பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது. ‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை. பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும் அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும். நமது பிறப்பு அப்படி. ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும்...
குசலவபுரி என்கிற கோயம்பேடு
வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?
பாராவின் பங்கெடுத்து வை
மிகப் பல வருடங்களுக்குப் பிறகு இன்று திருநீர்மலைக்குக் குடும்பத்துடன் சென்று வந்தேன். குரோம்பேட்டையில் இருந்த காலத்தில் அது பக்கத்து க்ஷேத்திரம். எனக்கு முன்னால் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வார் திருநீர்மலைக்குப் போனபோது ரங்கநாதப் பெருமாளை ஏறிச் சென்று சேவிக்கக்கூட அவரால் முடியவில்லை. பெரிய மழைக்காலம் போலிருக்கிறது. ஊர் முழுக்க தண்ணீர்...
சுகம் பிரம்மாஸ்மி – 7
இளங்கோவன் ஒரு நாத்திகர் என்று ரங்கராஜன் சொன்னது எனக்கு மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. அவர் குருகுல வாசம் செய்த இரு இடங்களுமே சாமிநாதய்யார் தமது என் சரித்திரத்தில் விவரிக்கும் சைவ மடாலயங்களுக்கு நிகரானவை. ஆசார அனுஷ்டானங்கள் மிக்க, கடும் நியம நிஷ்டைகள் கடைப்பிடிக்க வேண்டிய இடங்கள். முதலாவது கி.வா. ஜகந்நாதன் பள்ளி. அடுத்தது ஏ.என். சிவராமன் பள்ளி. இந்த இரண்டு பத்திரிகை உலகப் பெரியவர்களையும் நான்...
சுகம் பிரம்மாஸ்மி – மீண்டும்
2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் சுகம் பிரம்மாஸ்மி என்றொரு தொடரை இத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆறு அத்தியாயங்கள் வரை எழுதினேன். பிறகு தொடர இயலாது போய்விட்டது. பல்வேறு பணி நெருக்கடிகள், கவனச் சிதறல்களே காரணம். இன்றைக்குச் சற்று நேரம் முன்பு என் நண்பர் ஒருவருடன் – அவர் ஒரு நல்ல நாத்திகர் – கடவுளைப் பற்றியும் சாதுக்கள் பற்றியும் தத்துவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க...
சரஸ்வதி பூஜை
ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க என்று திரேதா யுகத்தில் நான் முதல் முதலில் எழுதத் தொடங்கிய போதிலிருந்தே எனக்கு சரஸ்வதியைப் பிடிக்கும். சரஸ்வதி கடாட்சமிருந்தால்தான் எழுத வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தது ஒரு காரணம். எழுத வந்தது இன்னொரு காரணம். மற்றப் பண்டிகைகளைக் கொஞ்சம் முன்னப்பின்ன கவனித்தாலும் சரஸ்வதி பூஜையை விடமாட்டேன். ரொம்ப சிரத்தையாகப் புத்தக அலமாரிகளை ஒழுங்கு செய்து, தூசு தட்டித்...
சுகம் பிரம்மாஸ்மி – 6
அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு – தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத் துப்பில்லாத மொக்கை புத்தி...
சுகம் பிரம்மாஸ்மி – 5
நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது. படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த. இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ்...