வலை எழுத்து

அன்சைஸ் – மறு பதிப்பு

  இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்? ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட...

பின் கதைச் சுருக்கம் மறு பதிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பின் கதைச் சுருக்கம்’ மறு பதிப்பு ஜீரோ டிகிரியில் வெளியாகியுள்ளது. நாவல்களைப் பற்றிய கட்டுரைகளெல்லாம் வாரப் பத்திரிகையில் வெளியாகுமென்று யாரும் கற்பனைகூடச் செய்ய முடியாத காலக் கட்டத்தில் இக்கட்டுரைகள் கல்கியில் வெளியாயின. (வருடம் மறந்துவிட்டது. குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர்.) அப்போது நான் மிகவும் ரசித்த, ஏதோ வகையில் என்னை பாதித்த நாவல்களைக் குறித்தும்...

கலவர காலக் குறிப்புகள் – மறு பதிப்பு

  என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது. இரண்டாவது காரணம், இந்தப்...

Bukpet-WriteRoom: எழுத்துப் பயிற்சி வகுப்புகள்

விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 46)

அழுது தீர்த்திருந்த கோவிந்தசாமி ஒரு காஃபி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். அந்த நினைப்பின் நீட்சி ஒற்றை காஃபிக்காக தன் சித்தாந்தத்தை கொத்தி கூறு போட்ட சாகரிகாவுடனான ஒரு சச்சரவை நினைவு கொள்ள வைத்து விடுகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை காஃபியை நினைத்த கோவிந்தசாமியின் மனது சாகரிகாவை நினைத்துக் கொள்கிறது. புதிய இரவு ராணிமலரை பறித்து அதில் தன் எண்ணத்தைக் கவிதை வடிவில் உச்சரித்து...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 45)

எதிர்பாராத வகையில் இரவுராணி மலர் இருக்கும் தடாகத்தின் கரைக்கு கோவிந்தசாமி வந்து சேர்கிறான். நினைவிலும், இலட்சியத்திலும் இருந்த உறுதியில் நீலநகர வனத்துக்கு வந்த நோக்கத்தையே மறந்தும் போகிறான். தன் தோற்றம், ஆளுமை சார்ந்து தனக்கிருந்த நம்பிக்கை சாகரிகாவைக் கவர பயன்படும் என நினைக்கிறான். நினைப்பா? தப்புக் கணக்கா? என்பது போகப் போகத் தெரியும்! அந்த நினைப்பு தாய் மசாஜ் குறித்து ஆரம்பத்தில் அவன்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 46)

அதிக நேரம் அழுததால் சக்தி குறைந்து கண்ணீரும் இல்லாமல் அழுவதை நிறுத்துகிறான் கோவிந்தசாமி. இவ்வளவு நேரம் அழுததால் சூடாகக் காப்பி வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் சட்டெனக் காபி வேண்டாம், தனக்கு தேநீர் வேண்டும் என்று அவனை மாற்றிக் கொள்கிறான். அது ஏன் என்று, சிறு பிளாஷ்பேக் விரிகிறது. கல்யாணமான புதிதில் மாபல்லபுரம் சென்றிருந்த சாகரிகாவிற்கும் கோவிந்தசாமிக்கும் ஒரு டீக்கடையில் வாக்குவாதம் எழுகிறது...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 45)

கோவிந்தசாமி இப்போது மந்திர தடாகத்தின் கரைக்கு வந்து சேர்கிறான். ஆனால், இரவு ராணி மலரைப் பற்றியும் அதைத் தேடி வந்ததை பற்றியும் அவன் இப்போது மறந்து விட்டிருந்தான். சாகரிகாவை அடைவது ஒன்றுதான் அவனது நோக்கமாக இருந்தது. இப்போது சாகரிகா நீல வண்ணத்தில் தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டதால் அவன் நிலைகொள்ளாமல் பரபரக்கிறான். தன் நிழலை அங்கீகரிக்க முடிந்த அவளால் தன்னை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 44)

கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் மீண்டும் மது விடுதியில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரின் சோகமும் ஒன்று தானெனக் கோவிந்தசாமி நிழல் சொல்கிறது, அது உண்மை தான், ஆனால், கோவிந்தசாமிக்கு உண்மைகள் கசக்க செய்கிறது. இருவரும் சற்று நேரம் புலம்பி விட்டு மது அருந்த அமர்கின்றனர். பியர் சிந்துவெளி நகரத்தின் எச்சம் என்றும் அது திராவிட பானம் என்றும் நிழல் கூறுவது அதகளம். கோவிந்தசாமி நிழல் ஒரு செல்பி...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 46)

ஒரு சாதாரன காஃபி விஷயத்தில் கூட அவர்களுக்குள் சங்கடங்கள் எனில் கவிதை விஷயத்தில் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அவள் அவனை சங்கி என திட்டும்போதெல்லாம் அவன் நொந்து போயிருக்கிறான். சங்கத்துடன் தொடர்பில் இருப்பது அவ்வளவு குற்றமா என எண்ணி அவஸ்தைப்படுகிறான். ஏன் தேசியவாதிகள் கவிதை எழுதுவதில்லை, கவிஞனாக அறியப்பட்டவர்கள் தேசியவாதியாக இருப்பதில்லை என்ற அவனது கேள்விக்கு தமிழகஜி அருமையாக பதில்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!