Categoryநகரம்

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 15

சென்னை போன்றதொரு பெருநகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மலைக் குன்றுகள் அமைந்திருப்பதை சுற்றுலாத் துறை சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அது வருமானத்துக்கு வருமானம், நகரத்துக்கும் அழகு என்று எனக்கு எப்போதும் தோன்றும். குன்றத்தூர், திருநீர்மலை, திருசூலம், பறங்கிமலை, சின்ன மலை என்று ஒவ்வொரு குன்றுக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. திருசூலம் குன்றின் மறுபுறம் உள்ள திருசூலம் கிராமத்துக்குப் போய் அங்குள்ள...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 14

வருமானம் என்ற ஒன்றைக் குறித்த நிச்சயமற்ற சூழ்நிலையில் தனி மனிதன் கவலை கொள்ளும் முதல் விஷயம், அடுத்த வேளை உணவு. இந்தக் கவலை பிச்சைக்காரர்களுக்குக் கிடையாது. வீடற்றவர், பிளாட்பாரவாசிகள், குப்பை சேகரித்துப் பிழைப்போர், திருடிப் பிழைப்போர் என்று விளிம்பில் வாழும் யாருக்கும் அநேகமாக இராது. எது இல்லாவிட்டாலும் அவர்களுக்கு அரைக் கவளம் உணவு கிடைப்பதில் பிரச்னை இருக்காது. அடுத்த வேளை உணவு யாருக்குப்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 13

பதினெட்டு வயதில் நூலகங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். சராசரி நகர்ப்புற மனிதர்களின் வாசிப்பு ஆர்வம் என்பது பெரும்பாலும் கவலைகளின் பக்க விளைவாக உருவாவது என்பது என் அபிப்பிராயம். படிப்பதற்காகவே நூலகங்களைத் தேடிச் செல்லும் சிறுபான்மையினருக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. சிலருக்குக் கவலையை மறக்கக் குடி, உணவு, உறக்கம் எனப்பல உள்ளது போல நூலகங்களும் ஓர் எல்லை வரை அதற்கு உதவி செய்யும். அண்ணா சாலையில்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 12

சிறு வயதில் என்னைக் கற்பனையிலேயே வாழவைத்த சக்திகளுள் பக்கிங்காம் கால்வாய் ஒன்று. கால்வாய்க் கரை ஓரம் நின்றுகொண்டு, தாகூரைப் போல தாடி வளர்த்துக்கொண்டு கவிஞராகலாமா (ஒரு அமர் சித்ரக் கதைப் புத்தகத்தில் தாகூரின் வாழ்க்கையைப் படக்கதையாகப் படித்த விளைவு) அல்லது சாண்டில்யனைப் போல (வாரம்தோறும் குமுதத்தில் விஜய மகாதேவி) எழுத்தாளராகலாமா என்று தீவிரமாக யோசிப்பேன். அப்படி யோசிக்கத்தான் பிடிக்குமே தவிர, கதையோ...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 11

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நா. மகாலிங்கம் அவர்களின் வள்ளலார் – காந்தி மையம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். அன்று எனக்குப் பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். திருவருட்பாவின் உரைநடைப் பகுதி. அன்றிரவே அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி சுமார் பத்து நாள்களில் படித்து முடித்தேன். அப்போது எனக்கு அந்தப் புத்தகம் முழுவதுமாகப் புரிந்தது என்று சொல்ல...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 10

தாமரையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வரை சைக்கிளில் செல்லும் ஒருவனுக்கு சிறுநீர் கழிக்க வழியில் எங்குமே இடம் கிடைக்காது. தவித்துப் போய்விடுவான். கடைசியில் சத்யம் திரையரங்கத்துக்குப் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் கசங்கிக் கிடக்கும் இந்திய வரைபடத் தாள் ஒன்றின்மீது ஆத்திரம் தீரப் பெய்துவிட்டுப் போவான். இந்தக் கதையை எழுதியபோது பதினெட்டு வயது. இன்றும்கூடத் தாம்பரம்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 9

அடையாறு துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு எதிரே முதல் முதலாக ஒரு தொழுநோயாளியைக் கண்டேன். அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கலாம். அந்த நபரின் தோற்றம் அன்று எனக்கு அளித்த அதிர்ச்சி இன்னும் நினைவிருக்கிறது. புதைத்துச் சிதைந்து போன ஒரு பிரேதம் எழுந்து நடமாடத் தொடங்கியது போலிருந்தது. மறக்கவே முடியாது. (இதன் தலைகீழ் உண்மையாக யதியில் பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி ஒன்றை விரிவாக...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 8

தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கும், எனக்கு நண்பர்களாக இருந்த சக மக்குப் பையன்களுக்கும் பொதுவாக ஒரு கவலை இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே அது. இந்தக் கவலை பெரும்பாலும் செமஸ்டர் பரீட்சைகள் நெருங்கும்போது சிறிது தீவிரமாக வரும். அதுவரை வாழ்ந்து முடித்த அவல வாழ்வை மொத்தமாக மறந்துவிட்டு, இனியேனும் உருப்படியாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்காக...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!