அந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்து வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல்...
மழை
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சியை மழை வரவேற்கிறது. நேற்று வரை ஒன்றுமில்லை. ஆனால் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், மதியத்துக்குப் பிறகு பொழியத் தொடங்கியிருக்கிறது. நாளைக்குள் நின்றுவிட்டால் நல்லது. நாளை பேய் மழை பெய்யும் என்று பூப்போட்ட சட்டை அணிந்துகொண்டு வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் இன்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினாலொழிய பொழியாமல் விடப்போவதில்லை...
குரல் கொடுங்கள்!
99411-37700 575758 முதலாவது தொலைபேசி அழைப்புக்கு. அடுத்தது எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு. மேற்படி மொபைல் எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். எங்களுடைய New Horizon Mediaவின் புத்தகங்கள் பற்றி, உங்கள் எதிர்பார்ப்புகள், பாராட்டுகள், கோபங்கள், கண்டனங்கள், ஆர்வங்கள், அக்கறைகள் அனைத்தையும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு சொல்லலாம். எங்களுடைய வெளியீடுகள் தொடர்பாக நீங்கள் என்ன கேட்க / பேச விரும்பினாலும் சரி...
அம்பைக்கு இயல் விருது
2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத்...
ஓர் அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த பதிவுகள் அடுத்து வரும் தினங்களில் இங்கு அதிகம் இடம்பெறும். அநேகமாக அவை மட்டுமேகூட இடம்பெறலாம். பதிவாக வெளியிட வேண்டிய அளவு அவசியமற்ற சுருக்கமான தகவல்களை ட்விட்டரில் அப்டேட் செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதுவும் உடனுக்குடன் இந்தத் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். இந்தக் காரணங்களால்…
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வரைபடம்
சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள் இருக்கப்போகிற அரங்குகளை மட்டும் தனியே...
Top 100 புத்தகங்கள்
புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்னென்ன முக்கியம் என்று நண்பர்கள் சிலர் மின்னஞ்சலில் கேட்டார்கள். உண்மையில் எனக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் சில வெளியீட்டு அழைப்பிதழ்கள், புத்தக மதிப்புரைகளின்மூலம் ஒன்றிரண்டு நூல்களைத்தான் குறித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு தினங்களில், புதிதாக வருகிற நூல்களுள் எனக்கு முக்கியமாகப் படுபவை குறித்து எழுதுகிறேன்.
சென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்
நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்:
* அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார்.
* இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம்.
* மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி.
* வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம்.
சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்
1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? 2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? 3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? 4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? 5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? 6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை...
மொட்டைமாடியில் கிடைத்த ஒரு பழைய கோயிஞ்சாமி
மொட்டை மாடியில் புத்தக அறிமுகம், வெளியீடு, ஏற்புரை, கலந்துரையாடல். கொஞ்ச நாளாயிற்று இதெல்லாம் பார்த்து. அதனால் கிழக்கு பதிப்பக அலுவலகத்திற்கு ஒரு விசிட். முதலில் நியூஸ் ரீல். மாலன் கட்டுரைத் தொகுப்பு ‘என் ஜன்னலுக்கு வெளியே’, பத்திரிகையாளர் ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ஒலி எஃப். எம். பொன். மகாலிங்கம் பெற்றுக்கொள்ள, ஜென்ராம் புத்தகம் பற்றிப் பேச, பத்ரி சில கருத்துக்கள் சொல்ல, மாலன் ஏற்புரை வழங்க...