இந்த உலகம் மேட்டரால் ஆனது.
மேட்டர் மூன்று வகைப்படும்.
solid, liquid, gas.
இந்த மூன்றுமே பெரும்பாலும் எரியும் தன்மை கொண்டவை.
ஊதுபத்தியைக் கொளுத்தி பிளாஸ்டிக்கின்மீது வைக்காதே. பிளாஸ்டிக் உருகும்.
இதுவே ஊதுபதிக்கு பதில் மெழுகுவர்த்தியாக இருந்தால், உருகி வழியவே செய்யும்.
நீ ஸ்கூலில் படிக்கும்போது இதெல்லாம் உனக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா அப்பா?
இன்றைய காலை இப்படியாக விடிகிறது.
பல்லி விழாப் பலன்
பல்லியொன்று மேலே படுத்துக் கிடந்தது நகரும் வழியாகக் காணோம் உஸ் உஸ்ஸென்று சத்தமெழுப்பிப் பார்த்தேன்; ம்ஹும். ஹேய், போவென்று எழுந்து கையாட்டிப் பார்த்தேன் அது காது கேளாத பல்லி தட்டித் துரத்த தடியேதும் அருகில் இல்லை தானே நகரவும் அதற்கு வழி தெரியவில்லை எந்தக் கணம் தவறி விழும் என்ற அச்சத்தில் டாய்லெட் சரியாகப் போகவில்லை பல்லிவிழும் பலனில் உச்சந்தலைக்கு நல்லதாக ஏதுமில்லை பாதியில் எழ வழியின்றி மீதியை...
note to self
பத்திரிகை செத்துப் பலகாலமாச்சு
பக்கம் போகாதே, பாழ்
புத்தகம் எழுதாதே
ராயல்டி வராது
ஃபண்டட் சீரியலில் ஒதுங்காதே
பாதியில் தூக்கிவிடுவார்கள்
சினிமா வேண்டாம்
ரிலீசாகாது
ஃபேஸ்புக் ட்விட்டரெல்லாம்
பத்து காசுக்குப் பிரயோசனமில்லை
எழுதத் தெரிந்தால் ஶ்ரீராமஜெயம் எழுது
போகிற காலத்தில் புண்ணியம்.
(கர்ம) வினைத் தொகை
ஒரு வரி. ஒரே ஒருவரிக் கோபம். கோபம் கூட இல்லை அது. விவரிக்க முடியாத ஒரு பெருந்துயரத்தின் மிக மெல்லியக் கசிவு. நேற்று முதல் என்னைச் செயல்படவிடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பெரியவரின் சொல். அவரை எனக்குக் கடந்த ஓராண்டாகத்தான் தெரியும். அவரைக் குறித்து நான் அறிந்த முதல் தகவல் அவர் ஒரு கடன்காரர் என்பது. இன்றுவரை இதை மட்டுமே விரிவாக, இன்னும் விரிவாக, மேலும் விரிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...
ஆயிரம் ரூபாய் தீவிரவாதம்
ஆயிரம் பக்கப் புத்தகங்களை நானே எழுதியிருக்கிறேன். ஆனால் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புத்தகத்தைப் பூமணிதான் எழுதியிருக்கிறார்.” என்று சிலகாலம் முன்னர் ஒரு ட்விட் போட்டேன். விதி வலிது அல்லது நல்லது. மாயவலையின் புதிய செம்பதிப்பு இப்போது ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது (மதி நிலையம்). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தனாம்பெரிய (கிட்டத்தட்ட 1300 பக்கங்கள்) குண்டு புஸ்தகத்தை மதி நிலையத்தார்...
வக்ரகால அதிசயம்
கிமு 323ஆம் வருஷம் ஜூன் மாதம் பத்தோ பதினொன்றோ தேதியன்று கிரேக்கமாதேசத்தில் அலெக்சாண்டர் காலமானபோது இயேசுநாதர் பிறந்திருக்கவில்லை. ஆனால் ஆசியாக் கண்டத்தில் பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட பிராந்தியமான குரோம்பேட்டை தன் பெயரை மறைத்துக்கொண்டு அப்போதும் புவியில் இருக்கத்தான் செய்தது. அலெக்சாண்டர் காலமான காலத்தில் குரோம்பேட்டை என்பது ஒரு பெரிய வனம். ராமர் இலங்கைக்குப் போகிற வழியில் இந்த வனத்தில்...
முதலாம் சின்னதுரை
சிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது...
வாசிக்க பலகுபவனின் கேள்வி
வணக்கம். எனது பெயர்….. பொறியில் படித்துள்ளேன், வயது 27. என்னுடைய தாத்தா மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். பணியில் சேர்ந்த பிண்பு புத்தகங்களின் வாசிப்பு அதிகமாகியது. பொண்ணியின் செல்வன், மோகமுள் நாவல்களை வாசித்தபின்பு ஆர்வம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஈரோட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு போகும்...
கொயந்த பாட்டு
நான் வசிக்கும் பேட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்புக் கொடுத்து, பிள்ளைகளைக் கவிதை எழுதி வரச் சொல்லிவிடுகிறார்கள். கவிதையெல்லாம் என்ன நாலாம் வாய்ப்பாடா எல்லோரும் உட்கார்ந்து எழுதிவிட? இது ஒருவித வன்கொடுமை என்பதை ஆசிரியப் பெருந்தகைகளுக்கு யாரெடுத்துச் சொல்வது? நானெடுத்துச் சொல்லலாமென்றால் நேரமில்லை. எனவே ஆசிரியர்களைப் பழிவாங்க, பகுதிவாழ் பிள்ளைகளுக்கு நானே எழுதிக்...
கிறுக்கெழுத்தாளன்
சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன். புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை. இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ. அகராதித் துணையின்றி கம்பர் முதல்...