வலை எழுத்து

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 31)

சில அத்தியாயங்களுக்கு முன் மழையில் நனைந்து மயக்க நிலையில் கிடந்த கோவிந்தசாமியின் கதி என்னவாயிற்று? என்பதற்கான விடை மந்திரமலரில் மலர்ந்திருக்கிறது. கோவிந்தசாமியின் கனவில் வரும் சாகரிகா அவன் கனவிலும் நினைத்திராத படி இருக்கிறாள். கனவிலும் கூட அவளின் அன்பிற்காக ஏங்குபவனாகவே கோவிந்தசாமி இருக்கிறான். கனவில் வந்து கலைந்து செல்லும் சாகரிகாவுக்காக கண்ணீர் சிந்தும் கோவிந்தசாமிக்கு ஆறுதல் தருகிறாள்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 30)

நீலவனத்தில் சாகரிகா, கோவிந்தசாமியின் நிழல், ஷில்பாவை சூனியன் எதேச்சையாக காண்பதில் களம் சூடு பிடிக்கிறது. அப்பொழுதும் கூட அவர்களின் வருகை பா.ரா.வின் திட்டம் என சூனியன் ஐயுறுகிறான். தனக்கு எதிராக அந்த திட்டம் – ஆயுதம் நிற்காது என கூறிக் கொள்ளும் சூனியன் சாகரிகாவின் திட்டத்தையும் சரியாக கணிக்கிறான். நரகேசரிக்கு போதை தர நிலவுத் தாவரம் தேடிச் சென்ற சூனியன் ஒரு தங்கத்தவளையை பிடித்து வருகிறான். அதன்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 29)

சாகரிகா மீது கோவிந்தசாமியின் நிழல் கொள்ளும் மையல் கோவிந்தசாமி கொண்டதை விடவும் அதிகமாக இருந்த போதும் நிழலுக்கு சாகரிகா எதுவும் செய்யும் உத்தேசம் கொண்டிருக்கவில்லை. அதை நிழல் உணரவில்லை! சாகரிகாவுக்கு எதிராக செயல்படுவது யார்? என்ற ஷில்பாவின் தூண்டிலுக்கு நாற்பதாண்டு காலம் தனக்குக் கூடு தந்தவனை விட்டுக் கொடுக்காமல் நிழல் பேசுகிறது! அதேநேரம், நிழலின் மூலம் தன் மீது விழுந்த பழியை துடைக்க சாகரிகா...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 28)

நாளிதழ்களில் இலவச இணைப்பாக தரப்படும் இதழ்களில் துணுக்கு, பொன்மொழி, கவிதை, என ஏதாவது ஒன்றை எழுதி அதன் கீழ் ”யாரோ” என போட்டிருப்பார்கள். இந்த தலைப்பை வாசித்ததும் அது தான் நினைவுக்கு வந்தது. ஆனால், கபடவேடதாரியில் ”யாரோ” யார்? என தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன். தங்கள் உலகில் இருக்கும் வனம் குறித்து சூழியன் கூறும் தகவல்கள் ஒரு பிரமாண்ட வனத்தை மனதில் காட்சிகளாய் விரிய வைக்கிறது. வனமற்ற உலகில்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 27)

தன் இலட்சியத்திற்காக உருவாக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களோடு, தன் நோக்கம் பற்றி அவ்வப்போது கோடி காட்டி வந்த சூனியன் இம்முறை தன்னுடைய இலக்கிற்கான திட்டமிடல் குறித்தும் தெளிவான பார்வையை நமக்குத் தந்து விடுகிறான். சூனியனின் விளக்கத்தோடு அத்தியாயம் ஆரம்பிக்கிறது. கூடவே, சாகரிகாவை பிழியாத தேனடையாய் காட்சிப் படுத்தி பிரபலமாக்கிக் காட்டுவதில் பிரயாத்தனப்படுவதாக பா.ரா. மீது வெறுப்பு கொள்கிறான்...

பயிலரங்கம் – சில குறிப்புகள்

writeroom முதல் பயிலரங்கம் இன்று நடந்து முடிந்தது. Free என்று அறிவித்திருந்ததால் ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அந்த விவகாரத்துக்குள் போகக்கூடாது என்று முதலிலிருந்தே கவனமாக ஒதுங்கியிருந்துவிட்டேன். பங்கேற்பாளர்களை என் மனைவிதான் தேர்ந்தெடுத்திருந்தார். என் அக்கவுண்ட் மூலமாகவேதான் அவரும் ஃபேஸ்புக் பார்க்கிறார் என்பதால் நானறிந்த அனைவரையும் அவரும் அறிவார். (என்னைவிட சிறிது நன்றாகவே.)...

எழுத்துப் பயிலரங்கம்

நேற்று பயிலரங்க அறிவிப்பை வெளியிட்டதும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவில் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பங்கு பெற ஆர்வம் காட்டியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்றும் விண்ணப்பிக்கலாம். நேற்று நேரமில்லாததால் சிலவற்றைக் குறித்து விரிவாக எழுத இயலவில்லை. இப்போது எழுதிவிடுகிறேன். 1) நிச்சயமாக இந்தப் பயிலரங்கம் எழுத்தார்வம் உள்ள, புதியவர்களுக்கு மட்டும்தான். நன்கு பழகிய கரங்களுக்கல்ல. 2) கூகுள் விண்ணப்பப்...

எப்போதும் நூறு சதம்

என்னுடைய ஒய்யார ஒழுங்கீனங்கள் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதில் முக்கியமான ஓர் ஒழுங்கீனத்தைப் பற்றி எப்படியோ இதுவரை எழுதாது விட்டிருக்கிறேன். நேற்று மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவகாரம் வந்து போனதால் இப்போது எழுதிவிடுகிறேன். நான் ஒரு மூலவர். அதாவது எதற்காகவும் எழுந்து நகர்ந்து போகாத ஆலமரத்தடிப் பிள்ளையார். என் மனைவியின் கருத்துப்படி சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே என்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 36)

தனக்கு மனம் என்பதே இல்லை என்றும் அதனால் சலனம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும் சொல்கிறான் நம் சூனியன். தன்னுடைய படைப்புகள், எவ்வளவு துல்லியமாகச் செயல்படுகின்றன என்றும் அவர்களது செயல்கள் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்பதையும் அதில் ஒரு லலிதம் இருக்கிறது என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் மனித இனமே ஒரு பாவப்பட்ட பிறப்பு என்கிறான். கடவுளின் திறமையாக அவன் வர்ணிப்பது புறத்தோற்ற...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 35)

இந்த அத்தியாயம் கோவிந்தசாமி நீல வனத்தை வந்தடையும் பயணத்தில் தொடங்குகிறது. அவன் ஒரு குழுவுடன் சேர்ந்து பயணம் செய்கிறான், அதற்கான காரணமும் விளக்கப்படுகிறது. இதேபோல் திருமணமான புதிதில் அவன் திருப்பதி சென்று வந்த கதையும் வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. நீல வனம் வந்து சேர்ந்த கோவிந்தசுவாமி முல்லைக் கொடியும் தமிழ் அழகியும் எதிர்கொள்கின்றனர். பலவந்தப்படுத்தி அவளுடன் சேர்கின்றனர். முதலில் வேண்டாம் வேண்டாம்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!