வலை எழுத்து

உறவே பயம்

பலகாலமாக எனக்கு உறவுக்காரர்களாக இருப்போரில் சிலர் கூடி வாட்சப்பில் ஒரு குழு ஆரம்பித்தார்கள். உறவுக்காரர்களிலேயே உத்தமனான ஒரு அயோக்கியன் என்னை அந்தக் குழுவில் சேர்த்துவிட்டான். இன்னொரு பரம அயோக்கியன் என் மனைவியையும் அதே குழுவில் சேர்த்துத் தொலைத்தான். மேற்படி வாட்சப் குழுவானது ஆரம்பத்தில் மிகவும் போரடித்தது. கூடி கும்மியடிக்கும் அத்தனை பிரகஸ்பதிகளும் தம்மை எம்பெருமானார் ராமானுஜரின் செகண்ட் எடிஷன்...

சிங்கிள் டீ

ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.

விருது மறுப்பு

ஜெயமோகன் பத்ம விருதை மறுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் போல் தமிழ்ச்சூழல் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்விருதைப் பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் அவர். ஆயினும் காழ்ப்புக் கசடுகளை மனத்தில் கொண்டு இதனை மறுத்திருக்கிறார்.

திறமையில் வாடிய கலைஞன்

மணிக்கொடி ரைட்டர்ஸ மொத்தமா ஒரு தடவ படிச்சிரு. அசோகமித்திரன மனப்பாடம் பண்ணு. சுந்தர ராமசாமிய படிச்சிண்டே இரு. அடுத்த ஜெனரேஷன்ல நாஞ்சில்நாடன் முக்கியம். லவ் பண்ற ஐடியா இருந்தா மட்டும் வண்ணதாசன படி. தோப்பில் மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. முடிஞ்சா படிச்சிப் பாரு. லேங்குவேஜ் கொஞ்சம் டஃப். ஆனா செம மண்டை அது. நமக்குத் தெரியாத வேற ஒரு லைஃப போர்ட்ரெய்ட் பண்றாரு. மாமல்லன் ஒரு காலத்துல என் ஃப்ரெண்டுதான்...

அஞ்சலி: ம.வே. சிவகுமார்

  தாம்பரத்தில் இருந்த சிவகுமார் வீட்டு மாடியில் தனியே ஒரே ஓர் அறை உண்டு. பத்துக்குப் பத்தோ பத்துக்குப் பன்னிரண்டோ. சிறிய அறைதான். அந்த அறையில் இரண்டு புத்தக அலமாரிகளும் ஒற்றைக் கட்டிலொன்றும் கொடகொடவென்று ஓடும் மின்விசிறி ஒன்றும் இருக்கும். அவரது டேபிள் நிறைய எழுதிய தாள்களை மட்டுமே பார்த்த நினைவு. உதிர்ந்த வேப்பம்பழங்கள்போல் குண்டு குண்டான கையெழுத்து அவருக்கு. நாலு வரி எழுதுவார். ஏதாவது தப்பு...

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2015

தமிழில் கிடைக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் அனைத்துக் கதைகளையும் இந்த ஆண்டு வாசித்து முடித்தேன். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்திருந்தாலும் இப்படி மொத்தமாகப் படித்தது மகத்தான அனுபவம். பல கதைகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் வந்தது. நீயெல்லாம் ஏண்டா எழுதற என்று திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்ள நேர்ந்தது. இந்த உலகில் உண்மையைக் காட்டிலும் அழகானது வேறில்லை. அதை அப்பட்டமாக...

பழைய உறவு

மனிதன் பழக்கத்தின் அடிமை என்பதுதான் எத்தனை உண்மை! என் மேக் புக் ஏருக்கு என்னவோ ஆகிவிட்டது. கடந்த இரு தினங்களாக அது வேலை செய்யவில்லை. முதலில் T என்ற ஒரு கீ மட்டும் இயங்காதிருந்தது. அதன்மீது ஏறி உட்கார்ந்தால்தான் எழுத்து வரும் என்பது போல. குத்து குத்தென்று குத்திப் பார்த்ததில் மொத்தமாகவே கீ போர்ட் பழுதாகியிருக்கவேண்டும். இப்போது டைப் செய்ய ஆரம்பிக்கும் முன்பே – அதாவது மேக்கைத் திறந்த உடனேயே...

இறுதிச் சடங்கு – விவாதங்கள்

இறுதிச் சடங்கு சிறுகதை சில விவாதங்களைக் கிளப்பியிருப்பதை அறிந்தேன். சிறுகதைகளைப் பொருட்படுத்தி விவாதிப்போர் இன்னும் இருப்பதே ஆசுவாசமளிக்கிறது. நண்பர் ஆர்வி இந்தக் குறிப்பை அனுப்பியிருந்தார்.நண்பர்களின் கருத்துகளோடு உடன்படவோ முரண்படவோ நான் விரும்பவில்லை. நான் சொல்ல நினைத்தது இதனைத்தான் என்று மைக் பிடிப்பதைக் காட்டிலும் அவலம் வேறில்லை. வாசகர்களுக்கு ஒரே ஒரு குறிப்பை மட்டும் நான் தரலாம். இந்தக்...

இறுதிச் சடங்கு

சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?
யெஸ். தேங்ஸ். ஆனால் ஊரறிய. எனக்கு பேப்பரில் போட்டோ வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டும். பெற்றோருக்குத் தெரியவேண்டும். உறவினர்களுக்கு அப்புறம்.
அவன், அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புன்னகை போல் ஒன்று வந்த மாதிரி இருந்தது. ஆனால் முழுதாக இல்லை. ஆல்ரைட். சொல்லிவிடுவோம்.

கல்கியும் நானும்

இந்தாங்க சார். தலையங்கம் ரெடி. படிச்சிப் பாருங்க. சரியா இருந்தா வெச்சிக்கங்க. எதுனா சேக்கணும்னு தோணிச்சின்னா சேருங்க. பெரிசா இருக்குன்னு தோணிச்சின்னா வெட்டிக்கங்க. நியாயமாக எனக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அரிச்சுவடி கற்கக் கல்கிக்குப் போய்ச்சேர்ந்திருந்த காலம். யார் என்ன எழுதி அனுப்பினாலும் நாலு வரியையாவது அடித்துவிட்டு நான் எழுதிச் சேர்ப்பதில் ஒரு...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!