குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கும் குழந்தை மனம் கொண்ட என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளுக்கு வாழைக்காயும் காய்கறியினத்தில் ரொம்பப் பிடிக்கும். ஆண்டவன் நான் பிறக்கும்போதே என் பிராணனை வாழைக்காய்க்குள் கொண்டு போய் வைத்திருந்தான். இப்போது யோசித்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் சாப்பாட்டில் வாழைக்காய் இருக்கிறது என்றால் அன்றைய தினமே எனக்குத் திருவிழா நாள் போலாகிவிடும். தனியே...
ருசியியல் – 26
ராஜமாணிக்கம் முதலியாரின் பேத்தி ராஜாத்தி வயசுக்கு வந்தபோது வீதி அடைத்துப் பந்தல் போட்டு மயில் ஜோடித்தார்கள். அன்றைக்கு முதலியார் வீட்டுக்குப் போயிருந்த அத்தனை பேருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பாதாம் கீர் கொடுத்தார்கள். பாதாம் கீர் என்ற பானத்தை வாழ்வில் முதல் முதலில் நான் அருந்திய தருணமாக அதுவே நினைவில் இருக்கிறது. நாக்கில் தட்டுப்பட்ட மெல்லிய நறநறப்பும் அடித்தொண்டை வரை இனித்த சர்க்கரையும். அது...
ருசியியல் – 25
சமீபத்தில் என் நண்பர் சவடன் பாலசுந்தரன், எலுமிச்சை – கொத்துமல்லி சூப் என்றொரு நூதன ருசிமிகு திரவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அருந்தி முடித்ததுமே அடுத்த கப் ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்க வைத்த தரம். எளிய க்ரியேடிவிடிதான். பிடி கொத்துமல்லியை அலசிப் போட்டுக் கொதிக்கவிட வேண்டியது. நாலு துண்டு வெள்ளரி, நாலு துண்டு கேரட் தவிர வேறு அலங்காரங்கள் ஏதும் கிடையாது. இருக்கவே இருக்கிறது மிளகு சீரக...
ருசியியல் – 24
போன வாரம் வெண்ணெய்க் காப்பி பற்றி நாலு வரி எழுதினாலும் எழுதினேன், காப்பி ரசிகர்கள் வீறு கொண்டெழுந்து விட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு மின்னஞ்சல் விசாரணைகள். காப்பி எப்படி உணவாகும்? வெண்ணெய் சரி; அதற்குமேல் தேங்காய் எண்ணெயை வேறு ஊற்றினால் காப்பி கந்தரகோலமாகிவிடாதா? சர்க்கரை போடாமல் அதை எப்படிக் குடிப்பது? வயிற்றைப் புரட்டியெடுத்துவிடாதா? இதைக் காலையில்தான் குடிக்க வேண்டும் என்று வேறு...
ருசியியல் – 23
மதராசபட்டணத்தில் இருந்து புறப்பட்டு தெற்கே என்னவாவது ஒரு க்ஷேத்திரத்துக்குப் பேருந்தில் போனால், செங்கல்பட்டு தாண்டிய பிறகு வழியெங்கும் கிலோ மீட்டருக்கொரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடை கண்ணில் படுகிறது. முன்புறம் சரிந்த கூரையும் புளிக்குளியல் முடித்து எழுந்த பாய்லரும். இங்கே ஒரு பெஞ்சு, அங்கே சில ஸ்டூல்கள். அண்ணாக்கு ஒரு காப்பீஈஈஈ என்கிற அடித்தொண்டை உத்தரவு. எல்லாக் கடைகளிலும் எல்லா நேரத்திலும்...
ருசியியல் – 22
அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் ஓர் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரம் ரெஃப்ரிஜிரேட்டரில் ஒரு பூண்டு டப்பா வைத்திருப்பான். மொத்தக் குளிர்சாதனப் பெட்டியையும் அதன் நெடி நாறடித்துக்கொண்டிருந்தாலும் தன்னிடம் பூண்டு இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்ப்பான். கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான். குளிர் சாதனப்...
ருசியியல் – 21
இந்த வருஷத்து வெயில் ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது எதற்காவது பார்த்தே தீரவேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறேன். நடு நிசி நாயாகக்கூட இருந்துவிட்டுப் போய்விடலாம். நடுப்பகல் வேளைகளில் வெளியே போக நான் தயாரில்லை. இந்த வெயில் காலங்களின் பெரிய பிரச்னை, வேலை கெட்டுவிடும் என்பது. நூறு சதம் ஒழுங்கான காரியம் ஒன்றை...
ருசியியல் – 20
முழுநாள் விரதம். அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் இல்லையா? முடித்துவிடுவோம். விரதங்களை இரவுப் பொழுதில் தொடங்குவது நல்லது. இது ஏதடா, நாமென்ன நடுநிசி யாகம் செய்து இட்சிணியையா வசப்படுத்தப் போகிறோம் என்று நினைக்காதீர். ஒரு நாளில் நாம் தவிர்க்கவே கூடாதது இரவு உணவு. இந்த ரெடிமிக்ஸ்காரர்கள், ஓட்ஸ் வியாபாரிகள், சீரியல் உணவு தயாரிப்பாளர்கள் கூட்டணி வைத்து சதி பண்ணித்தான் காலை உணவைக் கட்டாயமாக்கியது...