Tagசிறுகதை

பாடசாலை (சிறுகதை)

கணேசன் வீட்டுக்கு வரும்போதே ஏதோ சரியில்லை என்று கௌசல்யாவுக்குத் தெரிந்துவிட்டது. என்ன, என்னவென்று நச்சரிக்கத் தொடங்கினால் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான். உண்மையிலேயே ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் எரிச்சலும் கோபமும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே அவனாகப் பேசுகிற வரை முகத்தை வைத்துத் தான் எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்கிற பாவனையைத்...

பதினான்கு சொற்கள் (சிறுகதை)

அந்தப் பெண்ணை முதல் முதலில் பார்த்தபோது பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் இருபத்தைந்து வயது என்று சொன்னாள். அலுவலகத்தில் சில சிறிய, செப்பனிடும் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. எளிய அலங்காரங்கள் கொஞ்சம். நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். பகுதி நேரமாகத்தான் செய்வாள்; ஆனால், வேலை ஒழுங்காக இருக்கும் என்றார். அவள் நேரில் வந்தபோது...

காவ்யகுமாரி

உயிர்மை இதழில் என் புதிய சிறுகதை காவ்யகுமாரி வெளியாகியுள்ளது.   எல்லாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் நடந்து, சென்ற வாரம் திருமணமும் முடிந்துவிட்டது. கஜகஸ்தான் சிட்டிபாபு மூன்று நாள் விடுப்பில் வந்து திருமணத்தை நடத்திவிட்டு, அம்மாவையும் தங்கச்சியையும் பொறுப்போடு பார்த்துக்கொள் என்று மென்பொருள் சங்கருக்கு புத்திமதி சொல்லிவிட்டுத் திரும்பவும் கஜகஸ்தானத்துக்குப் போய்ச் சேர்ந்தார். இங்கே...

300 சொற்கள்

சில காலமாக ஒரு செயல்திட்டம் போல வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கதைகளாவது எழுதுகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி. என்ன பிரச்னை இருந்தாலும் சரி. எதை நிறுத்தினாலும் இதை நிறுத்துவதில்லை. முதலில் இப்படிக் கட்டாயமாக எழுத வேண்டும் என்ற விதி சிறிது கஷ்டமாக இருந்தது. விரைவில் அது ஒரு மனப் பழக்கமாகி, எழுதாவிட்டால் Uneasy ஆகிவிடுகிறேன். இன்னொன்று, இது யாருக்காகவும், எந்தப் பத்திரிகைக்காகவும் எழுதவில்லை...

பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்?

தாட்சு எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் அவளைக் குறித்த நான்கு வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அவையாவன: வதந்தி 1 அவளுக்கு இருபத்து மூன்று காதலர்கள் இருக்கிறார்கள். முறை வைத்துக்கொண்டு தினம் ஒருவனுடன் மாலை வேளைகளில் வெளியே செல்வாள். அவளது அனைத்துக் காதலர்களுக்கும் அவளைக் குறித்தும் அவளது பிற காதலர்களைக் குறித்தும் தெரியும். ஆனால் அதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஒவ்வொரு காதலனும்...

ஒப்பனைக் கலை (கதை)

எனக்கும் அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் ஒரே நாள், ஒரே சமயம், ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள். அவரவர் அம்மாமார்களுக்கு வேறு வேறு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது தவிர எங்கள் பிறப்பில் நாள், கோள் வேறுபாடுகளே கிடையாது. தவிர, பிறந்தது முதல் நாங்கள் மூவரும் ஒரே வீதியில்தான் வசித்து வருகிறோம். படித்தது ஒரே பள்ளிக்கூடம். ஒரே கல்லூரி. எங்களுக்குள் சகோதரப் பாசமோ, நட்புணர்வோ...

இனப் படுகொலை (கதை)

மாடியில் ஓர் எழுத்தாளர் குடியிருக்கிறார். அவர் வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்த அவரது மனைவியின் துப்பட்டா, காற்றில் அடித்து வந்து எங்கள் பால்கனியில் விழப்போக, அதை எடுத்துச் செல்வதற்காக வந்தார். வந்துவிட்டதால் நலம் விசாரித்துவிட்டு, ‘இப்ப என்ன சார் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு பேய்க்கதை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உடனே எனக்கு சுவாரசியமாகிவிட்டது. ‘ஆண் பேயா? பெண்...

நூறு சீன்

அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!