அவர் சோளிங்கரிலிருந்து வருவதாகச் சொன்னார். சாமி, மாடியில் இருக்கிறது என்று சீடன் கை காட்டினான். காட்டிய கரத்தில் ஒரு வெள்ளைத் துணி சுற்றியிருந்தது. இன்னொரு கையில் குழவிக் கல் மாதிரி ஒன்று வைத்திருந்தான். அதன் முனையில் மிளகாய்ப் பொடி இடித்த நிறத்தில் என்னவோ ஒட்டிக்கொண்டிருந்தது. முதல் கட்டுக் கதவு பாதி திறந்திருக்க, மூன்று பேர் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். வந்தவர் அவர்களைப் பாதி பார்த்தபடி...
நீலக்காகம் 1
ஒரு கொலை செய்யவேண்டும் என்று உத்தரவாகியிருந்தது. செல்லியம்மன் கோயில் பூசாரி சாமியாடி முடித்து, கற்பூரம் காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டம் கலைந்த பிற்பாடு ரங்கநாத ஆச்சாரி கங்காதரன் தோளைத் தட்டி சட்டைப் பைக்குள் துண்டுச் சீட்டை வைத்தார். ‘என்னாது?’ என்று சைகை காட்டியபடியே கேட்டான் கங்காதரன். ‘தெரியல. லெட்ரு. சாமி குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லிவிட்டு குங்குமம் பட்டிருந்த பாதி தேங்காய்...
நிமித்தக்காரன்
கீழே உள்ள குறும்படத்தின் கதாசிரியர் ஸ்ரீதர் நாராயணன், தயாரிப்பாளர் + [திரை நிறையும்] ஹீரோ கணேஷ் சந்திரா, இயக்குநர் என மூவர் என்னுடைய நண்பர்கள். தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று இப்படத்தை வெளியிட்டிருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் என் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும். [திட்டுவதென்றாலும் திருப்தியாகத் திட்டித் தீர்க்கலாம்.] படத்தைப்...
நரேஷ் குப்தா நேரம்
நாளை மறுநாள் வோட்டுப் போடவிருக்கிறவர்களுள் சாத்தியமுள்ள அனைவருக்கும் இதனைக் கொண்டுசேர்க்க நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஓர் [அபாய] அறிவிப்பு
நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற...
நிஜமான 16 சீர் [with penathal]
காலை காலை வாரிய 16 சீர் விருத்தத்தை ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்ததன் விளைவு கீழ்க்கண்ட பா. இதனை என் ஆருயிர் உபிச பெனாத்தலுடன் இணைந்து எழுதியிருக்கிறேன். யாத்திருக்கிறேன்.
பதினாறு சீர் பரோட்டா
ட்விட்டரில் பதினாறு சீர் பரோட்டா சுடுவதற்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என் பங்குக்கு இது. வெண்பாம் போலவே இதற்கும் இலக்கணம் ஒன்றுதான். இலக்கணம் பார்க்கக்கூடாது என்பதுதான் அது! ஒருவேளை சரியாக இருக்குமானால் அது முற்றிலும் தற்செயலே. மீட்டர், சந்தம், எதுகை-மோனை இவை மட்டும் சரியாக இருக்கும்.
கோப்பையிலே நம் குடியிருப்பு
மகத்தான வெற்றியைப்போல் அழகான தருணம் வேறில்லை.
புரட்சி 2011
வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்களில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சி குறித்த என்னுடைய புதிய புத்தகம் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ இன்று வெளியாகிறது.
மொட்டை மாடியில் ஞாநி
மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...