அது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில்...
பொலிக! பொலிக! 75
‘போதாயன விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன? நமக்குக் கூரத்தாழ்வான் கிடைத்திருக்கிறார்! பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் பணியை இனி தொடங்கிவிடுவோம்!’ என்றார் ராமானுஜர். திருவரங்கம் திரும்பி, நடந்ததை அனைவருக்கும் விவரித்தபோது அத்தனை பேரும் வியந்து போனார்கள். ‘ஆழ்வான்! உமது கூர்நோக்கும் கவனமும் ஆசாரிய பக்தியும் நிகரற்றது. இந்தப் பணி சிறப்பாக நடந்தேற நீர் உடையவருக்குப் பக்கபலமாக...
உண்ணாதிருத்தல்
தினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன். சட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்து நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன்...
வாழ்வதென்பது…
கொஞ்சகாலமாக நான் வீட்டைவிட்டு அதிகம் வெளியே போவதில்லை. பணி நிமித்தம் மாதம் ஒருசில தினங்கள் வெளியே போனால் அதிகம். மற்றபடி வீட்டில் என் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. கூட்டங்கள், விழாக்கள், சினிமா, கடற்கரை, நண்பர்கள் சந்திப்பு எதுவும் கிடையாது. விடிந்ததும் காலைக் கடன்களுக்குப் பிறகு அறைக்கு வந்து உட்கார்ந்தால், ஒன்பது மணிக்குக் குளிப்பதற்கு எழுவேன். அதன்பின் மதியம் ஒன்றரை மணிக்கு உணவுக்கு...
பொலிக! பொலிக! 74
காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல்...
பொலிக! பொலிக! 73
‘ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற கிரீடங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இவர் உயர்வு, அவர் மட்டம் என்று ஒருத்தரைக்கூடத் தரம் பிரிக்க முடியாதபடி அத்தனை பேருமே எப்பேர்ப்பட்ட ஞானஸ்தர்களாக விளங்குகிறார்கள் பாரும்!’
பெரிய நம்பியிடம் அரையர் சொல்லிக்கொண்டிருந்தார்.
ருசியியல் – 15
தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய்.வினைத்தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன். நான் ஆறாங்கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக்கொண்டிருந்தபோது இதே வினைத்தொகைக்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்தமரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி...
பொலிக! பொலிக! 72
கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு அவரும் பிற சீடர்களும் திருவரங்கம் வந்து சேர்ந்தபோது அவரது அம்மா தனது மருமகளை அழைத்துக்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து வீடு பார்த்துக் குடியேறியிருந்தாள்.
‘எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள்?’ என்று கோவிந்தன் கேட்டார்.
தஞ்சை பயணம்
மூன்று நாள் தஞ்சை பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தேன். பக்திப் பயணமாகத் தீர்மானித்துக் கிளம்பவில்லை என்றாலும் இந்த முறை தஞ்சைப் பயணத்தில் மூன்று திவ்ய தேசங்கள் சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கும்பகோணத்தில் ஒப்பிலியப்பன். வெண்ணாற்றங்கரையோரம் உள்ள தஞ்சை மாமணிக் கோயில் (இது த்ரீ இன் ஒன் திவ்யதேசம். நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்மப் பெருமாள் எனத் தனித்தனிக் கோயில்கள். மூன்றும்...
பொலிக! பொலிக! 71
பெரிய திருமலை நம்பிக்குப் புரிந்தது. தம்பி என்பதனால் அல்ல. வைணவம் பரப்பும் திருப்பணியில் வைராக்கியம் மிக்கவர்களின் பங்களிப்பு அவசியம். அது பெரிய காரியம். ஒரு கோவிந்தனல்ல; ஓராயிரம் கோவிந்தன்கள் இருந்தாலும் போதாத காரியம். எனவே அவர் சற்றும் யோசிக்காமல், ‘இதோ தந்தேன்!’ என்று சொல்லி, கோவிந்தனை அழைத்தார். ‘கோவிந்தப் பெருமானே, இனி நீர் உடையவரின் சொத்து. அவரோடு கிளம்பிச் சென்று, அவர் சொல்வதைச்...