Categoryபயணம்

தனியா-வர்த்தனம் 1

கொஞ்சம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது. சரி, போகிற தூரத்தில் பொழைப்பாற்றலாமே என்று ரயிலில் டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். விலை விகிதத்தில் விமானத்துடன் பெரிய வித்தியாசமில்லாத முதல் வகுப்புப் பெட்டி. இரண்டு இரவுகள், ஒரு பகல். ஸ்டேஷன் ஸ்டேஷனாக விதவிதமான இந்தி கேட்கலாம், வடவர் சப்பாத்தி சாப்பிட்டு ஹரே பஹ்ஹ்ய்யா என்று அடி வயிற்றிலிருந்து கூப்பிட்டுப் பார்க்கலாம், பத்தினியும் பத்திரியும்...

மலேசியப் பயணம்

சிங்கப்பூரில் நடத்திய அதே பயிலரங்கத்தை மலேசியாவிலும் நடத்த, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அழைத்திருந்தார்கள். அதே இரண்டு நாள். அடுத்த சனி, ஞாயிறு. பத்ரி, சிங்கப்பூரிலிருந்து பஸ் மார்க்கமாக மலேசியா சென்றுவிட, நான் சென்னை வந்து, இடைப்பட்ட நான்கு நாள்களில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி முடித்துவிட்டு, இங்கிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றேன். மலேசியன் ஏர்லைன்ஸ்காரர்கள் உபசரிப்புத்...

சிங்கப்பூர் பயணம் 6

திங்களன்று சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் தமிழாசிரியர் குழுவினருக்காக [இவர்கள் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். டெபுடேஷனில் வந்து போகிறவர்கள்.] ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்ட பயிலரங்கம்தான் போலிருக்கிறது. ஆனால் பத்ரி செய்த சதியால் இந்த விவரம் எனக்கு முந்தைய தினம் இரவு வரை தெரியாமலேயே இருந்திருக்கிறது. போகிற வழியில், எது குறித்த பயிலரங்கம்...

சிங்கப்பூர் பயணம் 5

முதல் நாள் செய்த துரோகத்துக்கு மறுநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும்பொருட்டு, பத்ரி அன்று காலை எனக்கு முன்னரே எழுந்து ஆயத்தமாகியிருந்தார். உணவு அரங்கு உலக உணவுகளால் நிரம்பியிருந்தது. கூடை நிறைய பிரெட். எடுத்து டோஸ்ட் செய்து தர ஒரு சீனப்பெண். அருகே பாத்திரத்தில் வெண்ணெய்க் கட்டி, ஜாம் வகைகள். சாலட்டுகள். சற்றுத் தள்ளி மெகா சீரியல் எழுத்தாளர்களுக்கான சீரியல் ஃபுட். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும்...

சிங்கப்பூர் பயணம் 4

சிங்கப்பூரில், எழுத்தாளர்கள் ஓரிருவரும் எழுதுவோர் ஒரு சிலரும் எழுதும் விருப்பமுள்ளவர்கள் சற்றே அதிகமாகவும் இருக்கிறார்கள். எடிட்டிங் குறித்த பயிலரங்கமென்றாலும் எழுத்தாளர்கள்தாம் பெருமளவில் கலந்துகொள்ளப் பதிவு செய்திருந்தார்கள். எடிட்டிங் என்றால் என்னவென்று அறிந்த இரண்டு பேர் இருந்தார்கள். அதிலொருவர் கல்வித்துறையைச் சார்ந்தவர். பொதுவாக எடிட்டிங் என்பது என்ன என்று விளக்குவது மிகவும் பேஜாரான காரியம்...

சிங்கப்பூர் பயணம் 3

சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதுமே பத்ரி தன் மொபைல் போனில் நேரத்தை மாற்றிக்கொண்டதைப் பார்த்தேன்.  நான் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டாம் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். கடிகாரத்தில் இந்திய நேரத்தையே வைத்திருப்பது. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் இரண்டரை மணி நேரம் கூட்டிக்கொள்வது என்பது முடிவு. அதன்படியே முதல் நாள் இரவு இரண்டே முக்காலுக்குப் படுத்தபோது சரியாக நாலு மணிக்கு அலாரம் வைத்தேன்...

சிங்கப்பூர் பயணம் 2

சிங்கப்பூர் சாலைகள் அழகானவை. சீரானவை. குண்டு குழிகளற்றவை. இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டும் பயணம் செய்துகொண்டுமே இருக்கலாம். பிரதான சாலைகள் மட்டுமல்ல. சந்து பொந்துகளுக்கும் அங்கே சமநீதி கிடைத்திருக்கிறது. என்று தொடங்கி ஒரு வியாசம் எழுதுவது என் நோக்கமல்ல. எனக்கென்னவோ சாலைகள் அந்த தேசத்தின் ஒரு குறியீடாகத் தென்படுகின்றன. ஒழுங்கினால் உருப்பெற்ற தேசம் அது. அது இன்றளவும் நீடித்திருப்பதன் வெளிப்படையான...

சிங்கப்பூர் பயணம் 1

சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி