நான் வசனம் எழுதியிருக்கும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் படம் பார்க்க வரலாம்’ என்று சற்றுமுன் இயக்குநர் வடிவுடையான் போனில் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. கீழே சில புகைப்படங்கள். விரைவில் ஒரு கட்டுரை.
அ (அல்லது ஆ!) புனைவு
மண்டபத்தில் யாரும் உதவாமல் நானே சொந்தமாகச் செய்துபார்த்த முயற்சி. மெதுவாக ஓடும் படம் என்பதால் இதனைக் கலைப்படம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் கலைக்கு எதிரான படமும் அல்ல என்பதால் என்ன சொல்வதென்று சரியாகத் தெரியவில்லை. மொத்தத்தில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் உறுதி. இந்த அபாரமான படமாக்கல் முயற்சியை இவ்வழியில் என் முன்னோரான ரைட்டர் பேயோனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
கிழக்கு உலக சினிமா
வரும் ஞாயிற்றுக்கிழமை [6.6.2010] மாலை 5.30 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக. இயக்கம் : Hany Abu-Assad எழுத்து : Hany Abu-Assad – Bero Beyer ஒளிப்பதிவு : Antoine Heberle 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது...
கனகவேல் காக்க – நாளை முதல்
நான் வசனம் எழுதியிருக்கும் ‘கனகவேல் காக்க’ திரைப்படம் நாளை [மே 21] வெளியாகிறது. உலகத் திரை சரித்திரத்திலேயே முதல் முறையாக என்றெல்லாம் கப்சா விடத் தயாரில்லை. சுத்தமான, அக்மார்க் கமர்ஷியல் மசாலா. கரண், ஹரிப்ரியா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், சம்பத் ராஜ் நடித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசை. சுரேஷ் அர்ஸ் எடிட்டிங். இயக்குநர் சரணிடம் பல்லாண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் மிக்க கவின்பாலா இப்படத்தை...
அங்காடித் தெரு
வலையில் என்னவாவது எழுதியே ஆகவேண்டுமென்று எனக்கு எப்போதும் ஒரு தீவிரம் இருந்ததில்லை. அதனாலேயே அவ்வப்போது எழுதாமலிருப்பேன். அவசியம் இருந்தாலோ, எழுதிப்பார்க்கும் எண்ணம் இருந்தாலோ மட்டுமே எழுதி வந்திருக்கிறேன். பல சமயம் வேலைகள் எழுத விடாமல் தடுக்கும். இந்த முறையும் அப்படியே. மற்றபடி, ஏன் எழுதவில்லை என்று தினசரி கேட்கிற பிரதீப் குமாருக்கும், என்ன ஆயிற்று என்று சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேட்கும்...
திரையும் கதையும்
சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை. சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக...
கனகவேல் காக்க
கனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்ஷன்...
‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’
சகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது. இந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி...