ArchiveMarch 2011

புரட்சி 2011

வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்களில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சி குறித்த என்னுடைய புதிய புத்தகம் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ இன்று வெளியாகிறது.

மொட்டை மாடியில் ஞாநி

மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...

கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி

எங்கள் அலுவலகத்தில் கீழ்க்கண்ட இரண்டு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்.   1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator) வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல். தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக...

ஒருநாள் கூத்து

பல்லாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இன்று கிரிக்கெட் மேட்ச் பார்த்தேன். ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய மேட்ச். இன்று முழுதும் ட்விட்டரில் எழுதிய கிரிக்கெட் குறுங்கடிகள் சிலவற்றின் தொகுப்பு இது. முழுதும் வாசிக்க இங்கே செல்லலாம். ட்விட்டர் இலக்கணப்படி கீழிருந்து மேலாகப் படித்தால் தொடர்ச்சி புரியும்.

வண்டி ரிப்பேர்

இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் அனுபவிக்கக்கூடிய நூதன அவஸ்தைகள் எதையும் எம்பெருமான் எனக்கு இதுநாள் வரை அளித்ததில்லை. ஓரிரு விபத்துகள், ஒரு சில சிராய்ப்புகள், வண்டிக்குச் சில பழுதுகள் என்னும் நியாயமான கஷ்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். 1993ம் வருடத்திலிருந்து நான் மொப்பெட், ஸ்கூட்டர் என்று ஓட்டி வந்திருக்கிறேன். சொல்லப்போனால் பஞ்சர்கூட நாலைந்து முறைக்குமேல் ஆகியிருக்காது. வண்டிக்கு நானும்...

போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!

மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம்...

சூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்?

நான் திரும்பத் திரும்ப வாசிக்க விரும்பும் புத்தகங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன். சினிமாவில் இருப்பவர்கள், சினிமாவின்மீது ஈர்ப்பு இருப்பவர்கள் இரு தரப்புக்கும் இது ஒரு விசேஷமான கதை. லட்சக்கணக்கான வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக ரசித்துவரும் படைப்பு என்பது உண்மையே. ஆனால் சினிமா பிரியர்களுக்கு இது ஒரு தீராத வியப்பளிக்கும் கதை. காரணம், இதைவிடச் சிக்கலான ஒரு கதையை, இதைவிட நேர்த்தியாகத் திரைக்கதை வடிவில்...

அழைத்து அலுத்தோர் கவனத்துக்கு

ஒரு வேலையை எடுத்துக்கொண்டு, தொடங்கிய நிமிடத்திலிருந்து வேறு எது குறித்தும் சிந்திக்காமல், வேறு எதையும் செய்யாமல், எடுத்துக்கொண்டதைமுடிப்பது ஒன்றே குறியாக இருந்து, நினைத்ததைச் சாதிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இம்மாதிரி எதையாவது செய்து பார்ப்பது என் வழக்கம். வெற்றி தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல. செயல், அதனைச் செய்து முடிப்பதில்தான் சிறப்படைகிறது

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me