எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
143 – ஒரு புதிய முயற்சி
என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். 2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின்...
கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு
நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்? இப்போது வரத் தொடங்கிவிட்டது. நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம். அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே...