பூமியில் இருந்து மாறுபட்டு இருக்கும் நீல நகரம் மற்றும் சூனியர்களின் உலகம் இரண்டையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வருணித்திருப்பது படிப்பவரை பிரமிக்க வைக்கிறது . சூனியர்களின் உலகில் இருக்கும் வீடுகளின் கட்டமைப்பை எடுத்துச் சொல்லியிருக்கும் விதத்தில் ஆசிரியரின் கற்பனை திறன் ஆச்சரியப்படுத்துகிறது. படிக்கும் பொழுது சிறு குழந்தையாய் நம்மை வாய் பிளக்கச்செய்கிறது. நீல...
கபடவேடதாரி – சிவகுமாரன் ராமலிங்கம் மதிப்புரை (அத்தியாயம் 1)
‘நியாயத்தீர்ப்பின்படி நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன்’ என்ற வார்த்தைகளில், ஏனோ பட்டாம்பூச்சி நாவலின் வரிகளில் மனம் ஆழ்ந்து, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக பயணிக்கத் தொடங்கியது, கதையுடனான என் உள்மனச் சாத்தான். ஒவ்வொரு மாட்டிக்கொள்ளும் பிரச்சினையிலும் என் மனம் பயணிக்கும் விதம்தான் அந்த விசாரணை போகும் விதமும். யூதாஸை என் மானசீக மனமாக அல்லது என் மூதாதையாக கற்பனை செய்தால், கதையை காமிக்ஸாக...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 8)
பாரா அவர்கள் அழுத்தமான நல்ல அரசியல் பேசியிருக்கிறார் இந்த அத்தியாயத்தில். சங்களின் பல அம்சங்களையும் கோவிந்தசாமியின் கதாப்பாத்திரத்தில் நேர்த்தியாக அமர வைத்திருப்பது தெள்ளத்தெளிவாக இந்த அத்தியாயத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிறது. இந்திய தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து மாநாட்டில் பேசிய அந்த தலைவரின் ஹிந்தி மொழி புரியாத போதிலும், கோவிந்தசாமி உணர்ச்சிவசப்பட்ட இடம் மடத்தனமாக இருந்தது. அதுவே அவனை முழுமையாக...
நெஞ்சில் நிற்கும் சித்திரம்
ஒரு மகத்தான கட்டுரை எப்படி இருக்கும்? எப்போது யார் கேட்டாலும் நான் சுட்டிக்காட்டுவது முத்துலிங்கத்தின் ‘நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்.’ இந்தக் கட்டுரையை முதலில் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ தொகுப்பில் படித்தேன். பிறகு இப்போது முழுத் தொகுப்பின் முதல் பாகத்தில் கண்டபோதும் ஆர்வமுடன் படித்தேன். திரும்பவும் படிப்பேன். எனக்கு இது சலிக்காது. கட்டுரையின் சாரம் இதுதான்:...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 7)
ரகசியம்! நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள தூண்டுகிறது தானே. ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்லவந்து, அதை தொடங்கிய நொடியில், அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றால், நாம் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரை பின்தொடர்கிறோம் தானே. ரகசியங்கள் நிறைந்த நம் உலகில் சில உப்புசப்பில்லாத வாழ்வுகூட இனிகிறதல்லவா. ஆனால் பாராவின் நீலநகரம் அவ்வாறில்லை. அதில் அனைவரின் வாழ்வை அனைவரும் அறிவர். இதுவே இந்த...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 7)
ரகசியம்! நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள தூண்டுகிறது தானே. ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்லவந்து, அதை தொடங்கிய நொடியில், அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றால், நாம் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரை பின்தொடர்கிறோம் தானே. ரகசியங்கள் நிறைந்த நம் உலகில் சில உப்புசப்பில்லாத வாழ்வுகூட இனிகிறதல்லவா. ஆனால் பாராவின் நீலநகரம் அவ்வாறில்லை. அதில் அனைவரின் வாழ்வை அனைவரும் அறிவர். இதுவே இந்த...
கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 9)
“அட, அடிமடையா கோவிந்தா.. உனக்கெதற்கு பாண்டிச்சேரி விஜயம்? உன் எதிர்காலமே ததிங்கிணதோம் போட்டுக்கொண்டிருக்க, கடந்தகாலத்தை ஆராய்ந்து என்ன செய்யப்போகிறாய்? ஆனால் மிகத்தெளிவாக இருந்தாள் சாகரிகா. பணம் போனால் போகிறதென கோவிந்தசாமியை பேக்கப் செய்தாள். அடிமுட்டாள் ,, அல்லது.. ஒரே நேர்கோடான சிந்தனை உடையவன் கோவிந்து என்றறிந்து அவனிடம் கிரைப் வாட்டர் என்ற கோட் வேர்டை சொன்னால், கோவிந்து பாண்டியிலிருந்து...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 9)
இந்த அத்தியாயத்தின் முதல் சில வரிகளைப் படித்ததும் சற்றுக் குழம்பிவிட்டேன். கபட வேடதாரி தான் படித்துக் கொண்டிருக்கிறேனா அல்லது தவறுதலாக வேறு ஏதேனும் புத்தகத்தை திறந்து விட்டேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. இல்லை கபட வேடதாரி தான். ஆனால் கதாசிரியர் கதையை வேறு ஒரு தளத்துக்குத் திருப்பி விட்டார் போலும். எனக்கு என்ன சந்தேகம் என்றால் சூனியனுக்குத்தான் உண்மையில் பாரா மீது கோபமா? அல்லது தான் எழுதிய...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 9)
இந்த அத்தியாயத்தில் சில திருப்பங்கள் இருக்கின்றன. இதுவரை சூனியன் மூலமாக சொல்லப்பட்ட கதையை இன்னொருவர் தொடரப்போவதாக சூனியன் சொல்கிறான். அவன் சொல்வதைப் பார்த்தால் கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதி இன்னொருவரால் சொல்லப்படும்போல் தெரிகிறது. அந்த இன்னொருவர் யார் என்பது சஸ்பென்ஸ். அந்த குறிப்பிட்ட பகுதியை அந்த இன்னொருவர் சொல்வதற்கு முன்னர் அந்த சம்மந்தப்பட்ட நபரே அதை சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 6)
மீண்டும் மாய உலகினை நோக்கி பயணிக்கிறது கபடவேடதாரி. வித்தியாசமாக சித்தரிக்கபட்டிருக்கும் நீலநிறவாசிகளின் தோற்றங்கள் மேலும் ஆர்வமாக கதையை வாசிக்க வைக்கிறது. அந்த தோற்ற சித்தரிப்பு கொடுரமாக இருப்பினும், வேறு மாதிரியான ஓர் உலகினில் பயணிப்பது அருமையாக இருக்கிறது. சூனியனை போலவே கோவிந்தசாமியை போலவே நானும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை. ஒருவேளை கோவிந்தசாமியின் தோற்றமும்...