Categoryபுத்தக அறிமுகம்

கொத்தனாரின் நோட்டுசு

என் நண்பர் இலவசக் கொத்தனாரின் இலக்கணப் புத்தகம் வெளியாவதில் எனக்குப் பிரத்தியேக மகிழ்ச்சி. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டவன் நான். அந்த ஆசாமியைப் பிடித்து தமிழ் பேப்பரில் எழுத வைத்தபோது முதலில் பலபேர் சந்தேகப்பட்டார்கள். இலக்கணமெல்லாம் யார் படிப்பார்கள் என்றார்கள். நல்லவேளை, ஏன் படிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. கொத்தனாரின் புத்தகத்துக்குச் சில சிறப்புகள் உண்டு...

எனது பர்மா குறிப்புகள்

சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், செ. முஹம்மது யூனுஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் ‘எனது பர்மா குறிப்புகள்’. பொதுவாக இம்மாதிரியான தலைப்புகள் உள்ள புத்தகங்களை நான் எடுக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியாது. என் பல புத்தகத் தேர்வுகளைத் தலைப்புகள் தீர்மானித்து வந்திருக்கின்றன. இதன் காரணம் பற்றியே ஜேஜே சில குறிப்புகளை, அதைப் பார்த்த நாள் தொடங்கிப் பலகாலம்...

சர்ச்சைக்குள் ஒரு சவாரி

2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா. ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று...

லிங்கு சாமி!

ஒருவழியாக, இப்போது வரப்போகிற புதிய புத்தகங்களுக்கு என்னெச்செம் தளத்தில் லிங்க் போட்டுவிட்டாற்போலிருக்கிறது. நல்லவர்கள் நீடுவாழ்க. என்னுடைய இந்தாண்டுப் புத்தகங்களை என்.எச்.எம். தளத்தில் பார்வையிடவும் வாங்கவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும். 1. ஆர்.எஸ்.எஸ் – மதம் மதம் மற்றும் மதம் 2. காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு 3. அலகிலா விளையாட்டு 4. கொசு 5. உணவின் வரலாறு 6. புகழோடு வாழுங்கள் என்னுடைய பிற...

பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!

ஊரில் யாருக்காவது கல்யாணமானால், காலக்ரமத்தில் ஒரு குழந்தை எதிர்பார்க்கலாம், நியாயம். தாலி கட்டி முடித்துவிட்டு நேரே போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து க்ளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறை எழுதுகிற ஜென்மத்தை அறிவீர்களா? சென்ற வருடம் கிளுகிளு ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையை எழுதி புத்தகக் கண்காட்சியைக் கலக்கிய முகில் இந்த வருடம் தருவது கிளியோபாட்ரா. எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவாணி என்கிற அற்புதமான...

மகாத்மா காந்தி கொலை வழக்கு

மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds