தையூர் பண்ணையாரின் தோப்புக்குள் சுவரேறிக் குதித்து பத்மநாபன் பம்ப் செட் கிணற்றை அடைந்தபோது அவனது நண்பர்கள் ஏற்கெனவே கிணற்றுக்குள் குதித்திருந்தார்கள். ‘ஏண்டா லேட்டு?’ என்றான் பனங்கொட்டை என்கிற ரவிக்குமார். பண்ணையார் கிணற்றை நாரடிப்பதற்காகவே திருவிடந்தையிலிருந்து சைக்கிள் மிதித்து வருகிறவன். ‘ட்ரீம்ஸ்ல இருந்திருப்பாண்டா. டேய் குடுமி, லவ் மேட்டரெல்லாம் நமக்குள்ள மட்டும்தாண்டா பேசிக்கணும்...
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 2
இது ஒரு சதி. கடவுள் அல்லது சாத்தானின் அதிபயங்கரக் கெட்ட புத்தியின் கோரமான வெளிப்பாடு. இல்லாவிட்டால் ஃபர்ஸ்ட் ரேங்க் பன்னீர் செல்வம் ஏன் வளர்மதியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரவேண்டும்? பத்மநாபனுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. பீமபுஷ்டி லேகிய விளம்பரத்தில் தோன்றும் புஜபலபராக்கிரமசாலி சர்தார் தாராசிங்கைப் போல் தன் சக்தி மிகுந்து பன்னீரைத் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய முடிந்தால் தேவலை...
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 1
அவசியமான ஒரு சிறு முன்னுரை: வாசகர்களிடையே தொடர்கதை வாசிக்கும் ஆர்வம் அநேகமாக வடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். தொடர்கதைகளை உற்பத்தி செய்து போஷித்து வளர்த்த பத்திரிகைகள் இன்று அவற்றை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. சம்பிரதாயத்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில தொடர்கதைகள் வருகின்றன. ஆனால் யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை – நான் படிப்பதில்லை. இந்தக் கதையை நான் கல்கியில் தொடராக...
மொட்டைமாடியில் விக்கிபீடியா
இன்று [சனிக்கிழமை 13.6.2009] மாலை 6 மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். சாத்தியமுள்ள அனைத்து சென்னைவாழ் நண்பர்களையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். உபயோகமான விஷயம். இது பற்றி ரவிசங்கர் அனுப்பியிருந்த குறிப்பு: இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன...
ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.
சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை. அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக...
32
சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் பதில்களும்: 1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா? இது என் சொந்தப்பெயர். பத்திரிகை நாள்களில் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என் சொந்தப்பெயரில் எழுதுவதே எனக்குத் திருப்தி அளிக்கிறது. யாராவது கூப்பிடும்போது ராகவன் என்று கூப்பிடாமல் பாரா என்றால்தான் சரியாக பதில் சொல்கிறேன் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்...
தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்
யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த மாட்டேன். எனவே செப்பனிடும் பணியில்...
ஆத்தா உன் கோயிலிலே!
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது. கன்னித்தமிழுக்குக் கல்யாணம் செய்து வைத்து அன்னைத் தமிழாக்கி, அவள் பல பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டு, கிட்டத்தட்ட ரிடையர் ஆகி வீட்டில் தொலைக்காட்சி...
இரண்டு முக்கிய அறிவிப்புகள்
1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
– செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை]
2. பழ. நெடுமாறன் அறிக்கை.
இது அபத்த அரசியல்களின் நேரம்.
முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?
மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம். தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு. கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று...