சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2
ம்ஹும். மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். நிச்சயமாக பபாசி அமைப்பாளர்கள் வலைப்பதிவு வாசித்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமேபோல் சமூகப்பிரக்ஞை அவர்களுக்கும் இருக்கிறது. வாழ்க.
வலப்புறமிருந்து ஆறு வரிசைகளை இன்றைக்கு ஒரு கடை விடாமல் சுற்றிப்பார்த்தேன். பளிச்சென்று முதலில் கவனத்தில் பட்ட விஷயம், கருத்தைக் கவரும் விதத்தில் இந்த வருடம் பெரிய அளவில் புதுப் புத்தகங்கள் ஏதும் வரவில்லை என்பது. எப்போதும் ஏதாவது ஒரு குண்டு வெளியீட்டின் மூலம் சுண்டி இழுக்கும் விடியலின் இந்த வருட வெளியீடு ‘1989 – சமூக அரசியல் நிகழ்வுகள்’ என்னும் நூல். இட ஒதுக்கீடு, ஜெயலலிதா, கருணாநிதி என்று நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விமரிசனங்கள். சற்றே புதுமையான முயற்சியாகத் தோன்றிய இந்த நூலை வாசிப்பது கொஞ்சம் கஷ்டமென்று தோன்றியது. நின்ற வாக்கில் பத்துப் பக்கம் படித்தேன். பிறகு ஆர். முத்துக்குமார் ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றான்.Read More »சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2