இந்த அத்தியாயம், நம் சூனியனே நம்மிடம் கதை சொல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு நாம் சூனியனின் பார்வையில் கதை கேட்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது. அவனது யோக நித்திரையில் தொடங்குகிறது அத்தியாயம். அவன் ஆயிரமாயிரம் பிரதி பிம்பங்களைப் படைக்கிறான். அவனுக்காகப் போரிட போகின்றனர் எனவும் கூறுகிறான். அறிஞர்கள், அழகிகள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், சாதாரணர்கள், மல்லர்கள்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 45)
கோவிந்தசாமி மருத்துவமனையில் இருந்து இரவுராணி மலரைப் பறிக்கக் கிளம்பி பல அத்தியாயங்களாக மலரைப் பறிக்காமல் அங்குமிங்கும் அலைய வேண்டி இருந்தது. ஆனால் அன்று தற்செயலாக அவன் முன்னால் அந்த தடாகம் இருந்தது. இரவு ராணி மலர் இருந்தது. இனி அவனுக்கு தடையெதுவும் இருக்க முடியாது அல்லவா? அவன் சிரமப்பட்டான் என்பது உண்மைதான். சிலர் அவனை சிக்கலில் சிக்க வைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் அந்த சிக்கலெல்லாம் தீரும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 42)
“சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் சமஸ்தானம் கட்டும் வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமாகிறாள் சாகரிகா. கோவிந்தசாமியின் நிழலின் பெயரில் சமஸ்தானத்தின் பெயரைப் பதிவு செய்கிறாள். வேலைகள் மும்முரமாக நடக்கிறது. தன்னை துதிப்பதற்குத் தானே கட்டிக் கொண்ட சமஸ்தானம் எனபதில் சிறு சங்கடம் கொள்கிறாள் சாகரிகா. எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாடுகளைத் தனக்கு முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறாள் சாகரிகா. அவள்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 44)
”மங்கையினால் வரும் துக்கம் மதுவினில் கரையும்” என்ற எதார்த்தத்தைப் போல கோவிந்தசாமியும், அவன் நிழலும் மீண்டும் தன் துக்க சிந்தனைகளோடு சந்தித்துக் கொள்கிறார்கள். குடிக்க வந்திருக்கும் கோவிந்தசாமி தன் நிழலிடம், ”நீ குடிகாரன் ஆகிவிட்டாயா?” எனக் கேட்பது நகை முரண்! தேசியவாதியாய் தான் மது குடிப்பது சரியா? தவறா? என்ற தர்க்க வாதங்களுக்கிடையே தனக்கெதிராக கிளம்பும் பெண்கள், அவர்கள் எல்லோரும் தன்னை...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 43)
பிரம்மனுக்கு இணைவைக்க முடியாத தன் யோக நித்திரை குறித்து சூனியன் விளக்குகிறான். அவனின் விளக்கமே அரூப ரூபத்தை நமக்குள் ரூபமாய் காட்சிப்படுத்துகிறது. யோக நித்திரையில் பிரதி பிம்பங்களைப் படைத்துத் தள்ளுகிறான். பூமி பந்தில் உலாவித் திரியும் அத்தனை அடையாளங்களோடும் உலாவித் திரியும் சூனியனின் பிரதி பிம்பங்களின் செயல்பாட்டு வேகம் மட்டும் ”எந்திரன் சிட்டி” அளவுக்கு இருக்கிறது! தன் படைப்பின் அம்சத்தை...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 41)
செம்மொழிப்ரியா பிரிந்து சென்றதில், நிழல் சற்று நேரம் புலம்பலுக்கு ஆளாகிறது. ஒரு நாள் காதல் என்றாலும் அந்தக் காதலின் வலிக்குச் சாராயத்தை நாடுகிறது நிழல். அங்கே நம் கோவிந்தசாமியும் தன் புண்பட்ட நெஞ்சை ஆல்கஹால் ஊற்றி ஆற்றி கொண்டிருக்கிறான். இருவருமாய் தங்கள் கஷ்டங்களை மிக்சரோடு பகிர்ந்து கொள்கின்றனர். இதற்கிடையில் வெண்பலகையில் ஒரு பெண், மனுஷின் கவிதைகளைத் தொட்டு கொண்டு குடிப்பதாக வந்த அறிக்கையைப்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 44)
கோவிந்தசாமியும் அவனது நிழலும் மறுபடியும் அந்த ஒயின்ஷாப்பில் சந்திக்கிறார்கள். அந்த ஒயின்ஷாப்பின் பெயரில் ஏதாவது குறியீடு இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் குறியீடு எதுவும் இல்லாமல் நேரடியாக ஒரு விஷயம் கோவிந்தசாமி சொல்வதாக இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. “நான் குடிக்கிறேனே தவிர வேறு தப்புத்தண்டாவுக்கும் போனதே இல்லை. வேலைத் தூக்கிக் கொண்டு அலைந்ததும் இல்லை. காலை விரித்துக் கொண்டு கிடந்ததும்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 43)
சூனியன் யோகநித்திரையில் தனக்கான உலகை தானே நிர்மானிக்கிறான். அந்த உலகில் அனைத்துவித துறையினரும் இருக்கிறார்கள் தன் புத்தகத்துக்கு தானே விமர்சனம் எழுதும் இலக்கியவாதி உட்பட. தர்மேந்திர மகாப்ரபுவைப் பற்றி அவன் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது அவனது ரசிகர்கள் ஒருவேளை அவனுடன் சண்டைக்கு சென்றால் என்ன செய்வது என. ஆனால் அவனுடன் எப்படி அவர்கள் சண்டைக்கு போக முடியும்? அவன்தான் சூனியனாயிற்றே. அவன்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 42)
நீல வனத்தில் சமஸ்தானம் அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சாகரிகா செய்துகொண்டிருந்தாள். அந்த சமஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவள் பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டிருந்தாள். அதற்கென பிரத்யேகமான ஆட்களை நியமித்து அவர்களை முடுக்கிவிட்டு கொண்டிருந்தாள். சமஸ்தானம் அவள் ரசிகர்களுக்காக ரசிகர்களே சேர்ந்து உருவாக்கியது போலவும் அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லாதவாறு காட்டிக் கொள்வதாக ஏற்பாடு...
என் அன்பே, இலவசமே.
பொதுவாக எனக்கு இலவசங்கள் பிடிக்காது. ஒவ்வோர் இலவசத்தின் பின்னாலும் ஒரு சூது உள்ளதாகத் தோன்றும். நான் இலவசமாக எதையும் பெறுவதில்லை. தருவதும் இல்லை. ஆனால் கிண்டில் இங்கே அறிமுகமான புதிதில் வாசகர்களை அந்தப் பக்கம் ஈர்ப்பதற்கு இலவசம் கணிசமாக உதவியதை மறுக்க முடியாது. அது ஒரு சந்தைப்படுத்தும் தந்திரம். எனக்குப் பிடிக்காத காரியம் என்ற போதிலும் முழு மனத்துடன் அதனைச் செய்தேன். ஏனெனில், எழுத்தாளனுக்கு இங்கே...