சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதுமே பத்ரி தன் மொபைல் போனில் நேரத்தை மாற்றிக்கொண்டதைப் பார்த்தேன். நான் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டாம் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். கடிகாரத்தில் இந்திய நேரத்தையே வைத்திருப்பது. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் இரண்டரை மணி நேரம் கூட்டிக்கொள்வது என்பது முடிவு. அதன்படியே முதல் நாள் இரவு இரண்டே முக்காலுக்குப் படுத்தபோது சரியாக நாலு மணிக்கு அலாரம் வைத்தேன்...
சிங்கப்பூர் பயணம் 2
சிங்கப்பூர் சாலைகள் அழகானவை. சீரானவை. குண்டு குழிகளற்றவை. இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டும் பயணம் செய்துகொண்டுமே இருக்கலாம். பிரதான சாலைகள் மட்டுமல்ல. சந்து பொந்துகளுக்கும் அங்கே சமநீதி கிடைத்திருக்கிறது. என்று தொடங்கி ஒரு வியாசம் எழுதுவது என் நோக்கமல்ல. எனக்கென்னவோ சாலைகள் அந்த தேசத்தின் ஒரு குறியீடாகத் தென்படுகின்றன. ஒழுங்கினால் உருப்பெற்ற தேசம் அது. அது இன்றளவும் நீடித்திருப்பதன் வெளிப்படையான...
சிங்கப்பூர் பயணம் 1
சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்...
அறிவிப்பு
வைரஸ், பாக்டீரியா, அமீபா என்னவோ ஒரு சனியன் தாக்கியதன் காரணமாக இன்று பிற்பகல் முதல் இந்தத் தளம், வாசகர்களுக்கு நிரம்ப சிரமம் கொடுத்திருப்பதாக அறிகிறேன். வருத்தம். இப்போது சரி செய்யபப்ட்டுவிட்டது. சில கட்டுரைகளில் புகைப்படங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று தள நிர்வாகி சொல்கிறார். அதனாலென்ன என்று சொல்லிவிட்டேன். இடைப்பட்ட நேரத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை தமிழோவியம் தளத்தில் வெளியாகியிருக்கிறது...
என்ன ஊர்? சிங்கப்பூர்.
எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார். இதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில்...
பேயோன் 1000
எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ்...
இருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா
சென்னையின் நரக வெயிலிலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு நாலு நாள் பெங்களூர், மைசூர்ப் பக்கம் போக ஏற்பாடு செய்திருந்தேன். என் துரதிருஷ்டம், அங்கேயும் பட்டை காய்கிறது. ஆனால் சென்னை அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும். காலை, மாலை வேளைகளில் காற்று குளிர்ந்துவிடுகிறது. அபூர்வமாக ஒரு சில சொட்டுகள் மழையையும் கண்டேன். அந்தவரை ஆண்டவனுக்கு நன்றி. பெங்களூர் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லா சாலைகளிலும்...
உ
நண்பா, வணக்கம். காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய் விலை இன்னும் ஏறுமா, இந்தப்...
விட்டது சனி
சனியன் பிடித்த ஐபிஎல் நேற்று ஒரு வழியாக முடிந்தது என்பதை ட்விட்டரில் கண்டுகொண்டேன். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்துப் பாட்டி மாலை வேளைகளில் இனி பழையபடி கோயிலுக்குப் போய் விளக்கேற்றுவார். ஹெர்குலிஸ் ச.ந. கண்ணன் இறக்கிவைத்த குடும்ப பாரத்தையும் அலுவல் வீரத்தையும் மீளச் சுமப்பான். ஜெய்சங்கர் தெரு சாயிபாபா கோயில் வாசலடிப் பக்கிரி தருமம் செய்வோரை வாழ்த்த மறந்து ஸ்கோர் கேளாதிருப்பான்...
அன்லிமிடெட் அநியாயம்
சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது. எங்காவது புதிய உணவகங்களைக் கண்டுபிடித்துப் போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். நன்றாக உள்ளது என்பதற்குமேல் கொஞ்சம் கூடுதல் தரம் தெரியுமானால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். ரொம்பக் கவர்ந்துவிட்டால் இங்கே எழுதிவிடுவேன். நான் எழுதியதைப் படித்துவிட்டு நண்பர்கள் இடத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ வந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு...