Categoryஅனுபவம்

உறங்காத அலை

இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...

இது போதும்

தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் மூன்று மிகப்பெரிய மாயைகளில் தவறாமல் விழுகிறான். 1. அன்லிமிடெட் டாக் டைம் 2. அன்லிமிடெட் டேட்டா 3. 1டிபி க்ளவுட் ஸ்டோரேஜ் நாம் பேசிக்கொண்டே இருப்பதில்லை. நாம் படம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. நாமே ஏறி உட்கார்ந்தாலும் 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிரம்பாது. அறிவு உணரும் இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கம் வந்துவிடுகிறது. தவறாமல் தவறு செய்துவிடுகிறோம். மிகவும்...

தீவிரவாதியாக வாழ்வது எப்படி?

மாயவலை மொத்தம் 1300 பக்கங்கள். ஆறு வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் இரண்டு வருடங்கள் எழுதினேன். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தீவிரவாத இயக்கங்களின் ட்விட்டர் கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் தொடர்புடைய நபர்களின் சொந்தப் பக்கங்களை தேடி ஃபாலோ செய்தது என்னைப் பொறுத்தவரை பெரிய சாகசம். அன்று இது அவ்வளவு எளிய காரியமல்ல. எப்படி என்று...

ஐந்து நாவல்களின் புதிய மறு பதிப்புகள்

என்னுடைய ஐந்து நாவல்களின் புதிய மறுபதிப்புகள் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் வெளியாகின்றன. முன் பதிவு செய்வதன் மூலம் விலையில் இருபது சதம் தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கீழே உள்ளவை புதிய பதிப்புக்கான அட்டைப் படங்கள். அனைத்தையும் வரைந்தவர் ராஜன்.
இந்த ஐந்து நாவல்களையும் என்னுடைய பிற நூல்களையும் ஜீரோ டிகிரி இணையத்தளத்தின் மூலம் வாங்க இங்கே செல்லவும்.

 

டாஞ்ஞெட்கோ என்னும் இம்சை

இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஓர் இணையத்தளம் இருக்கிறதல்லவா? கவிக்கோ, கொக்கோ போல அதன் பெயர் டாஞ்ஞெட்கோ. அதில்தான் பல வருடங்களாக மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு முறை நான் லாகின் செய்யும்போதும் கடவுச் சொல் தவறு என்று சொல்லும். சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடும். அதுவும் ஒரு சங்கேதக் குறி போலவென நினைத்துக்கொண்டுவிடுவேன். இந்தப் பல்லாண்டு கால வழக்கத்தை...

அழைக்காதே.

ஒரு நூதனமான வழக்கம் உருவாகி வருவதைக் காண்கிறேன். முன் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் திடீரென்று மெசஞ்சரில் வருகிறார். ‘என் சிறுகதைத் தொகுப்பு / கவிதைத் தொகுப்பு / நாவல் வெளியாகியிருக்கிறது. உங்கள் முகவரி தந்தால் கொரியரில் அனுப்பி வைக்கிறேன்’ என்று ஒரு வரி மெசேஜ் அனுப்புகிறார். நான் பதிலளிக்காவிட்டால் மீண்டும் அதே மெசேஜ் மறுநாள் வரும். அப்போதும் பதில் சொல்லாவிட்டால், ‘ஒரு...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds