே விடுதலைச் சிறுத்தைகள் ஜெயிக்கும்; என்று ஒவ்வொரு கட்சியும் அடித்துப் பேச இருநூற்று முப்பத்தி நாலில் ஒண்ணே ஒண்ணாவது கைவசம் இருக்கும். அட தமிழ்நாட்டில் காங்கிரஸ்கூட அந்த மாதிரி ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஒரு ஶ்ரீபெரும்புதூரை வைத்திருக்கிறது. சட்டமன்றமா, நாடாளுமன்றமா என்பதை விடுங்கள். சென்னைக்கு மிக அருகே காளஹஸ்திக்குப்...

பொன்னான வாக்கு – 20

முன்னொரு காலத்தில் ஓட்டு என்பது மூன்று வகைப்படும். நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு. இன்றைக்கு இது நான்கு வகையாக மாறியிருக்கிறது. நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, இல்லாத ஓட்டு, போட விரும்பாத ஓட்டு. வாக்குச் சீட்டில் சின்னம் பார்த்து முத்திரையிட்டுக்கொண்டிருந்த காலத்தில் செல்லாத ஓட்டுப் பிரச்னை நிறைய இருந்தது. இரக்க சுபாவம் மிக்க அப்பாவி மகாஜனங்கள் ஒன்றுக்கு இரண்டு மூன்று இடங்களில் கும்மாங்குத்து...

பொன்னான வாக்கு – 19

என் மிகச் சிறு வயதில் கண்ட ஒரு காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு மாட்டு வண்டி. அதற்கு கலர் பேப்பர் ஒட்டி, பலூனெல்லாம் கட்டி சைடில் சாத்துக்குடி பழங்களை வரிசையாகத் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பார்கள். வண்டிக்குப் பின்னால் ஒரு தட்டி, முன்னால் ஒரு தட்டி. ஃப்ளோரசண்ட் நிறங்களில் வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் கொட்டையாக வரைந்திருப்பார்கள். வண்டியில் நாலு பேர் உட்கார இடம் இருந்தாலும்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!