ArchiveSeptember 2009

சரஸ்வதி பூஜை

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க என்று திரேதா யுகத்தில் நான் முதல் முதலில் எழுதத் தொடங்கிய போதிலிருந்தே எனக்கு சரஸ்வதியைப் பிடிக்கும். சரஸ்வதி கடாட்சமிருந்தால்தான் எழுத வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தது ஒரு காரணம். எழுத வந்தது இன்னொரு காரணம். மற்றப் பண்டிகைகளைக் கொஞ்சம் முன்னப்பின்ன கவனித்தாலும் சரஸ்வதி பூஜையை விடமாட்டேன். ரொம்ப சிரத்தையாகப் புத்தக அலமாரிகளை ஒழுங்கு செய்து, தூசு தட்டித்...

கார் விலங்கு

நண்பர் ஒருவர் என்னை அலுவலகத்தில் சந்திக்க இன்று வந்திருந்தார். பல வருட நண்பர். பல காலம் கழித்து சந்திக்கிறோம். எனவே நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். என்னென்னவோ விஷயங்கள். இலக்கியம். சினிமா. அக்கப்போர். மென்பொருள். என் வீடு. அவர் வீடு. என் மாவா. அவரது வெற்றிலை சீவல். எழுத்து. பத்திரிகை. தொடர்கள் இத்தியாதி. விடைபெற்றுப் புறப்பட்டவருடன் வாசல்வரை போனபோது ஒரு கணம் இரண்டு பேருமே...

சிறுகதை எழுதுதல்

சிவராமனுடைய உரையாடல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறுகதைப் பயிலரங்கில் நான் நிகழ்த்திய ப்ரசண்டேஷன் இது. ஆடியோவுடன் கூடியது. முழு உரையின் வீடியோ பதிவை நீங்கள் பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து பெறலாம். Writing short stories for Tamil magazines View more presentations from Badri Seshadri. பத்ரியின் பதிவிலிருக்கும் அதே வீடியோ தொகுப்பை இங்கும் வெளியிட்டுப் பார்க்கிறேன். வேலை செய்தால் சந்தோஷம். பா...

திரையும் கதையும்

சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை. சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக...

சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை...

நினைக்காத நாளில்லை

என்றும் நினைக்க வேண்டும். இன்றாவது நினைக்கலாம். மகாகவி பாரதி நினைவு தினம் இன்று [செப் 11].
எனவே இன்றொருநாள் குறுங்குடிலில் என் வெண்பாம் இம்சைகள் இருக்காது.

பாம்புப் பிரச்னை

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம் கலங்குவதெவரைக் கண்டால் அவர் என்பர் கைவில்லேந்தி இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக் கிறுதி யாவார். கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. எளிமையாக இதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமென்றால் இவ்வாறு சொல்லலாம்: ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான்...

அஞ்சலி

இங்கு லிங்க் கொடுத்த ஐபிஎன் லைவ் வீடியோ வேலை செய்யவில்லை. இனி அது வேலை செய்தும் உபயோகமில்லை. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார் என்று சற்றுமுன் செய்தி வந்திருக்கிறது. அவரோடு பயணம் செய்த நால்வரும் உயிர் இழந்திருக்கிறார்கள். மோசமான விபத்து. கர்னூலுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகுண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. நேற்று காலை தொடங்கி ஒரு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி