பள்ளி நாள்களில் தற்செயலாகக் கேள்விப்பட்ட ஒரு தகவல் எனக்கு இப்போது நினைத்தாலும் வியப்பளிக்கும். மங்கோலியர்கள் குளிப்பதே இல்லை என்பதுதான் அது. என்னால் ஒருநாள்கூடக் குளிக்காமல் இருக்க முடியாது. சிலர் தினமும் இருவேளை குளிப்பார்கள். அந்தளவுக்கு இல்லை என்றாலும் காலை எட்டு, எட்டரை மணிக்குள் குளித்துவிடாவிட்டால் நான் செத்தேன். அது ஒரு தகாத காரியம் என்பதைப் போலவும், உலகின் மொத்தத் தூசும் மாசும்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22
1981ல் நாவலூரில் ஒரு வீடு விலைக்கு வந்தது. இன்றைய பழைய மகாபலிபுரம் சாலையில் நாவலூர் பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்துக்குப் பத்தடி தூரத்தில் அமைந்திருந்த வீடு. முக்கால் கிரவுண்டுக்குச் சிறிது அதிகமான நிலம். சுற்றிலும் அடர்த்தியாகத் தென்னை மற்றும் மா மரங்கள். மரங்களின் இடைவெளிகளில் கீரைப் பாத்திகளும் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளிச் செடிகளும் ஒரு அவரைப் பந்தலும் மிகச் சிறிய அளவில் சிறு...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21
சரியான உத்தியோகம் அமையாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்களில் என்னோடு சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்த சக சரியான வேலை அமையாத நண்பர்களில் பலர், எனக்குக் கல்கியில் வேலை கிடைத்த பிறகு என்ன காரணத்தாலோ மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினார்கள். இத்தனைக்கும் எங்கள் வட்டத்தில் யாருக்கு நல்ல வேலை கிடைத்தாலும் அவர்கள் அடுத்தவர்களைக் கைதூக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பது என்று தீர்மானம் செய்திருந்தோம்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 20
பெரியதொரு மழையைப் போல எனக்கு மகிழ்ச்சி தருவது வேறில்லை. ஆனால் பெரிய மழையை மொத்தமாக இதுவரை ஏழெட்டு முறைதான் பார்த்திருப்பேன். கிராமங்களில் இருந்து முதல் முறை வருபவர்களுக்கு நகரம் எந்தளவு பிரமிப்பையும் பரவசத்தையும் தருமோ, அதைப் போலத்தான் மழை எனக்கு. புயல் மையம் கொண்டிருப்பதாகச் செய்தியில் சொல்லிவிட்டாலே மனத்துக்குள் மேகம் திரளத் தொடங்கிவிடும். அனைத்தையும் மறந்தவிட்டு மழையைக் குறித்து யோசிக்க...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 19
முப்பது வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைப் பணியில் இருந்தபோது இரவில் சென்னை என்றொரு பத்தித் தொடருக்கு யோசனை வந்தது. (பிறகு இது பல பத்திரிகைகளில் பலநூறு விதமாக வெளிவந்து மக்களுக்கு அலுத்தே விட்டது.) சுமார் மூன்று மாத இடைவெளியில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை இரவு நேரங்களில் திருஞானம் என்ற புகைப்படக்காரருடன் திரும்பத் திரும்பச் சுற்றி வந்தேன். இரவுப் பொழுதுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறும்;...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 18
மேற்கு மாம்பலத்தைக் குறித்து இன்னும் சிறிது சொல்லலாம். நினைவு தெரிந்த நாளாக இந்தப் பகுதியை ‘முதியவர்களின் பேட்டை’யாகத்தான் மனத்துக்குள் உருவகம் செய்து வைத்திருக்கிறேன். அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்று எனக்குப் புரிந்ததில்லை. மாம்பலத்தின் எந்த வீதிக்குள் நுழைந்தாலும் எதிர்ப்படுபவர்கள் குறைந்தது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள். கடைகளில், கிளினிக்குகளில், கோயில்களில்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 17
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரிய கௌடா சாலையைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அங்குள்ள அயோத்தியா மண்டபம் மிகவும் புகழ்பெற்ற இடம். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். பிராந்தியத்துக்கு யாராவது சைவப் பெரியவர்கள், மகான்கள், துறவிகள் வருகை தந்தால் கண்டிப்பாக அயோத்தியா மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி இல்லாமல் இராது. அப்படி யாரும் வராத நாள்களில் சொற்பொழிவுகள், பாட்டுக் கச்சேரி, பஜனை என்று ஏதாவது ஒன்று எப்போதும்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 16
நுங்கம்பாக்கம் அபெக்ஸ் ப்ளாசாவின் தரையடித் தளத்தில் இருந்த லேண்ட் மார்க் புத்தக அங்காடி ஒருநாள் இழுத்து மூடப்படும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்த எவ்வளவோ நிறுவனங்கள் உலகெங்கும் உண்டு. ஒவ்வொரு தனி மனிதனும் தனது பிரத்தியேகமான மகிழ்ச்சிக்கென்று சிலவற்றைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதும் எதிர்பாராத நேரத்தில் அது கைவிட்டுப் போவதும் இயல்பானவைதாம். ஆனால்...