ஒரு நூதனமான வழக்கம் உருவாகி வருவதைக் காண்கிறேன். முன் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் திடீரென்று மெசஞ்சரில் வருகிறார். ‘என் சிறுகதைத் தொகுப்பு / கவிதைத் தொகுப்பு / நாவல் வெளியாகியிருக்கிறது. உங்கள் முகவரி தந்தால் கொரியரில் அனுப்பி வைக்கிறேன்’ என்று ஒரு வரி மெசேஜ் அனுப்புகிறார். நான் பதிலளிக்காவிட்டால் மீண்டும் அதே மெசேஜ் மறுநாள் வரும். அப்போதும் பதில் சொல்லாவிட்டால், ‘ஒரு...
அலகிலா விளையாட்டு – ஒரு மதிப்புரை (அனுராதா பிரசன்னா)
இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம். 2003 இல் அவர் வயது அநேகமாக 32. இந்த வயதில் இதை எழுதியிருக்கிறார் என்றால், அவருக்கு பேர்சொல்ல இந்த ஒரு புத்தகம் போதும். நீண்டு கொண்டே போனது என் review . எதை விடுவது என்றே தெரியவில்லை. அப்படியும் நிறைவில்லை.பொறுமை ஆர்வம் இருப்பவர்கள் தொடரலாம். மற்றவர்கள் மன்னிக்கவும். பா...
பின் அட்டைக் காவியங்கள்
ஓர் எழுத்தாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஆக மோசமான இரண்டு பணிகள் நாவலுக்குச் சுருக்கம் எழுதுவதும் புத்தகங்களுக்குப் பின்னட்டை வரிகள் எழுதுவதும்தான். ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஏஜென்சிகள் இருக்கின்றன. பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை அங்கே எழுத்தாளர்கள் செய்ய அவசியப்படாது. நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தவர்கள் அல்லவா? இது நம் பணி. நாமேதான் செய்தாக வேண்டும். ஏஜென்சிக்கு...
எழுபதில் ஒன்று
சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று சொல்லியிருப்பாள்...
50
ஒவ்வொரு நாளும் வாழ்ந்து, உறங்கி, எழுவதையே ஒரு சாதனையாக எண்ண வைத்திருக்கும் காலத்தில் வயது ஏறுவதெல்லாம் ஒரு பெருமையா. ஆனால் ஐம்பதைத் தொடும்போது சிறிது நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்கலாம்; தவறில்லை. இவ்வளவு நீண்ட வருடங்களில் இதுவரை என்ன செய்ய முடிந்திருக்கிறது? எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் அடிக்கடித் தோன்றும். நான் அதுநாள் வரை ஆட்டத்துக்கு வராததால்தான் யார் யாருக்கோ நோபல் பரிசு...
சன்னியாச தருமம்
நண்பர்கள் ஜடாயு, சொக்கன் இடம் சுட்ட, மாயவரத்தான் உதவியால் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட யாதவ பிரகாசரின் ‘யதி தர்ம சமுச்சயம்’ படிக்க ஆரம்பித்தேன். State University of New York Press வெளியீடாக Rules and Regulations of Brahmanical Asceticism என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. பூர்வாசிரமத்தில் ராமானுஜரின் குருவாக இருந்து பின்னர் சீடரானவர் யாதவ பிரகாசர். ஏகதண்ட சன்னியாசியாக இருந்து பின் திரிதண்ட...
நான் எப்படி எழுதுகிறேன்?
நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத...
சிங்கப்பூர் பயணம் 1
சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்...
ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.
சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை. அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக...
தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்
யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த மாட்டேன். எனவே செப்பனிடும் பணியில்...
Prodigy பயிலரங்கம் [2]
இன்றைய பயிலரங்கில் நான் வழங்கிய பிரசண்டேஷன் இது. சில ஸ்லைடுகள் புரியாமல் போகலாம். நான் பேசுவதற்கு உதவியாக மட்டுமே இதனைத் தயாரித்தேன்:
Language_Prodigy
View more presentations from Pa Raghavan.
ப்ராடிஜி பயிலரங்கம் தொடர்பான முந்தைய பதிவு இங்கே
Prodigy பயிலரங்கம் [1]
எழுதுவது தொடர்பாகச் சொல்லிக்கொடுக்கப்படும் விஷயங்களால் பத்து பைசா பிரயோஜனமில்லை என்பது என் கருத்து. எனக்குப் பல பேரிடம் கற்றுக்கொள்ளச் சென்ற அனுபவமும் உண்டு; எழுத்துப் பயிலரங்குகளில் வகுப்பெடுத்த அனுபவமும் உண்டு. கிழக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தப் பயிலரங்கு நடவடிக்கைகள் அடிக்கடி என் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது. எப்படி எழுதலாம், அல்லது எப்படி எழுதவேண்டும் என்கிற...
அமேசானில் பாரா
சமீபத்தில் இலண்டனில் இருந்து ஒரு வாசகர் என்னுடைய புத்தகங்களை வெளிநாடுகளில் வாங்குவதற்கு என்ன வழி என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மக்கு மாதிரி அவருக்கு உரலை அனுப்பி ஆன்லைனில் வாங்குவது எப்படி என்றெல்லாம் அரைகுறைப் பாடம் சொல்லி முழ நீளத்துக்கு பதில் எழுதினேன். மீண்டும் வந்த அவரது பதிலில் இருந்தது ஒரே வரி. அதில் பார்த்துத்தான் கேட்கிறேன், சொத்து முழுவதையும் இழக்காமல் எப்படி வாங்குவது...
சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு
அந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்து வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல்...
என் ஜன்னலுக்கு வெளியே – வெளியீடு
05.01.2009 – திங்கள் [அதாவது நாளை] மாலை 6 மணிக்கு மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறோம். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மாலனின் ‘சொல்லாத சொல்’ கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இந்நூலைக் கொள்ளலாம். தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பெரும்பாலும் அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த...
இந்த வருடம் என்ன செய்தேன்?
* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ...
சில புதிய புத்தகங்கள் – 1
இணையத்தில் எழுதி இரு வாரங்களாகின்றன. உருப்படியாக எழுதி மூன்று மாதங்களுக்கு மேல். சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குவதுதான் காரணம். வேலைகள் அதிகம். இருப்பினும், கண்காட்சிக்கென நாங்கள் வெளியிடும் புத்தகங்களுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி இங்கே சிறு அறிமுகங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன். கண்காட்சியில் என்னுடைய புதிய நூல்கள் மூன்று இடம்பெறுகின்றன. 1. மாயவலை 2. Excellent. 3. ஆயில் ரேகை. ஆயில்...
புலிகள் துரத்துகின்றன
உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது – இப்ராஹீம் இப்னு அதஹம். இஸ்லாத்தின் ஒரு பிரிவினரான சூஃபி ஞானிகள் பற்றி அங்குமிங்குமாகக் கொஞ்சம் படித்திருக்கிறேன். பவுத்தத்தில் ஒரு ஜென் போல இஸ்லாத்துக்கு சூஃபித்துவம் என்று வெகுநாள்கள் வரை எண்ணிக்கொண்டிருந்தேன். இல்லை. நுண்ணிய...
ஒரு முக்கியமான புத்தகம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...
ரயில் வண்டிகளின் மகாராஜா
வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவுமே இருந்திருக்கின்றன...


