கடந்த நாலு தினங்களாக நான் ஊரில் இல்லை. திடீரென்று கிளம்ப நேர்ந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள அவகாசம் இல்லை. போன இடத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய நேர்ந்ததால் யாருடனும் பேசவும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று வியக்குமளவு, வந்து மெயில் பார்த்தபோது ஏராளமான விசாரிப்புகள். ஊரில் இல்லையா, உடம்பு சரியில்லையா, வேறு பிரச்னையா – இன்னபிற. அனந்த பத்மநாபனிடம் பணம்தான் இருக்கிறது. எனக்கு எத்தனை நல்ல...
விழா மாலைப் போதில்…
ஆல்பர்ட் தியேட்டரின் கொள்ளளவு 1300 பேர் என்று சொன்னார்கள். அரங்கு நிறைந்து பலபேர் நின்றுகொண்டும் இருந்தார்கள். சரியாக ஏழு மணி என்று அறிவித்திருந்தும் நிகழ்ச்சி தொடங்கக் கிட்டத்தட்ட எட்டு மணியானதற்கும் யாரும் முகம் சுளிக்கவில்லை. மேடையில் இரண்டு முழுநீள வரிசைகளை ஆக்கிரமித்துப் பிரபலங்கள் உட்கார்ந்திருந்ததும், ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னதும்கூட யாருக்கும்...
பாட்டு புஸ்தகம்
அடுத்த சனிக்கிழமை மாலை நிகழவிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையோடு சேர்த்து பாட்டு புஸ்தகம் கிடைக்கும் என்று இன்று தெரியவந்தது. இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. முன்னொரு காலத்தில் என்னிடமே ஏராளமான பாட்டு புஸ்தகங்கள் இருந்தன. அட்டை என்று தனியாக இருக்காது. மட்டரக க்ரீமோ பேப்பரில் நடுவில் பின் அடித்து பிளாட்பாரத்தில்...
சுந்தரம் அழைக்கிறான்
நான் வசனம் எழுதியிருக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, எதிர்வரும் ஜூலை 16ம் தேதி [சனிக்கிழமை] மாலை 7 மணிக்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. நண்பர்களை இவ்விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.
அழகர்சாமியின் குதிரை
சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம். சினிமாவுக்கென செய்யப்படும் சமரசங்கள் அதிகமின்றி, அதே சமயம் வெகுஜன மக்களின் ரசனையை விட்டும் நகராமல் மிகவும் கச்சிதமாக வந்திருக்கிறது இந்தப் படம். சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டு...
தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்
எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை...
நிமித்தக்காரன்
கீழே உள்ள குறும்படத்தின் கதாசிரியர் ஸ்ரீதர் நாராயணன், தயாரிப்பாளர் + [திரை நிறையும்] ஹீரோ கணேஷ் சந்திரா, இயக்குநர் என மூவர் என்னுடைய நண்பர்கள். தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று இப்படத்தை வெளியிட்டிருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் என் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும். [திட்டுவதென்றாலும் திருப்தியாகத் திட்டித் தீர்க்கலாம்.] படத்தைப்...
சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்
தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது. முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது...