வணக்கம் பாரா சார். என் பெயர் ஆனந்த். என்னைப் பற்றிய பெரிய அறிமுகம் ஏதுமில்லை. தங்களை முகநூலில் தொடர்கிறேன். அலை உறங்கும் கடல் பற்றி நீங்கள் பதிவிட்டபோது நீலுப்பாட்டியை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் வெகு விரைவில் மறந்தும் போனேன். கிண்டிலில் இன்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடிய போது, இந்தப் புத்தகம் வந்தது. உடனே வாங்கினேன். கடலுக்குள் மூழ்கிப்போக ஆரம்பித்தேன். செவியின் கூர்மையைப் பொறுத்த சங்கீதம் என்ற...
காந்தி சிலைக் கதைகள்
காந்தி சிலைக் கதைகள் மின் நூல் இன்று வெளியாகியிருக்கிறது. புத்தகம் இங்கே. குமுதம் ஜங்ஷனில் ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதிய கதைகள் இவை. பிறகு கிழக்கில் புத்தகமாக வெளிவந்தது. இப்போது கிண்டில் மின் நூலாக. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய கதைகள் இவை. இந்தக் கதைகள் அனைத்திலும் காந்தி இருக்கிறார். ஆனால் நேரடியாக அல்ல. படு தீவிர காந்தி மறுப்பாளருக்குள்ளும் அவரது கூறுகள் ஒன்றிரண்டாவது...
குற்றமும் மற்றதும்
குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை...
கிண்டில் குழப்பங்கள்
கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன்.
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
143 – ஒரு புதிய முயற்சி
என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். 2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின்...
கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு
நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்? இப்போது வரத் தொடங்கிவிட்டது. நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம். அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே...