தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் மூன்று மிகப்பெரிய மாயைகளில் தவறாமல் விழுகிறான். 1. அன்லிமிடெட் டாக் டைம் 2. அன்லிமிடெட் டேட்டா 3. 1டிபி க்ளவுட் ஸ்டோரேஜ் நாம் பேசிக்கொண்டே இருப்பதில்லை. நாம் படம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. நாமே ஏறி உட்கார்ந்தாலும் 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிரம்பாது. அறிவு உணரும் இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கம் வந்துவிடுகிறது. தவறாமல் தவறு செய்துவிடுகிறோம். மிகவும்...
அருட்செல்வப் பேரரசனின் வால்மிகி ராமாயண மொழிபெயர்ப்பு
அருட்செல்வப் பேரரசன் வால்மிகி ராமாயணத்தை மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரது முழு மகாபாரதம் (கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்) ஒன்றுதான் இணையத்தில் நான் முழுதாக வாசித்த ஒரே தொடர். எளிய, நேர்த்தியான, சமகாலத் தமிழைத்தான் அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். எங்குமே உறுத்தல் இல்லாமல் வாசிக்க முடியும். நான்கு...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 32)
சூனியனின் மிக நுண்ணிய விவரங்களுடனான கதைகளை வெண்பலகையில் வாசிக்கையில் வெகுசுவாரசியம். இந்த அத்தியாயத்தில் முல்லைக்கொடியின் கதையையும், அவளுக்கும் கோவிந்தசாமிக்குமான உறவு எனச் சூனியன், கோவிந்தசாமிக்கு இன்னொரு கல்யாணமும் செய்து வைத்திருக்கிறான். வழக்கம்போல அதையெல்லாம் படித்துவிட்டு கோவிந்தசாமி வெகுவாய் அலறுகிறான்.மேலும் வாகனத்தில் இருந்தவர்களின் கருத்துகள் அவனை மேலும் கலங்கடிக்கின்றன. கோவிந்தசாமி நீல...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 33)
இரவு ராணி என்னும் மந்திர மலரை பறித்துவந்து சாகரிகாவை கவர நீலவனத்துக்கு கோவிந்த சாமி சென்று கொண்டிருக்கையில், சூனியன் செம்மொழிப்பிரியாவுக்கும் அதுல்யாவுக்கும் ஆளுக்கொரு டாஸ்க் கொடுத்திருக்கிறான். கோவிந்தசாமியுடனான டாஸ்க்கை அதுல்யாவுக்கும், நிழலுக்கான டாஸ்க்கை செம்மொழிப்பிரியாவுக்கும் தந்திருக்கிறான் என அறிகிறோம். நிழலுடனான டாஸ்க்கை நிறைவேற்ற செம்மொழிப்பிரியா கிளம்புகிறாள். வழியில் அவள் நீலவனத்தின்...
தீவிரவாதியாக வாழ்வது எப்படி?
மாயவலை மொத்தம் 1300 பக்கங்கள். ஆறு வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் இரண்டு வருடங்கள் எழுதினேன். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தீவிரவாத இயக்கங்களின் ட்விட்டர் கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் தொடர்புடைய நபர்களின் சொந்தப் பக்கங்களை தேடி ஃபாலோ செய்தது என்னைப் பொறுத்தவரை பெரிய சாகசம். அன்று இது அவ்வளவு எளிய காரியமல்ல. எப்படி என்று...
ஒரு சமர்ப்பணப் பிரச்னை
ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 31)
கதையில் வரும் அனைவருமே இப்போது வனத்தை நோக்கிப் படையெகுழுவைத் தொடர்ந்துடுக்கின்றனர். ஒரே வித்தியாசம், ஒவ்வொருவருக்கும் வனத்திற்கு செல்லும் காரணமானது வேறுபடுகிறது. சூனியனின் குழு மற்றும் சாகரிகாவின் நோக்கிப் படையெடுக்கின்றனர் இப்போது கோவிந்தசாமியும் வனத்திற்கு செல்கிறான். அவனைக் கடைசியாக நாம் மருத்தவமனையில் பார்த்தோம், அங்கே அவனுக்கு ஒரு அன்பான நர்ஸ் ஒருத்தி, கோவிந்தசாமியின் கதையைக் கேட்டு ஆறுதல்...
கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 6)
இந்த அத்தியாத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் மக்கள் இந்த நீல நகருக்குள் இடம் பெயர்ந்து வந்ததை தான் சொல்கிறாரோ என்று வாசிக்க ஆரம்பித்தேன் பிறகு தான் தெரிந்தது இது மக்கள் இடம்பெயர்ந்தது அல்ல மக்களின் உறுப்புகள் இடம் பெயர்ந்து இருக்கிறது என்று. இது சற்றே வித்தியாசமான சிந்தனைதான். கற்பனைக்கு எல்லையில்லை என்பதால் நாமும் அதே சிந்தனையுடன் பயணிப்போம்…. இந்த நீல் நகரம் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது...
கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 5)
சூனியக்காரனுக்கு கோவிந்தசாமியை மிகவும் பிடித்துப்போனது அதற்குக் கரணம் எல்லாம் இல்லை முதலில் சந்தித்த ஒரு ஆள் என்பதாலேயே அவனுக்கு இவனைப் பிடித்துவிட்டது. கோவிந்தசாமியைப் பற்றிக் கவலைப்பட ஒரு ஆள் அதுவும் சூனியக்காரன் இருக்கிறான் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. ஆனால் இந்த சூனியக்காரன் நாம எதுவும் சொல்லவேயில்லை இருந்தாலும் நம்மைப் பற்றிய முழுவிவரமும் தெரிந்து வைத்திருக்கிறான் அதுதான்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 32)
முல்லைக்கொடி எப்படி பிறக்கும்போதே தேசியவாதியாக பிறந்தாள் என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அத்தியாயம். இன்னொரு தேசியவாதியான கோ.சாமியை அவள் எப்படி சந்தித்தாள் அவர்களுக்குள் என்ன நிகழ்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யம். இந்த கோ.சுவாமி அதுல்யாவை மட்டும்தான் திருமணம் செய்திருக்கிறான் என நினைத்தால் இப்போது இன்னுமொரு கல்யாணம் வந்து பல்லிளிக்கிறது. அதுவும் அதற்காக அவன் சொல்லும் கதையும் அதன் பின்னர்...