வலை எழுத்து

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 7)

நீலநகரத்தின் நியதிகள் அனைத்தும் புதுமையாகவே இருக்கின்றன. அவையனைத்திலும் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் புதுமைச்சிந்தனை இழையோடியுள்ளது. நீல நகரத்தில் ரகசியங்களே இல்லை என்பதும் அங்கு நிலவும் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு நிமிடமே ஆகும் என்பதும் வியப்புக்குரியதாக உள்ளன. ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை எழுதியே தெரிவிப்பதும் வெண்ணிறப்பலகையில் எழுதும் அனைத்தும் ஊருக்கே தெரியும் என்பதும் அருமையான...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 6)

நீல நகரத்தின் வர்ணனை மிக அருமை. வழக்கமான மிகுபுனைவு கதைகளில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குத் தலைகீழாகவே பிறிதொரு உலகம் இருக்கும் என்றுதான் காட்டப்பட்டிருக்கும். ஆனால், எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் மிகுபுனைவு கதையான இதில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குப் புதுமையானவை மட்டுமே பிறிதொரு உலகமான நீல நகரம் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. சான்று – பின்தலையில் ஒற்றைக்கண். குளிர்க்கண்ணாடி அணிந்து அதை...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 9)

விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒரு செயலை அவர்கள் செயவதுண்டு. அதாவது, தங்கள் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலையோ அல்லது நிகழ்ச்சியையோ அவர்களே கிண்டலடித்துக் கொளவது. ஏனோ நமக்கு அது அத்தனை சுவாரசியமாய் தோன்றும். இந்த அத்தியாயத்திலும் பா.ரா. அதே பாணியையேக் கையாள்கிறார். இதில் கடைசியாக ஒரு கேள்வி வேறு. சூனியன் குறிப்பிடும் அந்த பா.ரா. வும் எழுத்தாளர் பா.ரா.வும் ஒருவரேவா என. சந்தேகமென்ன...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 6)

நீலநகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறும் பொழுது எனக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த வரலாற்று இடங்கள், அதன் கட்டட அமைப்புகள் ஆகியன நினைவுக்கு வந்தன. ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்ப்பது மனித .இயல்புதானே!. அதைத்தான் நானும் இந்த அத்தியாயத்தில் நானு செய்தேன். என்னைப் போலத்தான் சூனியன் அவனுடைய இருப்பிடத்தையும் நீலநகரத்தின் இருப்பிடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறான். தன் இருப்பிடத்தைப் பற்றிப்...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 8)

நதியில் குளிக்கும் போது சிறுநீர் கழித்து விட்டதற்காக தையல் போடும் அளவிற்கு பாறையில் முட்டிக் கொண்ட கோமாளியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? விளங்காத இந்தியில் “மானங்கெட்டவன்” என்று தன் தலைவன் திட்டினாலும் அதனை உணராது பாரத் மாதா கி ஜே என்று முழங்கும் தேஷ் பகதனைத் தெரியுமா உங்களுக்கு? அது வேறு யாருமல்ல. நம் கோவிந்தசாமி தான். ஆங்….. இப்போது தான் நினைவிற்கு வருகிறது. தசாவதாரம்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 5)

‘மனம்’ கூறுகெட்டது. நாம் எவர் மீது மீக்கூர்ந்த அன்பைச் செலுத்துகிறோமோ அவர் நம்மைச் செயல்வழியும் சொல்வழியும் புறக்கணித்தாலும்கூட, ‘அவருடைய மொழியையும் அன்பினையும் திரும்பப் பெற்றுவிட மாட்டோமா?’ என்று அலைந்து திரியும் இந்தக் கூறுகெட்ட மனம். சாகரிகா நீல நகரத்திற்குச் சென்று விட்ட பின்னர் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெறிய மனமில்லாமல் அவளைத் தேடி அலைகிறான் கோவிந்தசாமி. அவன் மனதும் கூறுகெட்டதுதான்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 4)

பா. ராகவன் அவர்கள் இந்த அத்தியாயத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல. பல புதையல் பற்றிய இரகசியங்களைக் கூறியுள்ளார். இந்தப் பகுதியை வாசித்தவர்கள், ‘என்ன புதையலா? நீங்கள் சரியாக வாசித்திருக்க மாட்டீர்கள். உளறாதீர்கள்!’ என்று என்னைப் பார்த்து ஏளனமாகக்கூட எண்ணலாம். இதில் உள்ள அனைத்தும் என் கோணத்தில் புதையலாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பற்றிய அபரிதமான எண்ணங்கள் உண்டு. உலகத்தில் உள்ள அறிவு எல்லாம்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 3)

குணங்களில் பல வகைகள் உள்ளன. அவை கடவுளின் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டுமே உண்டு என எண்ணிய வேளையில் சூனியர்களுக்கும் உண்டு என்பதை உரையாடல் வழி அறிய இயல்கிறது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகு விருப்பம். அவ்விடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்தனையில் ஏற்றிய சொல்வித்தையில் வல்லவனான சூனிய கதாநாயகன் நியாதிபதியிடம், “நிச்சயமாக இல்லை கோமானே. நான் குளிர்ச்சாவிலிருந்து...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 2)

மனம்முதிர்ந்தவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தன் பேச்சினை நிறுத்திவிட்டு, அதற்குச் செயல்வடிவம் கொடுத்து விடுவார்கள். சூனியனும் ‘எண்ணத்தைச் செயல்வடிவம் ஆக்குவதற்கு என்ன செய்யலாம்?’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்த எண்ணத்தின் வடிவம்தான், “என்னைத் தூக்கிப் போடுங்கள்”. கப்பலுக்கு நிறுத்தும் விசை கிடையாது. அது மட்டும் அல்லாது அவர்கள் தங்கள் உயிரையும்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 1)

இறக்கை இல்லாமல் பறக்க முடியுமா?’ என்று எண்ணி சிந்தித்த வேளையில், ‘ஆம், தோழி! கற்பனைக் கண் கொண்டு உன்னால் பறக்க முடியும்’ என்று பா. ராகவன் சூனியன் வழியாக என் மனத்திற்குள் கிளவியாக என்னையும் எடை கொண்ட பொருளாகப் பறக்கச் செய்தார். நியாயத் தீர்ப்பானது வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்படுகிறது. கோணம் மாறுபடுவதால் மட்டும் அல்ல, பார்வைக்கோணம் மாறுபடுவதால் தீர்ப்புகள் தவறுகின்றன எனச் சூனியன்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓