ஞாயிற்றுக் கிழமை ஒரு சம்பவம் நடக்கிறது. உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் ஒருவரை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, சாதி வெறி மண்டிய தாதாக்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு பைக்கேறிப் போகிறார்கள். திங்கள் போனது, செவ்வாய் போனது, புதனும் போய்விட்டது. இதனை கௌரவக் கொலை என்று சொல்லலாமா, ஆணவக் கொலை என்று குறிப்பிடலாமா என்று வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
சொந்த சோகம்
தினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன. நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே. திட்டுகிறவர்கள்கூட...
பொன்னான வாக்கு – 08
ஆக, விஜயகாந்த் தனித்துக் களம் காண முடிவு செய்துவிட்டார். தெய்வாதீனமாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே பக்கமாக ஒதுங்கிப் போனதால் திமுக, அதிமுகவும் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுதந்தரமாக வேலை பார்க்கலாம். இந்தப் பக்கம் பாமக, அந்தப் பக்கம் பாஜக. எண்டர்டெயின்மெண்டுக்கு இருக்கவே இருக்கிறது மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மேற்படி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மநகூ.
பொன்னான வாக்கு – 07
இன்னார் முதல்வர் ஆகலாம் அல்லது இன்னார் ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்தரமும் ஜனநாயகமும் கேவலம் ஒருத்தருக்கு இந்த விருப்ப சௌகரியத்தைக்கூடக் கொடுக்கவில்லையென்றால் அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும் சுதந்தரமும்? எனவே அன்புமணியும் முதல்வராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.
பொன்னான வாக்கு – 06
எனக்கு காந்தியை நினைக்கும்போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வருகிறது என்று யாரோ சொன்னதைச் சிறு வயதில் படித்த நினைவிருக்கிறது. அந்த யாரோ யார் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் தோன்றியபாடில்லை. பிரபல பொன்மொழிகளை எழுதும் திரு. யாரோவாகத்தான் அவர் இருக்கவேண்டும். ஆனால் எனக்கு காந்தியை நினைத்தால் இன்னொருத்தர் ஞாபகமெல்லாம் வருவதில்லை. மு.க. ஸ்டாலினை நினைத்தால்தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸின்...
பொன்னான வாக்கு – 05
சாமி படத்தில் கோட்டா சீனிவாசராவ் ஒரு வசனம் சொல்லுவார். ‘அவன் பேசும்போது காது ஆடிச்சி, பாத்தியாவே? அவன் நம்ம சாதிக்காரப் பயதாவே.’ இந்த ஒருவரியை ரொம்ப நாள் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். யானைக்குக் காது ஆடும். தேடினால் வேறு ஒன்றிரண்டு மிருகங்கள் தேறலாம். யாராவது நரம்புக் கோளாறு உள்ளவர்களுக்குக் காது கொஞ்சம்போல் ஆடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்கள் அத்தனை பேருக்கும்...
பொன்னான வாக்கு – 04
எனக்கு ஒரு சுயேச்சை நண்பர் இருக்கிறார். அதாவது, எந்தத் தேர்தல் வந்தாலும் பிராந்தியத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்பவர் அவராகத்தான் இருப்பார். நித்ய சுயேச்சை. தேர்தலில்தான் அவர் சுயேச்சையாக நிற்பாரே தவிர அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரர். அவர் அனுதாபியாக உள்ள அந்தக் கட்சி அவருக்கு சீட்டுக் கொடுப்பதென்றால் அது அன்புமணி முதல்வராகி, சரத்குமார் பிரதமரான பிறகுதான் நடக்கும். ஆனால் நண்பரோ எனக்கு...
பொன்னான வாக்கு – 03
இந்த யாஞ்யவல்கியர் ஆரியரா? திராவிடரா? ஒரு காலத்தில் இவர் சாரு நிவேதிதாவின் இலக்கிய பார்ட்னராக இருந்தவர். ஆனால் அதனாலேயே திராவிடர் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்திவிட முடியாது. மூன்றாம் நூற்றாண்டு குப்தர்கள் காலத்தில் இவரது ஸ்மிருதி (இரானியல்ல.) ரொம்பப் பிரபலமாக இருந்திருக்கிறது. ஸ்மிருதி என்றால் தருமம். மனு தருமம் மாதிரி இது ஒரு தருமம். கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு சுலோகங்கள். பெரும்பாலும் மனு...
பொன்னான வாக்கு – 02
ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் கோடம்பாக்கத்திலிருந்து வீடு மாற்றிக்கொண்டு வேறொரு பிராந்தியத்துக்குக் குடி வந்தேன். வந்ததிலிருந்து எனக்கு இருந்த ஒரே பெரும் பிரச்னை முகவரிச் சான்று. இந்த அரசாங்க ஆபீசுகளில் தன் விவர மாறுதல்களைச் செய்வது என்பது கோடி குட்டிக்கரணங்களை ஒரே மூச்சில் போடுவதைக் காட்டிலும் கஷ்டமானது. நாம் ஒரு விவரத்தை மாற்றப் போனால் அதற்கு அவர்கள் நாலு அடையாள அட்டைகளை எடுத்து வரச் சொல்லிக்...
பொன்னான வாக்கு 01
திங்கள்கிழமை என்றால் ஏழரை ஒன்பது ராகு காலம். வாக்குச் சாவடிகளை ஏழு மணிக்கே திறந்துவிட்டால் உத்தமம். கேலண்டர்க்காரன் அன்றைக்கு என்னமோ சூன்ய திதி என்றுவேறு போட்டிருக்கிறான். சிம்மத்துக்கோ ரிஷபத்துக்கோ சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையர் ஶ்ரீரங்கம் பஞ்சாங்கத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தேதி அறிவித்திருக்கலாமோ? ஈஸ்வரோ ரக்ஷது.