வலை எழுத்து

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 1)

கதையை படித்தவுடன் “An Idle man’s mind is devil’s workshop” என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. வெற்றிடத்தில்…. சோம்பேறிகளின் பாசறையில்…. சாத்தான் சுலபமாக இடம் கொள்ளும். சுயசிந்தனை இல்லாதவர்களை தன் விருப்பம்போல் ஆட்டுவிக்கும் .அத்தகு சாத்தான் எனப்படும் சூனியனைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது கதை. குழந்தை பருவத்தில் படித்த காமிக்ஸ் கதைகளை நினைவூட்டுகிறது...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியின் தலையில் இறங்கிய சூனியன், அவன் வம்சத்தின் அருமை பெருமைகளையும், அவனது இல்லற வாழ்வின் இனிமையையும் விவரிப்பது தான் இந்த அத்தியாயத்தின் சுருக்கம். அத்தியாயத்தின் இறுதியில் கோவிந்தசாமி அவன் மனைவியுடன் இணைய சூனியன் உதவி செய்கிறார். சோறு காணாதவன் கையில் பிரியாணிப்பொதி கிடைத்தால் அது தான் கோவிந்தசாமியின் காதலும் அவன் மனைவி சாகரிகாவும். பெண்ணுக்குரிய இலக்கணத்தையெல்லாம் மீறியது சாகரிகாவின்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 4)

கதையின் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில்தான் அவன் அறிமுகமானான். அவன்தான் இந்தக் கதையின் கதாநாயகன் என அறிய முடிகிறது. அதற்கேற்றார் போல கதை மிகுபுனைவிலிருந்து விலகி யதார்த்த களத்திற்கு வந்து விட்டது. இந்தக்கதையில் இந்த அத்தியாயத்தில் வரும் கதைகளோ சம்பவங்களோ எதுவுமே கற்பனை இல்லை. அனைத்துமே உண்மைச் சம்பவங்கள் தாம். அதிலும் நாம் அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கிற மனிதர்களின் அனுபவங்கள். நாம்...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 4)

எதிர்பார்க்கவே முடியாத திருப்பம். சூனியனைச் சுற்றி தான் கதை நகரும் என்று என்ணியிருந்த எனக்கு, இவ்வத்தியாயத்தின் இறுதி வாக்கியமெல்லாம் எதிர்பார்க்கவே முடியாததாய் இருந்தது. ஆனால் ஒன்று, அந்த நீல நகரம் பூமியின் ஒரு பகுதி தான். அது எப்படி புவியிலிருந்து பிரிந்து அண்ட வெளியில் அதிலிருக்கும் மனிதர்களுக்கு பாதகமில்லாமல் பயணிக்கிறது என்பதை சென்ற பதிவிலேயே கேட்டிருந்தோம். சரி, இந்த அத்தியாயத்தைப்...

தொற்று

முகக் கவசம் அணிந்தேன். ஆனாலும் கொரோனா பிடித்துக்கொண்டது. ஆம். நடக்கும். யாரையும் நெருங்கிப் பேசவில்லை. கை குலுக்கவில்லை. இருப்பினும் அது வந்தது. ஆம். வரும். தியேட்டருக்குப் போகவில்லை. மாலுக்குப் போகவில்லை. கும்பலில் சேரவில்லை. அவசர, அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும்தான் வெளியே சென்றேன். இருப்பினும் பாதிக்கப்பட்டேன். சாத்தியம்தான். நாளெல்லாம் அலைந்து திரிந்து உழைக்கும் எத்தனையோ பேருடன் ஒப்பிட, என்...

கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 4)

சூனியன் தப்பி விட்டான் என்ற பதட்டத்தை விட, சூனியன் ஒருவர் தலையிலேறி உள்நுழைந்தது ஒரு பதட்டம். அதை விட பதட்டம் அந்த நினைவிடுக்குகளில் புதைந்திருக்கும் சேதிகள். அம்மனிதன் பூமியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை போல் ஒருவனே,.. ஆனால்…. கோவிந்தசாமி என்ற அம்மனிதன் பிறப்பில் இருந்து அவன் திருமணம் வாரை வேகமான அறிமுகத்தை காண்கையில் கதை வேறு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் என தோன்றுகிறது. சென்னையில் (என...

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனியக்காரன், தனது மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நாடு கடத்தப்படுகிறான். அவன் பயணிக்கும் அந்த கப்பலானது எலும்புக்கூடுகளால் செய்யப்பட்டது. அந்த நிலையிலும் சூனியக்காரன் மார்தட்டி சொல்கிறான் உயிர் மரித்து போனால் எஞ்சுவது எலும்பு மட்டுமே ஆனால் அதுகூட எங்களுக்கு இல்லையென்பதால் நாங்கள் கடவுளையே மிஞ்சிவிட்டோம் என்கிற கர்வத்துடன் அந்த மிதக்கும் கப்பலில் பயணிக்கிறான். ஆனால் அவன் எந்த தருணத்திலும் தப்பிக்க...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)

சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க...

கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 3)

சாகசமின்றி தப்பித்தல் இயலாது. தப்பிக்கும் முயற்சியில் உயிர் பிரிதலும் ஒரு வித தப்பித்தலே. ஆயுதம் தந்த வலியும் வார்த்தை தந்த வேதனையும் , அவமானம் தந்த ஆக்ரோஷமும் பெற்ற சூனியன் தப்பிக்க தன்னையே ஆயுதமாக்கிக்கொள்வது வேறுவழியற்ற வாய்ப்பு. பிசாசுகடைத்த பூகம்பச்சங்கு தாங்கி, நீலநகரத்தின் மீது மோத ஒப்புக்கொள்வது தப்ப வாய்ப்புள்ள ஒரே முயற்சி. சுயநலமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூனியர்களுக்கும்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 3)

அவன் தப்பிக்கவேண்டும் என முடிவெடுத்து விட்டான். அதைச் செயல்படுத்தியே தீருவது என்னும் தீவிரம் அவனை அங்கு நடக்கும் சூழல்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தூண்டுகிறது. அவன் காய்களை நகர்த்துகிறான். தன்னம்பிக்கை மிகுந்தவன் அவன். அவன் நல்லவனா கெட்டவனா என்பது இரண்டாம் பட்சம். அந்த அபார தன்னம்பிக்கைதான் அவனை அந்த ஆபத்திலிருந்து காக்கப் போகிறது. அவன் என்ன அவ்வளவு நல்லவனா என்னும் கேள்விக்கும் அவன் என்ன...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓