Categoryஅனுபவம்

ஐந்து நாவல்களின் புதிய மறு பதிப்புகள்

என்னுடைய ஐந்து நாவல்களின் புதிய மறுபதிப்புகள் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் வெளியாகின்றன. முன் பதிவு செய்வதன் மூலம் விலையில் இருபது சதம் தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கீழே உள்ளவை புதிய பதிப்புக்கான அட்டைப் படங்கள். அனைத்தையும் வரைந்தவர் ராஜன்.
இந்த ஐந்து நாவல்களையும் என்னுடைய பிற நூல்களையும் ஜீரோ டிகிரி இணையத்தளத்தின் மூலம் வாங்க இங்கே செல்லவும்.

 

டாஞ்ஞெட்கோ என்னும் இம்சை

இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஓர் இணையத்தளம் இருக்கிறதல்லவா? கவிக்கோ, கொக்கோ போல அதன் பெயர் டாஞ்ஞெட்கோ. அதில்தான் பல வருடங்களாக மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு முறை நான் லாகின் செய்யும்போதும் கடவுச் சொல் தவறு என்று சொல்லும். சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடும். அதுவும் ஒரு சங்கேதக் குறி போலவென நினைத்துக்கொண்டுவிடுவேன். இந்தப் பல்லாண்டு கால வழக்கத்தை...

அழைக்காதே.

ஒரு நூதனமான வழக்கம் உருவாகி வருவதைக் காண்கிறேன். முன் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் திடீரென்று மெசஞ்சரில் வருகிறார். ‘என் சிறுகதைத் தொகுப்பு / கவிதைத் தொகுப்பு / நாவல் வெளியாகியிருக்கிறது. உங்கள் முகவரி தந்தால் கொரியரில் அனுப்பி வைக்கிறேன்’ என்று ஒரு வரி மெசேஜ் அனுப்புகிறார். நான் பதிலளிக்காவிட்டால் மீண்டும் அதே மெசேஜ் மறுநாள் வரும். அப்போதும் பதில் சொல்லாவிட்டால், ‘ஒரு...

ஊசிப் போகாத காதை

உலக நாடுகள் விரும்பினால் கோ-வின் தளத்தின் தொழில்நுட்பத்தை அளிக்கத் தயாராக இருப்பதாக நமது பிரதமர் அறிவித்திருக்கிறார். நவீன காலத்தில் தானத்தில் சிறந்தது தொழில்நுட்ப தானம்தான். சந்தேகமேயில்லை. என் கவலையெல்லாம் கடந்த இரு வாரங்களாக அந்தத் தளத்துடன் துவந்த யுத்தம் புரியும்போது நான் அளித்த சாபங்களை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அளித்தால் பாரதப் புண்ணிய பூமி தாங்காதே என்பதுதான். நான் முதல் முறை...

கிறுக்குப் பயல்

எப்படி முயற்சி செய்தாலும் சில கிறுக்குத்தனங்களை என்னால் விட முடிவதேயில்லை. எழுத்தாளர்கள் கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. மிகவும் நேர்த்தியாக வாழும் பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். என்னுடைய கிறுக்குத்தனங்களுக்கான பழியை மரபணுவின் மீது போட்டுவிடலாமா என்றால் அதுவும் முடிவதில்லை. வம்சத்தில் என்னைத் தவிர பிறர் சரியாகத்தான் இருக்கிறார்கள். நான் மட்டும்தான்...

விபூதி யோகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds