அம்மன், வேப்பிலை, கூழ், கூம்பு ஸ்பீக்கர், மஞ்சள் டிரெஸ், சாமியாட்டம் என்று வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி மாதம் அமர்க்களமாக வந்துபோய்விட்டது. வீட்டு வாசலில் ஓர் அம்மன் கோயில் இருக்க விதிக்கப்பட்டவன், இது விஷயத்தில் எம்மாதிரியான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்று உங்களால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது. கடந்த மாதம் முழுதும் தினசரி கனவில் எனக்கு யாரோ நாக்கில் அலகு குத்தி, முகத்தில்...
ரொம்ப நல்லவர்கள்
மனிதர்கள் பொதுவாக இரண்டு வகைப்படுவார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள். ரொம்பக் கெட்டவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப நல்லவர்கள் என்னும் துணைப்பிரிவு ஒன்று இருக்கிறது. இந்தப் பிரிவில் இருப்பவர்களிடம் என்ன ஒரு சிக்கல் என்றால், இவர்களது நல்ல குணம் எம்மாதிரியான விதத்தில், எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வெளிப்படும் என்று எளிதில் தெரிந்துகொண்டுவிட முடியாது. இரணிய கசிபுவை காலி...
இரண்டாம் வகுப்பு அம்மாக்கள்
அந்தப் பெண்கள் அத்தனை பேருக்கு இடையிலும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அத்தனை பேரின் மகன் அல்லது மகளும் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒரு தோராய மனக்கணக்குப் போட்டு அந்த அத்தனை அம்மாக்களுக்கும் சுமார் முப்பது வயது இருக்கும் என்று தீர்மானம் பண்ணியிருந்தேன். பெரும்பிழை. பல சீனியர் அம்மாக்கள் இருக்கிறார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கலாம் அல்லவா? எனவே...
அன்சைஸ்
நம்ப முடியவில்லைதான். ஆனால் எல்லாம் அப்படித்தானே இருக்கிறது? நமுட்டுச் சிரிப்பு சிரிக்காதீர்கள். இப்படியெல்லாமும் ஒரு மனுஷகுமாரனுக்கு அவஸ்தைகள் உருவாகும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கருதுவதற்கு ஒரு ஆதாம் அல்லது ஏவாளின் மனநிலை நமக்கு வேண்டுமாயிருக்கும். துரதிருஷ்டம். நாகரிகம் வளர்ந்துவிட்ட இருபத்தியோறாம் நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கிறோம்...
பங்கரை
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி ஜெனிலியா, முதல் முறையாக ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருவாரம் தங்கட்டும், பழகட்டும், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் எனக்கு இவளைக் கல்யாணம் பண்ணிவையுங்கள் என்று கதாநாயகனாகப்பட்டவர் தனது தந்தையிடம் ஒரு நூதனமான டீலிங் போட்டிருக்கிறார். அந்த நல்ல குடும்பமானது, ஜெனிலியாவை, புதிதாக மாட்டிய முதல் வருஷ மாணவி...
டெலிகேஷன் ஆஃப் அத்தாரிடி
மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான். என்னைக் குளிப்பாட்டிக்கொள்வதில்கூட எனக்கு அத்தனை அக்கறை இருந்ததில்லை. பல சமயம் தண்ணீருக்குப் பங்கமில்லாமல் முழு நாளும் சோம்பிக் கிடந்திருக்கிறேன். இதைப்பற்றிய மேலிடத்து விமரிசனங்களை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் மகள்...
விசாரணைக்கு வா!
இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.
எம்பிபிஎஸ் கலைஞர்கள்
எனக்குச் சில இங்கிலீஷ் மருந்து டாக்டர்களைத் தெரியும். அவர்கள் நாடி பிடித்துப் பார்க்க மாட்டார்கள். ஊசி குத்த மாட்டார்கள். நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடிக்கமாட்டார்கள். ஆப்பரேஷன், அனஸ்தீஷியா என்று அச்சுறுத்துகிறவர்களும் இல்லை. பிரதி ஞாயிறுகூட விடுமுறை அறிவிக்காமல், வீடு பெண்டாட்டி வகையறாக்களை சாமிக்கு நேர்ந்துவிட்டதுபோல் கவனிக்காமல் விட்டுவிட்டு, எப்போதும் கிளினிக்கில் நோயாளிகளுடன் துவந்த...