ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது: காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் . என் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது. எஸ்…இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங் … என்றேன் பெருமையாக. “சார், We are calling from UCICI Brudancial Insurance company சார்…” ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா? இறைவா, இந்த துயரத்திலேந்து மீளரதுக்கு ஏதாவது...
Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்
சென்ற மாதம் டாட்டா போட்டான் என்னும் டேட்டா கார்ட் ஒன்று வாங்கினேன். மொபைலில் தினமும் மூன்று வேளை வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் நம்பர் ஒன்றை அழைத்து எனது தேவையைச் சொல்லி, எனக்கொரு இண்டர்நெட் குச்சி தேவை என்று தெரிவித்தேன்.
கொளுத்திப் போட்ட காதை
வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் மாடியில் நேற்று மாலை தீப்பிடித்துக்கொண்டது. மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருந்தபடியால் தீ மிக வேகமாகப் பரவி இரண்டு ஃபயர் எஞ்சின் வண்டிகள் வந்தபிறகுதான் ஓய்ந்தது.
மூணு
ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள்...
ஓ, மரியா!
ட்விட்டரில் திடீரென்று டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயரைக் குறிப்பிட விரும்பி, மறந்துபோய்த் தொலைந்தேன். எப்போதோ படித்த அவரது பேட்டி ஒன்றுமட்டும் நினைவில் இருந்தது. அதை எடுத்து வைத்திருந்த ஞாபகமும். அதைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, மரியாவைக் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அது இது. 2008 அல்லது 09ல் எழுதப்பட்ட கட்டுரை என்று நினைக்கிறேன். இப்போது எதற்கு...
குசலவபுரி என்கிற கோயம்பேடு
வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?
காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட்
நவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய...
தேவநேசன்களின் வம்ச சரித்திரம்
சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினோம். அக்வாகார்டு என்னும் நிறுவனத்துடையது. அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த ‘ரோபோட்’ என்னும் மாடல். வாங்கும்போது பதினைந்தாயிரமோ என்னமோ விலை. நான் வாங்கிய நேரம்தான் காரணமாயிருக்கவேண்டும். அக்வாகார்டு நிறுவனத்தின் அந்த மாடல் மிகப்பெரிய ஃபெய்லியர் மாடலானது. என்னைப் போல் வாங்கிய அத்தனை பேரும் ஏதாவது குறை சொல்லி அதை...
இது நான் எழுதியதல்ல.
எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது. என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும்...
How to Name it?
இன்றைய தினம், என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று. பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.