Categoryநகைச்சுவை

தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை?

புத்தகக் கண்காட்சி நெருங்கும் நேரத்தில் எழுத்தாளர்களை எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறது. எழுதுவது குறித்த பதற்றம் இல்லை அது. எத்தனை கிலோ அல்லது கிலோபைட் வேண்டும்? இந்தா சாப்டு என்று அள்ளிப் போட அவர்களால் முடியும். பிரச்னை வாசகர்கள் சார்ந்தது. இந்தத் தமிழ் வாசகர்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை? உலகமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். பரதேசி, இதில்...

செத்தான்யா!

வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நண்பர், நண்பரொருவர் இன்று மாலை மிகுந்த ஆவேசமுடன் வந்தார். அவர் வந்த நேரம் நான் முந்தானை முடிச்சு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரேமாவின் சதித் திட்டங்கள் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ‘வாங்க. இன்னிக்கி அமர்க்களமான எபிசோட். உக்காருங்க’ என்றேன். ‘சீ! என்ன மனுஷன் நீ. ருத்ரய்யா...

நாசமாய்ப் போகும் கலை

புத்தக வெளியீட்டு விழா வைக்காவிட்டால் எழுத்தாளனே இல்லை என்றார் நண்பரொருவர் என்னும் நண்பர் ஒருவர். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. என் பேர் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சந்து பொந்துகளில் உலவிக்கொண்டிருக்கின்றன ஐயா! என்று சொல்லிப் பார்த்தேன். ம்ஹும். அதெல்லாம் கணக்கிலேயே சேராது என்று அடித்துச் சொல்லிவிட்டார். ‘ஒரு புத்தகம் வருகிறதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால் அதைப் பற்றிப்...

நான் கேசரி சாப்பிட்ட கதை

சிக்கல். பெரும் சிக்கல். ஒரு புருஷனாகப்பட்டவன் சமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று விரும்புவது ஒரு பெண்ணாதிக்க மனோபாவம் என்பது பெரும்பான்மை மற்றும் மிச்சமிருக்கும் சிறுபான்மைப் பெண்களுக்குத் தெரிவதேயில்லை. இந்த அறியாமைக்கு உரம் போட்டு வளர்ப்பதில் சில பெண்ணியச் சார்பு ஆண்கள் அதிதீவிர ஆர்வம் காட்டுவது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அவலம். நான் வசிக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டின்...

ஜடாமுடிக்கு வழியில்லை!

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது. மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி...

எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு...

பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை. நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில்...

ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி