Categoryஅரசியல்

வண்டி ரிப்பேர்

இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் அனுபவிக்கக்கூடிய நூதன அவஸ்தைகள் எதையும் எம்பெருமான் எனக்கு இதுநாள் வரை அளித்ததில்லை. ஓரிரு விபத்துகள், ஒரு சில சிராய்ப்புகள், வண்டிக்குச் சில பழுதுகள் என்னும் நியாயமான கஷ்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். 1993ம் வருடத்திலிருந்து நான் மொப்பெட், ஸ்கூட்டர் என்று ஓட்டி வந்திருக்கிறேன். சொல்லப்போனால் பஞ்சர்கூட நாலைந்து முறைக்குமேல் ஆகியிருக்காது. வண்டிக்கு நானும்...

என்ன செய்யப் போகிறாய்?

சுமார் பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன்னர் மண்டபம் பகுதியில் [ராமநாதபுரம் மாவட்டம்] சில மீனவர்களைச் சந்தித்து பேட்டி கண்டேன். அந்தப் பேட்டி, மண்டபம் முகாமுக்கு அப்போது வந்துகொண்டிருந்த இலங்கை அகதி மக்கள் தொடர்பானது என்றபோதும் மீனவர்களின் வாழ்க்கை, தொழில் சார்ந்த சில விஷயங்களும் அதில் பேசப்பட்டன. இப்போது பேசப்படுகிற மீனவர்களின் பிரச்னை அப்போதும் இருந்தது. பெயர் மறந்துவிட்டது என்றபோதும் நான்...

ஒத்திகைகள் ஒழிக!

நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு நண்பர் ப்ரூனோ என் அலுவலகத்துக்கு வந்தார். கண்ணனுடன் அவருக்கு ஏதோ வேலை இருந்தது. நான் புறப்பட இருந்த சமயம். அமெரிக்க தூதரகத்தில் ஏதோ பிரச்னை; அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் என்று சொன்னார். நான் வீட்டுக்குப் போகும் வழியில் அண்ணாசாலை அதிகம் வராது. மிஞ்சிப் போனால் முன்னூறு மீட்டர். எல்டாம்ஸ் சாலை சிக்னல் முதல் அறிவாலயம் வரை மட்டுமே. இடப்புறம் விஜயராகவாச்சாரி...

கழுதைகள் இழுக்கும் வண்டி

சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள். முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த...

மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்

இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே...

கார் விலங்கு

நண்பர் ஒருவர் என்னை அலுவலகத்தில் சந்திக்க இன்று வந்திருந்தார். பல வருட நண்பர். பல காலம் கழித்து சந்திக்கிறோம். எனவே நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். என்னென்னவோ விஷயங்கள். இலக்கியம். சினிமா. அக்கப்போர். மென்பொருள். என் வீடு. அவர் வீடு. என் மாவா. அவரது வெற்றிலை சீவல். எழுத்து. பத்திரிகை. தொடர்கள் இத்தியாதி. விடைபெற்றுப் புறப்பட்டவருடன் வாசல்வரை போனபோது ஒரு கணம் இரண்டு பேருமே...

ஒருவர் பலி

என் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வருகிற ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குள், நடுச்சாலையில் நான்கு இடங்களில் ‘ஒருவர் பலி’ என்று மஞ்சள் பெயிண்டில் எழுதியிருக்கிறார்கள். வெறுமனே எழுதியிருந்தாலும் சரி. மேலே கீழே எலும்புக்கூடு பொம்மையெல்லாம் போட்டு சுற்றிலும் ஓர் அபாய வட்டம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் விபத்து நடந்தது, நீ வண்டி ஓட்டும்போது கவனம் என்று எச்சரிக்கும் நோக்கம்தான். ஆனால்...

இரண்டு முக்கிய அறிவிப்புகள்

1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
– செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை]
2.  பழ. நெடுமாறன் அறிக்கை.
இது அபத்த அரசியல்களின் நேரம்.

முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம்.   தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு. கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று...

முடிந்தது

பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள்...

இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. * நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட...

தேர்தல் 2009 – என்ன சொல்கிறது?

* தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சிகளைத் தராமல் வந்துகொண்டிருக்கின்றன. * மத்தியில் ஆளும் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சியமைப்பது அநேகமாக உறுதியாகியிருக்கிறது. மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார். *எதிர்பார்த்ததற்கு மாறாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி கணிசமான இடங்களில் முன்னணியில் இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் மூச்சு விட்டுக்கொள்கிறது. * ஈழப் பிரச்னையோ...

இந்தியத் தேர்தல் 2009 – Live

நண்பர்களுக்கு வணக்கம். பொதுவாக எனக்கு ஒரு ராசி உண்டு. புத்தகக் கண்காட்சி, லோக்சபா தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஏதாவது வெளியூர் நிகழ்ச்சி என்று லைவ் அப்டேட் செய்யலாம் என்று உத்தேசித்தால், விட்டேனா பார் என்று எப்போதும் விதி விளையாடும். உடம்புக்கு முடியாமல் போகும், கை கால் உடையும், ஜுரம் வரும், வேறு ஏதாவது வேலைகள் வரும், அட ஒன்றுமில்லையென்றால் இணையத் தொடர்பாவது இல்லாமல் போகும். எனவேதான் இன்றைய...

போட்டாச்சு.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய வாக்கைப் பதிவு செய்தேன். எப்போதும் வாக்குச்சாவடியில் முதல் பத்து வாக்காளர்களுள் ஒருவனாக இருப்பதே என் வழக்கம். இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி குரோம்பேட்டை சென்று வாக்களிக்க வேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. நான் குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாக...

கண்ணீரும் புன்னகையும்

இன்றைக்கு மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அல்லது தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக இங்கிருந்து வேறென்ன செய்ய முடியும்? மேடைப்பேச்சு, அறிக்கைப் புரட்சி, டிவி பேட்டிக்கு அடுத்தபடி இது. எனவே இன்று பஸ்கள் ஓடாது. கடைகள் இருக்காது. கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். ஈழத்தில் போர் நின்றுவிடும். இதைவிட...

ஜோக்கர்

மனித வாழ்வின் மாபெரும் அவலங்கள் எவையென்று யோசித்துப் பட்டியலிட்டால், ஒரு பெரிய ஆகிருதியின் பிம்பம் உடைந்து சிதறுவது அதில் அவசியம் இடம் பிடிக்கும். தமது அறுபதாண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்வில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இத்தனை நொறுங்கி, மலினப்பட்டு, ஒரு பிரம்மாண்டமான கேலிச்சித்திரமாகிப் போன தருணம் இன்னொன்றில்லை. நேற்றைக்கு போரஸ் மன்னனாகக் காட்சியளித்த பிரபாகரன் இன்றைக்கு நல்ல நண்பராக அவருக்குக்...

புளித்த பழம்

இது தொடர்பாக எழுதவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். ஏனோ முடியவில்லை. காலை செய்தித் தாளில் கலைஞரின் செயற்குழுப் பேச்சு விவரங்கள் பார்த்தபிறகு இந்தியாவில் அல்ல, உலகிலேயே இவருக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதி இருக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஈழம் மலர்ந்தால், அங்கே...

மூன்று விஷயங்கள்

நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித்...

யுத்தம் சரணம்: சில விமரிசனங்கள், சில விளக்கங்கள்

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியாகும் என்னுடைய ‘யுத்தம் சரணம்’ தொடர் குறித்து இணையத்தில் வெளியாகும் சில விமரிசனங்களைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து சில வாசகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நண்பர் சுரேஷ் யுத்தம் சரணம் அறிவிப்பு வெளியான பதிவில் இன்று இதனை ஒரு வினாவாக முன்வைத்துள்ளார். வாசகர்களின் வசதிக்காக அவரது கருத்தைக் கீழேயும் அளித்திருக்கிறேன். இது பற்றிய என் கருத்துகள் இதனைத் தொடர்ந்து...

காட்டுமிராண்டிக் கல்லூரி

இரான், ஆப்கனிஸ்தான் போன்ற தேசங்களில் கல்லால் அடித்து, உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட சில சம்பவங்கள் நடந்தபோது காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாத அடிப்படைவாத அயோக்கியர்கள் என்றும் நாம் உள்பட உலகமே கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். நேற்றைக்கு, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கலவரத்தின் சில காட்சிகளை வீடியோ படமாகப் பார்த்தபோது...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி